728x90 AdSpace

<>
Latest News
Friday, 18 October 2019

கோட்டாபயவிற்கு வாக்களித்தால்தான் உங்களிற்கு அபிவிருத்தியை தருவார்: வவுனியா மக்களுடன் பேரம் பேசினார் பிரபா கணேசன்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கடைசி நேரத்தில் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்கச் சொல்லிக் கொண்டு வருவார்கள். கடந்த 5 வருடமாக நல்லாட்சி ஊடாக எதனைப் பெற்றுத் தந்தீர்கள் என்ற கேள்வியைக் கேட்டு விரட்டிய டியுங்கள் என கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்கும் முன்னாள் பிரதி அமைச் சர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். 

வவுனியா, ஈரப்பெரியகுளத்தில் கோட்டபாய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரி வித்து நேற்று (18) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரை யாற்றும் போதே இவ்வாறு தெரிவித் தார். 

மேலும் தெரிவிக்கையில், 

 மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் எமது மக்களுக்கு கிடைத்த அபிவிருத்திகள் கடந்த 4 வருட காலமாக இல்லாமல் போயிருக்கிறது. தமிழ் மக்களுக்கு தேவையான அரசியலமைப்பை பெற்றுக் கொடுக்கின்றோம். சமஸ்டியை பெற்றுக் கொடுக்கின்றோம். 

அரசியல் கைதிகளை விடுதலை செய்து கொடுக்கின்றோம் என்று தமிழ் தேசி யக் கூட்டமைப்பினர் பல வாக்குறுதிகளை வழங்கினார்கள். நல்லாட்சியை ஏற்படுத்துகின்றோம் என்று ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியை ஏற்படுத் தினார்கள். 

ஆனால் அந்த ஆட்சியில் எமது மக்களுக்கான உரிமைகளும் கிடைக்க வில்லை. அபிவிருத்தியும் கிடைக்கவில்லை. வன்னி மாவட்டத்தில் இருக் கும் தமிழ் மக்கள் பாரிய அளவில் மிகவும் கஸ்ரத்துடன் வாழ்ந்து வருகின் றார்கள். இந்த மக்களுக்கு உரிமைகள் எவ்வளவு அவசியமோ அதைவிட வேக மாக அபிவிருத்திகள் தேவைப்படுகிறது. 

அந்த அபிவிருத்திகளை வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஸவை வெற்றி பெறச் செய்வதன் மூலம் தான் பெறக் கூடியதாக இருக்கும். இல்லை யென் றால் கடந்த நான்கு வருடங்களைப் போல் மீண்டும் 5 வருடங்களை கடக்க வேண்டி வரும். 

இந்த அடிப்படையை தமிழ் மக்கள் சரியாக புரிந்து கொண்டு செயற்பட வேண் டும். வன்னி மாவட்டத்தில் 84 வீதமான தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கி றார்கள். 10 வீதமான முஸ்லீம்களும், 6 வீதமான சிங்களவர்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

சிங்கள மக்களைப் பொறுத்தவரை வவுனியாவில் நூற்றுக்கு நூறு வீதம் கோட்டபாய ராஜபக்ஸவை ஆதரிக்க தயாராக இருக்கிறார்கள். தமிழ் மக்க ளும் அப்படியானதொரு நிலைப்பாட்டை எடுத்தால் தான் எங்களுக்கு தேவை யான பாரிய அபிவிருத்திகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

கடந்தவாரம் தென்னிலங்கையின் எட்டியாந்தோட்ட, தெரனியகல, கம்பகா போன்ற பல பிரதேசங்களில் கோட்டபாய ராஜபக்சவுடன் இணைந்து கூட்டங்க ளில் கலந்து கொண்டிருந்த போது அங்கு இருக்கும் 75 வீதமான சிங்கள மக்கள் கோட்டபாயவுக்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள். 

அந்த வெற்றியில் தமிழ் மக்களின் வாக்குகளும் இருந்தால் தான் எதிர் காலத்தில் தமிழ் மக்களுக்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்ள முடியும். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கடைசி நேரத்தில் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்கச் சொல்லிக் கொண்டு வருவார்கள். 

அவர்கள் வரும் பொழுது அவர்களை விரட்டியடியுங்கள். கடந்த 5 வருடமாக நல்லாட்சி ஊடாக எதனைப் பெற்றுத் தந்தீர்கள் என்ற கேள்வியைக் கேட்டு விரட்டியடியுங்கள். மேலும், சஜித் பிரேமதாச அவர்களுக்கு வழங்கும் ஒவ் வொரு வாக்கும் றிசாட் பதியுதீன் அவர்களுக்கு வழங்கும் வாக்கு என நினை த்துக் கொள்ளுங்கள். 

மீண்டும் பங்கரவாதம் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நான் 20 அம்சக் கோரிக்கைளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களிட மும், வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஸ அவர்களிடம் முன்வைத்து அவர்கள் ஏற்றுக் கொண்ட பின் தான் நான் அவர்களுக்காக வேலை செய்கின்றேன். 

எனவே அந்த கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ் மக்களும் கோட்டபாய வுக்கு வாக்களிக்க வேண்டும். அதன் மூலமே எமக்கு தேவையானவற்றைப் பெற முடியும் எனத் தெரிவித்தார்.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கோட்டாபயவிற்கு வாக்களித்தால்தான் உங்களிற்கு அபிவிருத்தியை தருவார்: வவுனியா மக்களுடன் பேரம் பேசினார் பிரபா கணேசன்! Rating: 5 Reviewed By: Thamil