இலங்கையில் யுத்தகாலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றம் உள்ளிட்ட மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு கோட்டாபாயவே முழு பொறுப்பு என ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக் கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
முன் னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவின் சகோதரர் பசில் ராஜபக்ஷ, கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பதை தமிழர்களால் மறக்க முடி யாது.
ஆனால், இரு சமூகத்தினரும் ஒருவருக்கொருவர் மன்னிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு மற்றும் போர் குற்றத் தில் பிரதான குற்றவாளி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய என பலரும் கூறுகின்றனர்.
இலங்கையில் இடம்பெற்ற மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் போர்க்குற்றம் என்பவற்றுக்கு அவரே முழு பொறுப்பு.
வெள்ளைக் கொடிக ளுடன் சரணடைந்த பலரை ஈவிரக்கமின்றி சுட்டு படுகொலை செய்த ராஜபக்ஷ குடும்பத்தை தமிழர்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள்.
குற்றம் புரிந்த அனைவருக்கும் சர்வதேச விசாரணை ஊடாக தண்டனை கிடைக்க வேண்டும் அதற்காகவே நாம் இன்று வரை போராடி வருகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.