ஐந்து கட்சிகளின் கூட்டு என்பது மக்களை ஊசுப்பேற்றி மறுபடியும் ஏமாற்று வதற்கான ஒரு கட்டமைப்பாகவே உருவாக்கப்பட்டுள்ளது.
கிடைத்ததை எல்லாம் கை நழுவச் செய்துவிட்டு தற்போது மறுபடியும் கூட்டமைத்து தமிழ் மக்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொள்வதாக கூறி மக்களிடம் வாக்குக் கேட்க முற் படுகின்றனர்.
ஆனாலும் இவர்களது கதைகளை நம்ப இனியும் எமது மக்கள் தயாராக இல்லை என்று நம்புகின்றேன்.
இருப் பதை பாதுகாத்துக்கொண்டு பெறவேண்டியவற்றை நோக்கி முன்னேறிச் செல்லவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
இதையே நாம் தொடர்ச்சியாக முன்னெடுத்தும் வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித் துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத் தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரி வித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
தற்போதைய ஆட்சியை உருவாக்குவதற்காக எவ்வளவோ உசுப்பேத்தல் களை மக்களிடத்தில் கூறி வாக்குகளை பெற்றார்கள். ஆனால் இன்று அவர் களது வாக்குறுதிகளிலிருந்து தப்பதித்துக்கொள்ள மற்றுமொரு கூட்டை உரு வாக்க முயற்சிக்கின்றனர்.
இவர்களது சுயநலன்களாலும் ஆளுடைமயற்ற போக்கினாலும் சிறிய தேவை களுக்கு கூட மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டியுள்ளது.
வடக்கை நோக்கி யுத்தம் முன்னெடுக்கப்பட்ட போது மக்கள் பேரழிவை சந்திக்கப் போகின்றார்கள் அதை தடுக்க வாருங்கள் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை ஒன்றை மேற்கொள்வோம்.
நானும் அதில் கலந்து கொள்கின்றேன் என கூட்டமைப்பினரிடம் கோரியி ருந்தேன். சம்மதம் தெரிவித்துவிட்டு பேச்சுவார்த்தைக்கு அவர்கள் வர வில்லை. ஏனெனில் அவர்கள் யுத்தம் நடப்பதை விரும்பியிருந்ததுடன் மக் களது அழிவையும் விரும்பியிருந்தனர் என எண்ணத் தோன்றுகின்றது.
நாம் முன்வைத்துள்ள அரசியல் உரிமை, அன்றாட பிரச்சினை, அபிவிருத்தி ஆகிய மூன்று விடயஙளுக்குள்ளே தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சகல வித மான பிரச்சினைகளும் அடங்கி இருக்கின்றன. இதனை முன்னிறுத்தி அதற்கு தீர்வு காண்பதற்கே நாம் உழைத்துவருகின்றோம்.
அவற்றைச் செய்வோம். செய்விப்போம் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
அந்த வகையில் பெரும்பான்மைக் கட்சி ஒன்றுடன் இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத் தியே எமது முன்னெடுப்புகளை வெற்றிகொள்ள முடியும். அதானால் தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிறுத்தியுள்ள ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்சவை ஆதரிக்குமாறு மக்களிடம் கோருகின் றோம்.
கோட்டபயவின் வெற்றியில் பங்கெடுப்பதன் ஊடாக அந்த வெற்றியை மக்க ளின் வெற்றியாக மாற்றிக்கொள்ள வேண்டும். அப்போது தான் மக்கள் வெற்றி யாளர்களாக மாறுவார்கள். இதுவே எனது எதிர்பார்ப்பாக இருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.