728x90 AdSpace

<>
Latest News
Thursday, 5 September 2019

பொட்டம்மான்- கருணா பதினேழு வருட பகை!: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன 14

விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா விலகியது எப்படியான பாதிப் புக்களை ஏற்படுத்தியது? விடுதலைப் புலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு கருணாதான் காரணமா? கருணா பிரி ந்ததன் பின்னர் புலிகள் ஏன் ஒரு போர் முனையிலும் வெல்லவில்லை? போர்த் தந்திரோபாயங்களில் பிரபாகரனா, கருணாவா தேர்ந்த              வர்? 

இந்த விடயங்கள் தொடர்பாக பரவ லாக குழப்பங்கள் மக்களிடம் இருக்கிறது. இந்த சந்தேகங்களையெல்லாம் இந்த தொடர் தீர்த்து வைக்கும். மேலேயுள்ள கேள்விகளில் ஒன்றிற்கு, இந்த பகுதியை ஆரம்பிக்கும்போதே பதில் சொல்லி விடுகிறேன். 

போர்த்தந்திரோபாயங்களில் பிரபாகரனா, கருணாவா தேர்ந்தவர்? சந்தேகமே யில்லாமல் பதில் சொல்லி விடுகிறோம்- பிரபாகரன்தான். இளைஞர்களிற்கு புரியும்விதமாக சொன்னால், கருணா படித்த பாடசாலையில் பிரபாகரன் தான் ஹெட்மாஸ்ரர்! இதற்கு மட்டும் எப்படி இவ்வளவு உறுதியாக பதில் சொன் னோம் என்பதை, இந்த தொடரை படிக்கும்போது புரிந்து கொள்வீர்கள். 

விடுதலைப்புலிகளை அழி க்க முடியுமென ஒரு காலத் தில் யாராவது கற்பனை கூட செய்யவில்லை. இப் பொழுது ஒரு கதையொ ன்று பரவுகிறது- கோத்த பாய ராஜபக்ச புலிகளை அழிக்க முடியுமென 2005 இலேயே நினைத்திருந்தார் என.

இது உண்மையா? 

இப்போதைக்கு ஒன்றை மட்டும் சொல்லிவைக்கிறோம். காட்டில் சிங்கம் எழுதுவதுதான் வரலாறு. இந்த யுத்தத்தை வெல்லலாமென மகிந்த ராஜபக்ச குழாமை நம்பிக்கையூட்டியதில் இருந்து, படைக்கட்டுமானங்களை வலுப் படுத்தி, யுத்தத்தை மறைகரமாக இருந்து வழிநடத்தியதெல்லாமே இந்தியா தான். 

புலிகளை அழிக்கலாம் என்ற நம்பிக்கை இந்தியாவிற்கு எப்படி வந்தது தெரி யுமா? கருணா மூலம்! கருணா பிளவு புலிகளை அழித்ததென்பது தான் உண்மை. 

ஆனால் கருணாவின் ஆளணி பலத்தை இழந்ததைவிட, கருணாவின் மூலம் இந்தியா திரட்டிய தகவல்கள்தான் காரணம். இதை இப்படி மேலோட்டமாக சொல்ல உங்களிற்கு தலையை சுற்றுகிறதல்லவா? 

தொடரை முழுமையாக படியுங்கள். அனைத்தையும் தெளிவாக அறிந்து கொள்வீர்கள். கருணா பிரிந்தது இராணுவரீதியில் புலிகளிற்கு இழப்புத்தான். 2004 மார்ச்சில் புலிகளை விட்டு பிரிந்து செல்கிறேன் என கருணா அறிவித்த போது, அவரின் கீழ் 5,858 போராளிகள் இருந்ததாக புலிகளின் தலைமைச் செயலக பதிவு குறிப்பிடுகிறது. 

அதில் 1,800 பேர் கடுமையான காயமடைந்தவர்கள், திருமணமானவர்கள். அப் பொழுது கிழக்கில் கருணா ஆட்சேர்ப்பை ஆரம்பித்திருந்தார். அப்படி இணைக் கப்பட்டவர்கள் 2,300 பேர். மிகுதி 1,700 பேரும் யுத்த அனுபவம் மிக்க போரா ளிகள்.

கிழக்கு படையணிகள் சிதையாமல் புலிகளிடம் இருந்திருந்தால், யுத்தம் நீண்டு சென்றிருக்கும். இது வெளித்தலையீடுகளிற்கான வாய்ப்பை ஏற்படுத்தி புலிகளிற்கு சார்பான நிலைமையை ஏற்படுத்தியிருக்கும். 

