728x90 AdSpace

<>
Latest News
Monday, 16 September 2019

பஞ்சாப்பில் கடத்தல் ராஜாவாக இருந்த விடுதலைப்புலிகளின் போராளி!- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 42

புலிகளின் ஆயுதல் கடத்தல் உலகத் தின் இன்னொரு பக்கத்தை இப்பொ ழுது குறிப்பிட போகின்றோம். அது சற்று அதிர்ச்சியளிப்பதாக இருக்க லாம். ஆனால் வரலாற்றில் காய்தல் உவத்தல் இருக்க முடியாதல்லவா? 


1980களின் ஆரம்பத்தில் மும்பை தாதா வரதராஜன் முதலி (வர்தா பாய்) உடன் புலிகளிற்கு தொடர்பு ஏற்பட்டது. அவரது பிரதான தொழிலே ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தலில் ஈடுபடு வது. ஆப்கானிஸ்தான் போதைப் பொருள்களின் உற்பத்தி மையமாக இருந் தது. 

இந்தியாவில் மும்பையை மையமாக வைத்து செயற்பட்ட பிரதான தாதாக்கள் எல்லோருமே ஆப்கானிஸ்தானில் இருந்து போதைப்பொருள் கடத்துபவர்கள் தான். வர்தா பாயில் தொடங்கி தாவூத் இப்ராஹிம் வரை எல்லா தாதாக்களும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள்தான். 

இந்தியாவில் தங்கியிருந்த சமயத்தில் ஈழவிடுதலை அமைப்புக்கள் பலவற் றிற்கும் போதைப்பொருள் கடத்தலில் ஆர்வம் ஏற்பட்டது. இயக்கத்தை நடத்த, ஆயுதங்கள் வாங்க பெருந்தொகை பணம் தேவை. உள்ளூரில் வரி அறிவிடு  வது, மக்களிடம் நிதி சேகரிப்பதெல்லாம் கால்தூசி பணம். 

இந்த பணத்தை கொண்டு ஆயுதம் வாங்க செல்ல முடியாது. இதனால் போதைப்பொருள் கடத்தலில் இயக்கங்கங்கள் உத்தியோகபற்றற்ற முறை யில் ஈடுபட்டன. எல்லா அமைப்புக்களும் இதில் ஈடுபட்டபோதும் புலிகளின் சர்வதேச வலையமைப்பு உலகளவில் விரிவடைந்ததால், சர்வதேசஅளவில் மிகப்பிரமாண்டமாக அதை செய்ய முடிந்தது. 

புலிகள் தவிர்ந்த, இன்றும் நாட்டில் உள்ள அமைப்பொன்றின் மீது அண்மைக் காலம் வரை போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டு உள்ளதை யும் நினைவூட்டுகிறோம். எதையும் கெட்டியாக பிடித்து, கச்சிதமாக செய்வது புலிகளின் இயல்பு. போதைப்பொருள் வர்த்தகத்திலும் அப்படியே நடந்தது. 

1983களில் முதன்முறையாக ஆப்கானிஸ் தானிற்கு ஈழவிடுதலை அமைப்புக்களின் உறுப்பினர்கள் போதைப்பொருள் வாங்க செல்ல ஆரம்பித்தனர். புலிகளின் சார்பிலும் இந்தக் காலத்தில் சிலர் அங்கு சென்றனர். ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வழி யாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் மிகப்பெரிய வலையமைப்புக்கள் இயங்கின. 

இதன் ஒரு பகுதியாகவே ஆரம்பத்தில் புலிகளின் ஆட்கள் வர்த்தகம் செய்த னர். சிறிதுகாலத்தில் வர்த்தகம் பிடிபட தொடங்க, தனி வலையமைப்பாக இயங்க தொடங்கிவிட்டனர். இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் இயக்க அடை யாளத்துடன் செயற்படவில்லை. 

சாதாரண கடத்தலில் ஈடுபடுபவர்களாகவே வெளியில் அறியப்பட்டனர். இப்ப டியான ஒருவரே, யாழ்ப்பாணம் புன்னாலைகட்டுவனை சேர்ந்த சிறீ என்ப வரும். இவர் பஞ்சாபில் தங்கியிருந்து தொழில் செய்தார். 

