
இந்த வர்த்தகங்கள் அனைத்தும் கே.பி யின் நேரடி கட்டுப்பாட்டிலேயே இருந் தது. அனைத்து கணக்குகள், நிதி கை யாள்கை அனைத்தையும் கே.பி யே கையாண்டார். அவருக்கு கீழ் ஒரு கணக்கு பிரிவு இருந்தது. அந்த பிரிவு கே.பிக்கு மாத்திரமே பொறுப்பு சொல்லும்.
புலி களிடம் ஒரு நிதிப்பிரிவு இரு ந்தது.
தமிழேந்தி அப்பா அதற்கு பொறுப்பாக இருந்தார். பின்னர் பாலதாஸ் இருந்தார். இவர்கள் யாருக்கும் கே.பியின் வருமானம் பற்றி எதுவும் தெரியாது. வரவும் தெரியாது, செலவும் தெரியாது.
மாதாந்தமோ அல்லது தேவையான சமயத்திலோ புலிகளின் நிதிப்பிரிவிற்கு ஒரு தொகை பணத்தை கே.பியின் நிதிப்பிரிவு கையளிக்கும். அவ்வளவுதான்.
இது அமைப்பிற்குள் ஒரு பிரச்சனையாக இருந்தது. கே.பி அணி அதிக பண த்தை தமது சொந்த தேவைக்கு எடுக்கிறது, சொந்த வங்கிக்கணக்கை நிரப்பு கிறார்கள் என்ற அபிப்பிராயம் புலிகளின் நிதிப்பிரிவிற்கு இருந்தது.
விடுதலைப்புலிகளின் அனைத்து வருமானம் தரும் பிரிவுகளையும் ஒரே குடைக்குள் கொண்டு வர வேண்டுமென அவர்கள் விரும்பினார்கள். இந்த நிதி சிக்கலும் வெளிநாட்டு பொறுப்பாளர் பொறுப்பிலிருந்து கே.பி விலகிச் செல்ல வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தியது.
அது பற்றி தொடர்ந்து வரும் பகுதிகளில் குறிப்பிடுவோம்.கே.பியின் கீழ் வெளி நாட்டில் பல பிரிவுகளாக செயற்பாடுகள் இயங்கின. ஆயுதக்கொள்வனவு கடத் தல் விவகாரத்தை மட்டும் இதில் குறிப்பிடுகிறோம். கே.பியின் நேரடி கட்டுப் பாட்டில் ஒரு கணக்காளர் இருந்தார்.
அதுதவிர, மேலும் ஆறு அல்லது ஏழு பேர் கொண்ட ஒரு அணியிருந்தது. அவர்கள் தனித்தனியாக பல்வேறு நாடுகளில் வசித்து வந்தார்கள். இவர்கள் தான் ஆயுத பேரத்தை முடிப்பார்கள். நாடுகள், முகவர்களிடம் பேசி பேரத்தை முடிப்பார்கள். இவர்களிற்கு பல நாடுகளுடன் தொடர்பிருந்தது.
வர்த்தகர்களாகத்தான் தமது அடையாளத்தை வெளிக்காட்டுவார்கள். இவர்க ளில் எக்ஸ் என்ற ஒருவர் இப்பொழுது நைஜீரியாவில் வாழ்கிறார். உலகத்தில் பல வசதியான நாடுகள் இருக்கிறது, இவர்களிடமும் பணம் இருக்கும், பிற கேன் நைஜீரியாவில் வாழ்கிறார் என நீங்கள் நினைக்கலாம்.
அதற்கு காரணமிருக்கிறது.
குறித்த எக்ஸ் என்பவர் அனேகமாக ஆபிரிக்க ஆயுத முகவர்களுடன்தான் தொடர்பை வைத்திருந்தார். கடல்கொள்ளையர் கள், ஆயுத இயங்கள் என ஆபிரிக்காவின் ஆயுதங்களுடன் தொடர்புள்ள அத் தனை தரப்பும் அவருக்கு அத்துப்படி.