இதெல்லாம் புலிகளிற்கு தெரியாதா? தெரியாமலா கருணாவை விலக்கும் முடிவை எடுத்தார்கள்? இதெல்லாவற்றையும் விட பெரிய கேள்வி, கருணா ஏன் பிரிந்தார்? 

விடுதலைப்புலிகள் அமைப்பின் 32 துறைகளிலும் வடக்கை சேர்ந்தவர்கள் தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள், மத்திய குழுவில் கிழக்கிற்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லை, கிழக்கு போராளிகளை வைத்து வன்னிச்சண்டை செய்கிறார்கள் என கருணா குற்றம்சாட்டினார். 

கருணா மீது நிதி, பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி, அவர் மீது ஒழுக் காற்று நடவடிக்கை எடுத்ததாக புலிகள் அறிவித்தார்கள். இதில் எது உண்மை? இரண்டு தரப்பு சொன்னதிலும் சில உண்மைகள் இருக்கலாம். 

ஆனால் கருணா பிளவிற்கு இரு தரப்பு சொன்ன காரணங்களும் உண்மை யல்ல. இரண்டு தரப்பும் தேடிப்பிடித்த காரணங்கள் அவை. கருணா பிளவை பற்றிய தொடரை, ஒரு சம்பவத்துடன் ஆரம்பிக்கிறோம்.

1997 மே 13ம் திகதி இராணுவத்தினர் வன்னியின் ஏ9 பிரதான வீதியை கைப் பற்ற ஒரு பிரமாண்ட படைநடவடிக்கையை ஆரம்பித்தார்கள். படையினர் ஜெயசிக்குறுவிற்கு திட்டமிடுவதை அறிந்த புலிகள், மட்டக்களப்பிலிருந்த புலிகளின் படையணிகளை வன்னிக்கு அழைத்தனர். 

வன்னிக்கு படையணிகளுடன் வந்த கருணாவை, பிரபாகரன் உயரிய கௌர வத்துடனே நடத்தினார். இன்னும் சொன்னால், தேவைக்கதிகமான கௌரவம் கொடுத்தார். கருணா வன்னிக்கு வந்த சமயத்தில் பெரிய மரபு யுத்த முனை களை வழி நடத்தியிருக்கவில்லை. 

வவுணதீவு முகாம் தாக்குதல், புளுகுணாவ தாக்குதல் போன்ற பெரிய தாக் குதல்களை கருணா மேற்கொண்டிருந்தார்தான். ஆனால் புளுகுணாவ தவிர் ந்த மற்றையதெல்லாம் பெரும் வெற்றிகரமான தாக்குதல்கள் அல்ல. 

வவுணதீவு தாக்குதலில் 84 புலிகள் மர ணமானார்கள். சுமார் 100 படையினர் இறந்ததாக அறிவித்தனர். இந்த சமன் பாட்டை புலிகள் விரும்புவதில்லை. இருதரப்பு இழப்பும் கிட்டத் தட்ட சமனாக இருந்தால், விரைவிலேயே இராணுவம் யுத்தத்தை வென்று விடும். 

வடக்கிலும் இப்படியான சில தாக்குதல்கள் நடந்துள்ளனதான். ஆனால் அவை யெல்லாம் தோல்வி தாக்குதல்கள் பட்டியலில் போட்டு, அதை தலைமை தாங்கிய தளபதியின் “காற்றை பிடுங்கி“ விடுவதுதான் பிரபாகரனின் ஸ்டைல். வடக்கு, கிழக்கு என்ற பாகுபாட்டை உருவாக்குவதோ… 

யாரையும் தரம் குறைக்க வைப்பதோ இந்த ஒப்பீடுகளின் நோக்கமல்ல. யதார்த்தம் இதுதான். இதற்கு புறக்காரணங்கள் பலவுள்ளன. கிழக்கில் இப்படி யான பெரிய மோதல்களில் அதிகமாக ஈடுபடாமல் கொரில்லா தாக்குதல்க ளில் தான் அதிகமான ஈடுபட்டது, பிரபாகரனின் முழுமையான கட்டுப்பாட்டில் வடக்கு இருந்தது, 

அதிக வளங்கள் வடக்கில் இருந்தது போன்றன அதற்கு காரணமாக இருக் கலாம். வடக்கு தளபதிகளில் பால்ராஜ் ஏற்கனவே மரபு யுத்தமுனைகளில் சிறப்பாக செயற்படுபவர் என்ற பெயரை எடுத்துவிட்டார். 

