728x90 AdSpace

<>
Latest News
Friday, 18 October 2019

வடக்கில் போர் ஓய்ந்து ஒரு தசாப்தம் கடந்தும் தொடரும் உளவியல் யுத்தம்!

வடக்கில் யுத்த ஓய்வின் பின்னரான இன்றைய சூழலில் மரண ஓலங்கள் முற்றுப்பெற்று விட்டதாக மனநிறைவு அடையக்கூடிய சூழல் ஏற்படாத நிலையையே உணரக்கூடியதாக உள்ளது. 

வடக்கின் ஏதாவது ஒரு மூலையில் தின மும் இடம்பெறும் இளவயதினரின் தற் கொலைகளும், வன்முறைகளும், நீதி மன் றங்களில் நாளாந்தம் இடம் பெறும் விவா கரத்து வழக்குகளையும் பார்க்கும்போது ஆயுத யுத்தம் ஓய்ந்தா லும் உளவியல் யுத் தம் வடக்கு மக்களை ஆட்கொண்டுள் ளமை மழைவிட்டும் தூவானம் ஓயாத நிலையையே வெளிப்படுத்தி நிற்கின் றது.

 யுத்த காலத்தில் உறவுகளையும் உடைமைகளையும் இழந்து இடம்பெயர்ந்து நிர்க்கதியான நிலையில் தமது சொந்த கிராமங்களுக்கு திரும்பியுள்ள மக்கள் தமது வாழ்க்கையை சீர்ப்படுத்தும் போராட்டத்தின் போது ஏற்படுகின்ற தாக் கங்களும் தோல்விகளும் அவர்களை உளவியல் ரீதியாக பலவீனமானவர்க ளாக மாற்றியுள்ளது. 

 குறிப்பாக மீள்குடியேறிய மக்கள் தமது காணிகள் பறிபோனமை, அரைகுறை வீட்டுத்திட்டங்களை பூரணப்படுத்த பெறப்பட்ட கடன் சுமைகள், மாதாந்த கட் டுப்பணத்திற்கு வீட்டுப்பாவனைப் பொருட்களை கொள்வனவு செய்தமையி னால் ஏற்பட்ட நெருக்கடிகள், நுன்நிதி கடன்கள், உள்ளிட்ட பொருளாதார பிரச்சனைகளும் இளம்வயது திருமணம், 

இளவயது விதவை வாழ்க்கை, முன்னாள் போராளிகளுக்கான சீராகாத சமூக அங்கிகாரம், போரினால் மாற்றுத் திறனாளிகளாக ஆக்கப்பட்டவர்களின் இயங்குநிலை உள்ளிட்ட சமூக பிரச்சனைகளும் வாழ்க்கையில் பிடிப்பின் மையை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால் உளரீதியாக கடுமையாக பாதிப்படைந்தவர்களாக காணப்படுகின் றனர். இதில் மிகக்கொடுமையான விடயம் என்னவெனில் இளம் சமுதாயம் மிக அதிகமாக இந்த உளவியல் தாக்கத்திற்கு உள்ளானமையே. 

சரியான பொருளாதார பின்னணி இல்லாத குடும்பத்தை சார்ந்த இளைஞர்கள் படித்த படிப்பிற்கான வேலை சரியான நேரத்தில் கிடைக்காத காரணத்தினால் தமிழ் மூதாட்டி ஔவ்வையார் அவர்களால் மிக கொடியது என உருவகிக்கப் பட்ட இளைமையில் வறுமையை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள னர். 

இலட்சக்கணக்கான இளைஞர்கள் உள்ள வடக்கு மாகாணத்தில் குறைந்தது ஆயிரம் இளைஞர்கள் பணிபுரியக்கூடிய ஒரு தொழிற்சாலைகூட இல்லாத நிலையில் படித்து முடித்த இளைஞர்கள் வீதிகளில் நிற்பதோடு போதைப் பழக்கத்திற்கும் ஆளாவதோடு சிறுவயதிலேயே காதலித்து திருமணம் முடிக்கின்றனர். 

திருமணத்திற்கு பின் வீட்டுவாடகை உள்ளிட்ட வாழ்க்கைச்செலவை ஈடு செய்ய முடியாமல் கடன்படவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். கடன் சுமை அதிகரிக்கும்போது மன அழுத்தம் ஏற்படுவதனால் குடும்பத்தில் கருத்து முரண்பாடுகள் இடம்பெற்று குடும்ப வன்முறையாக மாறுவதுடன் கலாச்சார சீரழிவிற்கும் விவாகரத்திற்கும் இட்டுச்செல்கின்றது. 