அதுதவிர, வறுமையான அந்த நாடுகளின் அரசுகளும் கொஞ்சம் காசை கொடுத்தாலே சொல்வதை செய்வார்கள். இப்படி நைஜீரியாவில் செல்வாக் கனாவராக எக்ஸ் மாறிவிட்டார்.

பலர் கைது செய்யப்பட்டார்கள். சிலர் விசாரணை வளைத்திற்குள் இருந்தார்கள். அடுத்து என்ன செய்வதென தெரி யாத நிலையில், சிலர் தமக்கு நெருக்கமான அரசுகளுடன் பேசி, அந்தந்த நாடு களில் குடியிருக்க ஆரம்பித்தனர்.
மேலே குறிப்பிட்ட எக்ஸிற்கு நைஜீரிய அரச, பாதுகாப்புதுறையில் நெருக்க மான தொடர்புகள் உள்ளன. அவர் நைஜீரியாவிலேயே குடியிருந்து விட்டார். அங்கு தற்போது பெரிய வர்த்தக புள்ளியாக இருக்கிறார்.
கணக்கு, ஆயுத பேரம் என்ற இரண்டு பிரிவுகளிற்கு அடுத்ததாக இன்னொரு பிரிவு இருந்தது.

இறுதி யுத்த சமயத்தில் கே.பியின் தொடர்பு வட்டத்திற்குள் இருந்தவர்களின் பொறுப்பில் இருந்த கப்பல்கள் அனேகமாக இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு விட்டன.
இன்னும் சில இரு தரப்பும் பேசி ஒரு டீலை முடித்து, பங்காளிகளாக மாறி னார்கள்.
புலிகளின் வெளிநாட்டு பொறுப்பாளர் பொறுப்பிலிருந்து கே.பி அகற் றப்பட்ட பின்னர், புதியவர்களின் பொறுப்பில்தான் பெருமளவான கப்பல்கள் இருந்தன.
அவை புலிகளின் அழிவின் பின் தனிநபர் சொத்துக்களாகி விட்டன. அந்தந்த கப்பல்களை, சொத்துக்களை யார் கையாண்டார்களோ, அவர்களே அவற்றின் உரிமையாளர்கள் ஆகினர்.
கண்ணாடி யோகன் என்ற ஒருவர் தற்போது லண் டனில் இருக்கிறார்.
நாற்பதுகளின் தொடக்கம்தான் வயது. கோடிக்கணக்கான சொத்திற்கு அதிபதி யாகி விட்டார். எப்படி நடந்தது தெரியுமா?
கொக்குவில் இந்துக்கல்லூரியின் பழைய மாணவன் இவர்.
தென்மராட்சியை சேர்ந்தவர், கொக்குவிலில் தாய்வழி உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்து படித்தார். யாழ்ப்பாண இடப்பெயர்வின் பின்னர் புலிகளில் இணைந்தார். இம்ரான் பாண்டியன் படையணியில் இருந்து கடற்புலிக்கு சென் றார்.
அந்த சமயத்தில்தான், கே.பியிடமிருந்து பொறுப்புக்கள் படிப்படியாக குறைக் கலாமென்ற யோசனை புலிகளிற்கு வந்தது. புலிகளின் டாங்கர் கப்பல்களை இயக்குபவர்கள், கப்பல் பணியாளர்களை முதன்முதலில் 1990களின் இறுதி யில் புலிகள் நியமித்தனர். அதுவரை கே.பியால் நியமிக்கப்பட்ட பொது மக் களே அந்த பொறுப்பில் இருந்தனர்.
இந்த நியமனம்தான் கே.பியிடமிருந்து ஆயுத நெற்வேர்க் பொறுப்பை புலிகள் திருப்பியெடுக்கும் முயற்சியின் முதலாவது நடவடிக்கை.அடுத்த கட்டமாக, அந்த கப்பல்களை நிர்வகிக்கும் பொறுப்பையும் கடற்புலிகளே எடுத்தார்கள்.
