இந்தோனேசியாவில் நேற்று பெற்ற நிலநடுக்கத்தால் 20 பேர் உயிரிழந்தனர்.
கிழக்கு பகுதியில் உள்ள மலுகு மாகாணத்தின் அம்போன் நகரில் நேற்று அதி காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.8 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் கட லுக்கு அடியில் 29 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவி யியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் ஏற் பட்டபோதும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
நிலநடுக்கத்தால் வீடுகள் உள்ளிட்ட சில கட்டிடங்கள் இடிந்து சேதம் அடைந்தன. மேம்பாலங்கள் மற்றும் சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டன.
இந்த நிலநடுக்கத்தில் சிக்கி ஒரு பச்சிளம் குழந்தை உள்பட 20 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.