இது அவர்களையும் அவர்களுக்கு பிறந்த குழந்தைகளையும் உளவியல் தாக் கத்திற்கு உள்ளாக்குகின்றது. போரின் போது குடும்ப தலைவர்களை இழந்து குடும்பத்தின் தலைமையை ஏற்றுள்ள 90% மான பெண்கள் ஏதோ ஒரு வகை யில் உளப்பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளமை புலனாகியுள்ளது, 

குறிப்பாக இந்த பெண்கள் வேலைக்கு செல்லும் இடங்களிலும் அவர்கள் வாழும் சூழலிலும் பாலியல் உணர்வு ரீதியான பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பதனால் உளவியல் தாக்கம் அவர்களை இயல்பாகவே பீடித்துவிடு கின்றது. 

இந்த பெண்களையே நுன்நிதி கடன் நிறுவனங்களும், குத்தகை நிறுவனங்க ளும் இலக்குவைத்து அவர்களை மேலும் மன அழுத்தங்குக்குள்ளாக்கு வதுடன் அவர்களின் பொருளாதார இயலாமையை தவறாக பயன்படுத்த முற்படுகின்றனர். 

இதனால் பாதிக்கப்பட பலர் தற்கொலை செய்துள்ளதுடன் சிலர் தவறான பாதைகளையும் தெரிவு செய்கின்றனர். அதைவிடவும் சிலர் புலம்பெயர்ந்து வாழும் உறவுகளின் உதவியை நாடும் போது அவர்களுக்கு உதவி செய்பவர்க ளில் சிலர் புலம்பெயர் கொடையாளிகள் என தம்மை அடையாளப்படுத்திக் கொள்வோர்.

 சில உதவிகளை வழங்கிவிட்டு அவர்களை தவறாக பயன்படுத்த முற்படுவது வெந்த புண்ணில் வேல் பாச்சுவது போன்று மென்மேலும் அவர்களிளை பாதிப் பிற்குள்ளாக்குகின்றது. 

இவ்வாறாக வடக்கு மாகாணத்தில் அதிலும் விசேட விதமாக வன்னியில் நேரடியாக போரில் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினரும் இன்றுவரை உளவி யல் ரீதியாக பலவீனமடைந்தவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர் அவர்க ளுக்கு உதவுகிறோம் அல்லது புனர்வாழ்வளிக்கின்றோம் என்ற பெயரில் குறிப்பிட்ட ஒருதொகைப் பணத்தை அல்லது தாம் விரும்பும் ஒரு பொருளை வழங்கிவிட்டு அனைவரும் யுத்தத்தினால் ஏற்பட்ட தாக்கத்திலிருந்து மீண்டு விட்டார்கள் என கருதுவது பொருத்தமற்றது. 

அதையும் தாண்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான உளநல சிகிச்சைகளை வழங்கி அவர்களை அவர்களுக்கே உணரச்செய்து அவர்களுக்கு நம்பிகையூட் டுவதன் மூலமே அவர்களை சாதாரண வாழ்கை முறைக்கு கொண்டுவர முடியும் என்பதோடு அவர்களில் உளநல குறைபாடுகளுக்கான காரணங் களையும் இனம்கண்டு அவற்றையும் தீர்க்க முற்பட வேண்டும். 

உதாரணமாக பொருளாதார நெருக்கடியில் உள்ள ஒருவருக்கு சீன பழ மொழி யான “ பசித்திருக்கும் ஒருவனுக்கு உண்பதற்கு மீனை வழங்குவதை விட அவனுக்கு மீன்பிடிக்க கற்றுக்கொடுப்பதே மேலானது” என்பதைப் போன்று பாதிக்கப்படவர்களின் உடனடித் தேவையை மட்டும் பூர்த்தி செய் வதை விட நீடித்து நிலைக்கக் கூடிய தொழில் வழிகாட்டல்களையும் அதற்கான மூலப் பொருட்களையும் வழங்க வேண்டும். 

அவற்றுடன் அவர்களை முழுமையாக மீட்டெடுக்க உளநல விருத்திக்கான சரியான ஆற்றுப்படுத்தல் செயற்திட்டமொன்றும் இன்றியமையாதது.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: வடக்கில் போர் ஓய்ந்து ஒரு தசாப்தம் கடந்தும் தொடரும் உளவியல் யுத்தம்! Rating: 5 Reviewed By: Thamil