1986 இலேயே அங்கு பிரமாண்ட மாளிகை ஒன்று கட்டி, பஞ்சாப் பெண்ணொரு வரை திருமணம் செய்து, அங்கு வர்த்தக ராஜ்ஜியத்தை உருவாக்கிவிட்டார். அவரது வர்த்தக வருமானம் முழுவதும் புலிகளிற்கு வந்தது. ஆனால் சிறீயின் கீழ் செயற்பட்டவர்கள் அனைவரும் இந்தியர்கள்.

1994/95 காலப்பகுதியில் சிறீ மரணமானார். ஆப்கானிஸ்தானில் வாங்கப்படும் போதைப்பொருள் பாகிஸ்தான் வழியாக இந்தியா வந்து, பல நாடுகளிற்கும் விநியோகிக்கப்பட்டது. பாகிஸ்தான் எல்லைகளை இந்தியா இறுக்கமாக்கிய போது, ஒரு சுற்று சுற்றி நோபாளத்தை அடைந்து, அங்கிருந்து இந்தியாவிற் குள் நுழையும் ரூட் ஒன்றை கடத்தல்காரர்கள் கண்டுபிடித்தார்கள். 

இந்த பாதையால் இந்தியாவிற்குள் நுழைய முற்பட்டபோது, இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டதில் சிறீ மரணமடைந்து விட்டார். பஞ்சாபி அடை யாளத்தில்- தலைப்பாகை கட்டி அசல் பஞ்சாபியாகத்தான் சிறீ தெரிந்தார்- இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

உண்மையாகவே எல்லை கடந்து வரும் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி யதாகவே எல்லைப் பாதுகாப்பு படையினரும் நினைத்தனர், இன்று வரை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த சம்பவத்தில் நால்வர் கொல் லப் பட்டனர். 

அவர்களின் படங்களும் இந்திய ஊடகங்களில் அப்பொழுது வெளியாகியிருந் தது. எல்லை கடந்து வந்த பயங்கரவாதிகளாக கொல்லப்பட்டவர்களில் ஒரு வர், யாழ்ப்பாணம் புன்னாலை கட்டுவனை சேர்ந்த விடுதலைப்புலிகளின் போராளியான சிறீ. இப்படி அடையாளம் தெரியாமல் இறந்தவர்களின் பெரிய பட்டியல் ஒன்றே புலிகளிடம் இருந்தது. 

சில சமயங்களில் இப்படி உரிமைகோர முடியாத சம்பவங்களில் மரணமடைப வர்களை, உரிமை கோரக்கூடிய சம்பவங்களில் இணைத்து வெளியிடும் வழக் கமும் இருந்தது. முக்கிய இலக்குகள் மீதான தற்கொலை தாக்குதல்கள் போன்றவற்றில் ஈடுபட்டவர்களின் விபரங்களை வெளியிடாமல் பேணிக்காப் பார்கள். 

என்றாவது ஒருநாள் அவர்களின் விபரங்களை வெளியிடலாம் என புலிகள் நினைத்திருந்தனர்.பின்னாளில் இந்தியாவில் மட்டுமல்லாமல், சர்வதேச அள வில் புலிகள் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டனர். கே.பியினால் தாய் லாந்தில் பழங்கள் தகரத்தில் அடைக்கப்படும் தொழிற்சாலையொன்று இயக் கப்பட்டது. 

ஆயுத கொள்வனவாளர் பொறுப்பிலிருந்து கே.பி அகற்றப்பட்ட பின்னரும், அந்த தொழிற்சாலையை நிர்வகித்து வந்தார். பழங்களை தகரத்தில் அடைத்து விற்பதன் மூலம் ஓரளவு வருமானத்தை தொழிற்சாலை ஈட்டி வந்தது. தொழிற்சாலை நடத்தப்பட்டதற்கு இன்னொரு நோக்கமும் இருந்தது. போதைப்பொருள் கடத்தலில் தொழிற்சாலைக்கும் பங்கிருந்தது!


