கொத்மலை பகுதியிலுள்ள தமிழ் பாடசாலையொன்றில் 7 மாணவிகள் துஷ் பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாட சாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அதிபர் ஹெல் பொட நீதவான் முன்னிலையில் ஆஜ ர்ப்படுத்திய நிலையில் அவரை எதிர் வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறி யலில் வைக்குமாறு நீதவான் உத்த ரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த சில காலமாக மாணவிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வந்ததாக பெற்றோரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தகவலறிந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், மத் திய மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோனை சந்தித்து விடயங்களை தெளி வூட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தான் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கீர்த்தி தென்னக்கோன் இதன்போது உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.