2000களின் தொடக்கத்தில் இந்த நடவடிக்கைக்காக கடற்புலிகள் ஒருவரை நிய மித்தனர். அவரிடமே குறிப்பிட்ட சில கப்பல்களை பொறுப்பளிக்குமாறு கே.பி கேட்கப்பட்டிருந்தார். புலிகள் நியமித்த ஆள், தாய்லாந்திற்கு நேரில் சென்று கப்பல்களை பொறுப்பேற்றார்.
கப்பல்களை பொறுப்பேற்ற அந்த ஆள்- கண்ணாடி யோகன்.
கப்பல்களை பற் றிய அனுபவமில்லாத போதும், கண்ணாடி யோகனிற்கு ஓரளவு ஆங்கில பரிச் சயமிருந்ததால் சூசை இந்த முடிவை எடுத்தார்.
புலிகளின் அழிவின் பின் இவ ரின் பொறுப்பில் ஐந்து கப்பல்களும், பல கோடி ரூபா பணமும் தங்கி விட்டது.
இதை வைத்து என்ன செய்வதென தெரியாமல் திண்டாடினார். யாருக்கும் சொல்லாமல் அமெரிக்காவிற்கு தப்பியோடி விடலாமென திட்டம் போட்டார். எனினும், அமைப்பின் மற்றைய நண்பர்களிற்கு விடயம் தெரிந்து அவரை தடுத்து நிறுத்தி விட்டார்கள்.
இப்படி பல கதைகள்.
புலிகளின் ஆயுதக்கப்பல்கள் ஏதாவதொரு நிறுவனத்தின் பெயரில்தான் பதிவு செய்யப்பட்டிருக்கும். இந்த நிறுவனங்களும் புலிகளின் லேபிள் நிறுவனங்கள்தான். கப்பல் நிறுவனங்கள் என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருப்பார்கள்.
அதாவது, மிக நேர்த்தியான சட்ட ஏற்பாடுகளுடன் அவை செயற்பட்டு கொண் டிருப்பார்கள்.
இப்பொழுது எக்ஸ் உக்ரேனியில் ஒரு ஆயுத பேரத்தை முடித்து விட்டார் என வைத்துக் கொள்வோம். விடயம், கப்பல்களை கையாள்பவர்க ளிற்கு அறிவிக்கப்படும்.
அவர்கள் ஒரு கில்லாடி வேலை செய்வார்கள். அந்த கப்பல் பதிவுசெய்யப்பட்ட நிறுவனம் எந்த நாட்டில் உள்ளதோ, அங்கு ஒரு முறைப்பாடு பதிவு செய்வார் கள். தமது நிறுவனத்திற்கு சொந்தமான இந்த பெயருடைய கப்பலை யாரோ கடத்தி விட்டார்கள் என முறைப்பாடு செய்வார்கள்.
பின்னர் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்ட கப்பலை உக்ரேனிற்கு அனுப்பி ஆயு தங்களை நிரப்புவார்கள். ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு கப்பல் நிக்கோபர் தீவு களிற்கு வரும். அங்கு வைத்து கப்பலின் நிறம் மாற்றியமைக்கப்படும். வேறொரு நாட்டின் கொடி பறக்கவிடப்படும்.
ஏன் நிக்கோபர் தீவுகளிற்கு கப்பலை புலிகள் கொண்டு வருகிறார்கள்?
புலிக ளின் பிரதான ஆயுத கடத்தல் செயற்பாடு நிக்கோபர் தீவுகளை அண்டித்தான் இயங்கியது.
கிழக்காசிய நாடுகளை மையமாக வைத்து கே.பி முதலானவர்கள் இயங்கி னாலும், ஆயுதங்களை ஏற்றிய கப்பல்களின் செயற்பாடு நிக்கோபர் தீவுகளை மையமாக வைத்தே நடந்தது. ஆயுதங்களை ஏற்றிய கப்பல்கள் அனைத்தும் நிக்கோபர் தீவுகளில்தான் கட்டி வைக்கப்படும்.