ஒரு சமயத்தில் புலிகள் உருவாக்கிய கூட்டுப்படை தலைமையகத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டவர். அப்படிப்பட்ட பால்ராஜை, கருணா வன்னியில் இருந்தபோது, அவரின் கீழ் செயற்பட வைத்தார் பிரபாகரன். கருணாவிற்கு கீழ் இயங்குபவராக என்றும் சொல்ல முடியாது. 

கருணாவிற்கு கீழ் செயற்படும் ரமேஷின் கட்டளைக்கு கீழ் செயற்படுபவராக நியமித்தார். 1998 ஜனவரியில் ஆனையிறவு மீது புலிகள் ஒரு தாக்குதல் நடத்தினார்கள். ஆனையிறவின் மையத்திற்குள்- இயக்கச்சி- பெரிய ஆட்லறி படைத்தளம் ஒன்று இருந்தது. 

புலிகளின் அணியொன்று ஆட்லறி முகாமை கைப்பற்றி ஆட்லறிகளை கைப் பற்றி விட்டனர். பல முனை தாக்குதல்கள் அது. அப்போது மணலாறு மாவட்ட சிறப்பு தளபதியாக இருந்த கேணல் ராஜேஷ் (ஆனந்தபுரத்தில் இறுதி யுத்தத் தில் மரணமானவர்) கொம்படி பகுதிக்குள்ளால் நகர்ந்து, அந்த பகுதி முன்ன ரண்களை தகர்த்து, உள்பக்கமாக இருந்த மினிமுகாம் ஒன்றையும் தகர்க்க வேண்டும். 

அதை சரியாக செய்தால் மட்டுமே கைப்பற்றப்பட்ட பதினொரு ஆட்லறி களையும் வெளியே கொண்டு வரலாம். ஆனால் ராஜேஷின் அணியால் அந்த மினிமுகாமை கைப்பற்ற முடியவில்லை. முகாமை கைப்பற்றாததால் ஆட் லறியையும் வெளியே கொண்டு வர முடியவில்லை.

ஆனையிறவையும் கைப்பற்ற முடியவில்லை. ராஜேஷிடமிருந்து எல்லா பொறுப்புக்களையும் பிரபாகரன் பிடுங்கினார். தாக்குதலை ஒட்டுமொத்தமாக வழிநடத்திய பால்ராஜிற்கும் காற்றை பிடுங்கினார். 

காற்றை பிடுங்குவதென்பது புலிகள் அமைப்பிற்குள் நிலவிய ஒரு குறியீட்டு சொல். பொறுப்புக்கள் பறிக்கப்படுவதை குறிக்கும். வவுனியாவிலிருந்து முன் னேறி வந்த ஜெயசிக்குறு படையினருக்கு எதிராக மூன்றுமுறிப்பில் புலிகள் முன்னரண் அமைத்திருந்த சமயத்தில் அந்தப்பகுதிக்கு கேணல் ரமேஷ் பொறுப்பாக இருந்தார். 

75 பேரை கொண்ட அணியொன்றின் பொறுப்பாளராக பால்ராஜ் நியமிக்கப் பட்டார். அந்த அணி ரமேஷின் கீழ் செயற்பட்டது. அதாவது பால்ராஜிற்கு கட்டளையிட்டது ரமேஷ்! அதாவது பால்ராஜ் வகித்த பொறுப்பு, விடுதலைப் புலிகள் அமைப்பில் சாதாரணமாக மேஜர் தர நிலையில் உள்ள ஒருவர் வகிக்கும் பொறுப்பையே. 

வேறு தளபதிகள் என்றால் இப்படியான “காற்று இறக்கல்களை“ விரும்ப மாட்டார்கள். அதற்கு ஒரு உதாரணம் ரவி. 1996இல் யாழ்மாவட்ட தளபதியாக இருந்தவர் ரவி. அவரது அசட்டையான முன்னரண் அமைப்பினாலேயே சூரியக்கதிர் நடவடிக்கை இராணுவத்தினர் எதிர்ப்பின்றி சாவகச்சேரியை கைப்பற்றினார்கள். 

புலிகள் வன்னிக்கு பின்வாங்கியதும் பிரபாகரன் செய்த முதலாவது வேலை ரவியின் காற்றை பிடுங்கியது. மாவட்ட சிறப்பு தளபதியாக இருந்தவர், தாக் குலணியொன்றில் சாதாரண போராளியாக விடப்பட்டார். 

ரவிக்கு இது பிடிக்கவில்லை. சிறிதுகாலத்திலேயே இயக்கத்திலிருந்து வில கிச்சென்றுவிட்டார். இப்பொழுது ஐரோப்பிய நாடொன்றில் வசிக்கிறார். ஆனால் பால்ராஜ் அப்படியானவரல்ல. இயக்கத்தில் என்ன வேலை கொடுத் தாலும் சிரித்தபடி செய்வார். நேற்று இயக்கத்தில் இணைந்தவரின் கட் டளையை கேட்குமாறு பிரபாகரன் சொன்னாலும் கேட்பார். 

