728x90 AdSpace

<>
Latest News
Monday, 7 October 2019

கிளிநொச்சியில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்ய முற்பட்ட சமாதான நீதவான் உட்பட இருவர் கைது!

கிளிநொச்சி கண்டாவளை பெரியகுளம் பகுதியில் 11 வயது சிறுமியை துஸ்பிர யோகம் செய்ய முற்பட்ட சமாதான நீதவான் உட்பட இருவரை கிளிநொச்சி பொலஸார் கைது செய்யதுள்ளனர். 

கடந்த சனிக்கிழமை மாலை ஏழு மணியளவில் தனியார் கல்வி நிலை யத்திற்குச் சென்றுவிட்டு பேருந்தில் வந்த சிறுமி கண்டாவளை பிரதேச செயலகம் அருகில் இறங்கி வீடு செல் வதற்கு நடந்த சென்ற போது வீதியில் இருபுறமும் உள்ள பற்றைக்குள் மறைந்திருந்த பெரியகுளத்தைச் சேர்ந்த சமாதான நீதவான் குறித்த சிறுமியை வாயை பொத்திப் பிடித்தபடி பற்றைக்குள் இழுத்துச் சென்றுள்ளார். 

அவருடன் பிறிதொரு நபரும் சென்றுள்ளார். இதன் போது குறித்து சிறுமி கதறி கூக்குரல் எழுப்பி இழுத்துச் சென்றவரின் கையை கடித்து விட்டு வீதிக்கு தப்பி யோடியுள்ளார். இதன் போது குறித்த சிறுமியின் சகோதரனும் அவ் வீதியால் பயணித்துள்ளார். 

இதனையடுத்து சிறுமியின் சகோதரன் அவர்களை தாக்குதவதற்கு விரைந்த போது ஒருவன் தப்பிச் சென்ற நிலையில் ஒருவரை தாக்கியுள்ளான். பின்னர் கிளிநொச்சி பொலிஸ் சிறுவர் பெண்கள் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்ட தோடு சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில் பொலிஸார் இன்றைய தினம் குறித்த சமாதான நீதவான் உட் பட இருவரையும் கைது செய்துள்ளனர் இருவரையும் நாளைய தினம் (செவ் வாய்க் கிழமை) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளனர். குறி த்த சமாதான நீதவான் அரசியல் கட்சி ஒன்றின் வட்டாரக் கிளையின் உறுப்பி னர் எனத் தெரிவிக்கப்படுகிறது
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கிளிநொச்சியில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்ய முற்பட்ட சமாதான நீதவான் உட்பட இருவர் கைது! Rating: 5 Reviewed By: Thamil