முல்லைத்தீவு அல்லது கிழக்கு கடற்கரையில் ஏதாவதொரு இடத்தில் ஆயுதம் இறக்கும் சூழல் உருவாகும் வரை நிக்கோபர் தீவுகளில் கப்பலை கட்டிவைப்பார்கள்.
நிக்கோபர் தீவு கூட்டம் என்பது ஆயிரக்கணக்கான சிறிய தீவுகளை கொண்டது.
இங்குள்ள பெரும்பாலான தீவுகளில் மக்கள் குடியிருப்பதில்லை. ஆளரவமற்ற பிரதேசமாக இருக்கும். எப்பொழுதாவது மிகச்சில மீனவர்கள்தான் அந்தப் பகுதிக்கு செல்வார்கள். அதனால் மிக பாதுகாப்பான இடமாக இருந்தது.
இதைவிட இன்னொரு பெரிய பாதுகாப்பிருந்தது. இது இந்து சமுத்திர பகு தியில் உள்ள தீவுக்கூட்டம். இந்தியாவின் கடற்படை ஆதிக்கத்திற்குரிய இடம். இதனால் அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய கடற்படைகள் அங்கு கவனம் செலுத் துவதில்லை.
நிக்கோபர் தீவுகளிற்கு அப்பால் ரெனியூன் தீவுகளில்தான் அமெரிக்காவின் ராடர் மையமொன்று உள்ளது. ரெனியூன் தீவுகளை அண்டிய கண்காணிப்பே போதுமென அமெரிக்க கடற்படை சிறியதொரு ராடர் கட்டமைப்பையே அங்கு நிறுவியுள்ளது.
அமெரிக்கர்களால் நிக்கோபர் தீவுகளை அண்டிய நடமாட்டத்தை கண் காணிக்க முடியாது.
சரி. அமெரிக்காவால்தான் கண்காணிக்க முடியாது. இந் திய கடற்படையின் அதிகார எல்லைக்குட்பட்ட நிக்கோபர் தீவுகளில் புலிகள் ஆயுதக்கப்பலை கட்டிவைத்து விட்டு, மாதக்கணக்கில் படுத்துக் கிடக்கிறார் களே,
இந்திய கடற்படை என்ன செய்து கொண்டிருந்தது?
ஏன் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை?
(தொடரும்)
அடுத்த தொடர்கள்
அடுத்த தொடர்கள்
18.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 18
ஐந்து வருடங்களிற்கு முன்னரே கருணாவை கணக்குபோட்டு வைத்த பிரபாகரன்!
ஐந்து வருடங்களிற்கு முன்னரே கருணாவை கணக்குபோட்டு வைத்த பிரபாகரன்!
20.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 20
கடற்படைக்கு புலிகள் வைத்த பொறி… துல்லியமாக தாக்கிய புலிகளின் ராங்கிகள்; மாட்டியது ஈ.பி.டி.பி
கடற்படைக்கு புலிகள் வைத்த பொறி… துல்லியமாக தாக்கிய புலிகளின் ராங்கிகள்; மாட்டியது ஈ.பி.டி.பி
24.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 24
புலிகளின் பகுதிக்குள் வெடித்த கிளைமோர்: பின்னணி பொட்டம்மானிற்கு தெரியும்!
புலிகளின் பகுதிக்குள் வெடித்த கிளைமோர்: பின்னணி பொட்டம்மானிற்கு தெரியும்!
30.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 30
காதலால் தவறிய புலிகளின் கொழும்பு இலக்கு… கருணா விசயத்தில் நடந்ததும் அதுதான்!
காதலால் தவறிய புலிகளின் கொழும்பு இலக்கு… கருணா விசயத்தில் நடந்ததும் அதுதான்!
கருணா படித்த பாடசாலையில் பிரபாகரன்தான் ஹெட் மாஸ்டர்!