ஆனால் அவரது எகத்தாள கதைகள் மாறாது. பால்ராஜின் எகத்தாள கதைகள் பற்றி தனி தொடரே எழுதலாம். சுவாரஸ்யமான அந்த கதைகள் பற்றி பின்னர் குறிப்பிடுகிறோம். மூன்றுமுறிப்பில் தனது சிறிய அணியுடன் பால்ராஜ் நிற்பது தளபதிகளிற்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. 

பலர் துக்கம் விசாரிப்பதைபோல பால்ராஜிடம் பேசப்போவார்கள். “இயக்கம் தரும் என்ன வேலையென்றாலும் நான் செய்யத்தானே வந்தனான். தளபதி யாக இருக்கவா இயக்கத்திற்கு வந்தனான்“ என அவர் கேட்டு அதகளம் பண் ணிக்கொண்டிருந்தார். 

கருணா, ரமேஷ் ஆகியோருக்கு கீழேயே பால்ராஜ் செயற்பட்டார். கருணா விற்கு புலிகள் முக்கியத்துவம் கொடுக்கவில்லையென்ற குற்றச்சாட்டு உண் மையல்ல. ஒரு சம்பவத்துடன் தொடங்குகிறோம் என்றுவிட்டு, சம்ப வத்தையே சொல்லவில்லையென்கிறீர்களா? 

சம்பவம் இதுதான். 1998 காலப்பகுதியில், மாங்குளத்திற்கு அண்மையாக புலனாய்வுத்துறை அணியொன்று- ஜெயசிக்குறு படையினரை வழிமறித்து- நிலைகொண்டிருந்தது. புலனாய்வுத்துறையில் தாக்குலணி ஒன்று இருந்தது. அது அப்போது மன்னாரில் நிலைகொண்டிருந்தது. 

அப்போது ஏற்பட்ட கடுமையான ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய எல்லா படையணிகளில் இருந்தும் ஆட்களை அனுப்பினார்கள். பொட்டம்மா னும் தனது பங்கிற்கு ஒரு ரிஸ்க் எடுத்தார். 

சம்பவத்தை சொல்வதற்கு முன்னர் ஒரு சிறிய விளக்கம். கொழும்பில் இருந்த மறைமுக கரும்புலிகள், கொழும்பில் தங்கியிருந்து நடவடிக் கைகளில் ஈடு படுபவர்களை ஏதாவது அவசர சந்திப்பு, நடவடிக்கைகளை திட்டமிடுவதற்காக வன்னியிலுள்ள புலனாய்வுத்துறை இரகசிய முகாம் ஒன்றிற்கு அழைக்கப்படுகிறார்கள் என வைப்போம். 

அவர்கள் எப்படி தங்கவைக்கப்படுவார்கள் என்பது தெரியுமா? இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களில் இருந்து பல வழிகளில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளிற்கு வருவார்கள். 

ஏ9 பாதை திறந்துள்ள சமயத்தில் பேரூந்தில் வருவார்கள், கடல்மார்க்கமாக வருவார்கள், காடுகளிற்குள்ளால் வருவார்கள். முகாமிற்கு அழைத்து வரப் படும்போது அவர்களின் முகத்தை முழுமையான மூடும் முகமூடி ஒன்று வழங்கப்படும். 

ஒவ்வொருவருக்கும் தனி அறை வழங்கப்படும். அந்த அறைக்குள் இருக்கும் சமயத்தில் முகமூடியை கழற்றிக்கொள்ளலாமே தவிர, அறை கதவை திறந்து வெளியில் வரும்போது முகமூடியில்லாமல் வரக்கூடாது. 

இரண்டு பேர் இரகசிய நடவடிக்கையில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் ஈடுபட்டிருந்தாலும், ஒருவரையொருவர் அறிந்து கொள்ளகூடாது. இதுதான் இரகசிய புலனாய்வு செயற்பாடுகளின் அடிப்படை சூத்திரம். 

வன்னியிலுள்ள ஒருவர்தான் அவர்களிற்கு தாக்குதல் திட்டத்தை விளங்கப் படுத்துவார். அவர் முகமூடி அணியமாட்டார். ஆனால் தான் திட்டத்தை விளங் கப்படுத்துபவர்களின் முகத்தை அவர் அறியமாட்டார். அந்த இடத்தில் இருப்ப வர்களும் பக்கத்திலிருப்பவரை அறியமாட்டார். 

