728x90 AdSpace

<>
Latest News
Friday, 18 October 2019

தலைமையற்றுக் காணப்படும் தமிழ் சமூகம் சிறந்த முடிவொன்றினை எடுக்கவேண்டும்!

கிழக்கு மாகாண சர்வமதத் தலைவர்கள் ஒன்றியத்தினால் எதிர்வரும் ஜனாதி பதித் தேர்தல் தொடர்பாக தமது நிலைப்பாட்டினை தெழிவுபடுத்தும் செய்தி யாளர் சந்திப்பொன்று இன்று காலை திருகோணமலையில் இடம் பெற்றது.

ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த செய்தி யாளர் சந்திப்பில் எதிர்வரும் ஜனாதிப தித் தேர்தலை நாட்டு மக்கள் எவ் வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது தொடர்பிலும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பிலும் விரி வான கருத்துக்கள் வெளியிடப்பட்டது. 

குறிப்பாக தலைமையற்றுக் காணப்படும் தமிழ் சமூகம் சிறந்த முடிவொன் றினை எடுக்கவேண்டும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது. குறித்த செய்தி யாளர் சந்திப்பில் சேருவிலை மஹரஜமஹா விகாரையின் விகாராதிபதி முன் ஹேனே மெத்தானந்த தேரர், அரிசிமலை ஆரணிய சேனாசனத்தின் அதிபதி பன்னமுறே திலகவன்ச தேரர், தங்கனகர் மெதடிஸ்த திருச்சபையின் மதகுரு எஸ்.ஸ்ரீகாந், வெருகல் மெதடிஸ்த திருச்சபையின் மதகுரு ஐசையா ஜோசப், மற்றும் தோப்பூர் பெரிய பள்ளியின் மௌலவி பிஸ்ருள் ஹாபி ஆகியேர் தமது கருத்துக்களை இங்கு வெளிப்படுத்தினர்.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: தலைமையற்றுக் காணப்படும் தமிழ் சமூகம் சிறந்த முடிவொன்றினை எடுக்கவேண்டும்! Rating: 5 Reviewed By: Thamil