அங்கு பொதியிடப்பட்ட பழங்களுடன், குறிப்பிட்ட அளவில் போதைப் பொரு ளும் அனுப்பப்படும். இறுதிவரை வெற்றிகரமாக அந்த வர்த்தகத்தை புலிகள் செய்தனர். 

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உலகளாவிய ரீதியில் வேட்டையாடப் பட்ட போதும், போதைப்பொருள் வர்த்தகம் தென்னாசியா ஊடாக தொடர்ந்து நடந்ததற்கு புலிகளின் சர்வதேச வலையமைப்பும் ஒரு காரணம். 2002 இன் பின் னர் போதைப்பொருள் வர்த்தகத்தை நிறுத்துமாறு சர்வதேச சமூகம் புலிக ளிற்கு இரகசிய நெருக்கடியை கொடுத்தது. 

இலங்கையில் வெளிப்படையான நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகள் என பலதை குறிப்பிட்டதை போல, இந்த விவகாரத்தை புலிகளின் தலைமையிடம் காதும்காதும் வைத்ததைபோல சொன்னார்கள். 

புலிகள் கரும்புலி படையணியை கலைக்க வேண்டுமென பகிரங்கமாக சொல் லலாம். ஆனால் போதைப்பொருள் கடத்தலை நிறுத்துமாறு சொல்ல முடி யாது. ஏனெனில், அதை இயக்குவது புலிகளாக இருந்தாலும், உள்ளூர் ஆட் களை வைத்துதான் அதை செய்தார்கள். 

புலிகளின் பின்னணியை இதில் உறுதிப்படுத்துவதென்பது சிவனின் அடி முடியை காண்பதற்கு சமன். அப்படி பக்காவாக இதை புலிகள் செயற்படுத்தி னார்கள். 

2002 இல் உருவான சமாதான சூழலில் புலிகள் நிறைய விட்டுக் கொடுப்புக்க ளுடன் செயற்பட்டனர். சர்வதேசத்தை பகைக்க விரும்பாத புலிகள், அவர் களிற்கு சொன்ன பதில்- நாங்கள் இப்படியான வேலைகளில் ஈடுபடுவ தில்லை. 

வெளிநாட்டு தொடர்பாளர்கள் யாராவது அப்படி தனிப்பட்டரீதியில் செய்தால், அதையும் கட்டுப்படுத்தி விடுவோம் என்பதே. பின்னர் சில வருடங்கள் இந்த வர்த்தகத்தை குறைந்தளவிலேயே செய்தனர். போதைப்பொருள் சமுதா யத்தை சீரழித்து விடும் என்பதை புலிகள் தெரிந்து வைத்திருந்தனர். 

அதனால்தான் தமது பிரதேசத்தில் போதைப்பாவனையை முற்றாக தடுத்து வைத்திருந்தனர். புலிகளின் அகராதியில் போதைப்பொருள் கடத்தலிற்கு மன் னிப்பு கிடையாது. ஆனால் சர்வதேச அளவில் புலிகள் தவிர்க்க முடியாமல் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதற்கு காரணம்- நிதித்தேவை. 

அமைப்பை நடத்த, ஆயுதங்கள் வாங்க பெருந்தொகை பணம் தேவை. வடக்கு கிழக்கில் இயற்கை வளங்களும் அதிகமாக இல்லை. பெருமளவில் பணமீட்ட வாய்ப்பற்ற நிலத்தில் இருந்ததால் புலிகள் போதைப்பொருள் கடத்தலை பணமீட்டும் வழியாக பாவித்தார்கள். 

போதைப்பொருள் தமிழர் பிரதேசத்தில் வந்தால் சீரழிவு ஏற்படும், வேறு நாடு களிற்கு சென்றால் சீரழிவு ஏற்படாதா என நீங்கள் கேட்டால்…. பதில் யாரிட மும் இல்லைத்தான்.

 (தொடரும்)

அடுத்த தொடர்கள்
































கருணா படித்த பாடசாலையில் பிரபாகரன்தான் ஹெட் மாஸ்டர்!

































  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: பஞ்சாப்பில் கடத்தல் ராஜாவாக இருந்த விடுதலைப்புலிகளின் போராளி!- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 42 Rating: 5 Reviewed By: Thamil