யாராவது ஒருவர் எக்குத்தப்பாக இலங்கை புலனாய்வுத்துறையிடம் எக்குத் தப்பாக சிக்கிக்கொண்டால், வரிசையாக மற்றவர்களும் மாட்டுப் படாமல் இருக்க இந்த நடைமுறை .மறைமுக கரும்புலி பயிற்சிக்காக செல்பவர்க ளுக்கும் இதுதான் நிலை. ஆறு மாதமோ ஒரு வருடமோ அடுத் தவர் முகத்தை தெரியாமல் முகமூடி வாழ்க்கைதான் வாழ்வார்கள். 

ஜெயசிக்குறு களமுனையில் போராளிகள் பஞ்சம் வந்தது. ஜிம்கெலி தாத்தா வின் அணி நீண்டநாட்களாக ஓய்வின்றி களத்தில் நின்றது. அவர்களிற்கு ஓய்வளிக்க வேண்டும். மாற்று அணியொன்று இருந்தாலே சாத்தியம். 

இந்த பிரச்சனை பிரபாகரனிடம் வந்தது. இயக்கத்தின் உயர்மட்ட முடிவுகளை பொட்டம்மானுடன் பேசியே பிரபாகரன் எடுப்பார். இந்த பிரச்சனையை பொட்டம்மானிடம் பேச, ஒரு அணியை உடனே திரட்டி தருவதாக கூறினார்.

இராணுவக் கட்டுப்பாட்டு பகுதியில் நிலைகொண்டிருந்த நடவடிக்கையாளர் களையெல்லாம் உடனே வன்னிக்கு அழைத்து ஒரு அணியை உருவாக்கி னார். 

அது பயங்கர ரிஸ்க் எடுக்கும் வேலை. இவர்கள் முன்னரணில் நின்று இறந் தாலும், காயமடைந்தாலும், உயிருடன் இராணுவத்திடம் பிடிபட்டாலும் பிரச் சனைதான். காயமடைந்தால்கூட பின்னர் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் வேலை செய்ய முடியாது. காயத்தளும்பு அடையாளம் காட்டிக்கொடுத்து விடும். 

அவர்களிற்காக புதியவர்களை தயார்செய்வது சாதாரண விடயம் அல்ல. ஆனாலும் பொட்டம்மான் செய்தார். பொட்டம்மான் ஒரு மாற்று ஐடியா போட்டார். 

ஏ9 வீதிக்கு மேற்கு பக்கமாக நிலைகொண்டிருந்த நிதித்துறை படையணியை எடுத்து ஜிம்கெலி தாத்தாவின் படையணி நிலைகளில் நிறுத்திவிட்டு, நிதித் துறை படையணியின் நிலைகளில் புலனாய்வுத்துறை அணியை நிறுத்த லாம். 

ஏனெனில், ஜிம்கெலி தாத்தாவின் அணி நின்ற பகுதி அடிக்கடி சண்டை நடக் கும் இடம். நிதித்துறை படையணியின் பகுதியில் இராணுவம் அடிக்கடி கண்வைக்கவில்லை. 

இதை படிப்பவர்களிற்கு குழப்பம் வரலாம். நிதித்துறை, ஜெயந்தன் படையணி போராளிகள் ஆபத்தான இடத்தில் நிற்கலாம், புலனாய்வுத்துறை போராளிகள் நிற்க முடியாதா என. இதற்கு ஒரே பதில் இல்லையென்பதே. 

இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் ஒரு புலனாய்வுத்துறை உறுப்பினரை நிலைகொள்ள வைப்பதென்பது சாதாரண விடயமல்ல. அதனால்தான் பொட்டம்மான் அப்படி ஐடியா போட்டார். 

பிரபாகரனிற்கும் அது சரியெனபட, விடயத்தை கருணாவிற்கு விளங்கப் படுத்தி அந்த அணியை அனுப்பினார்கள். ஆனால் அந்த அணி ஜிம்கெலி தாத்தாவின் அணிநின்ற இடத்திலேயே நிறுத்தப்பட்டது!

மறுநாள் அந்த இடத்தில் இராணுவம் சிறிய முன்னேற்றத்தை செய்ய, புலனாய்வுத்துறையின் ஒருவர் மரணமாகி, இருவர் கடுமையான காயமடைந் தனர். பின்னர் இது இயக்கத்திற்குள் விவகாரமாகி, விசாரணை வரை சென் றது. 

புலனாய்வுத்துறை அணியை, நிதித்துறையின் இடத்தில் நிறுத்தாமல், ஜிம் கெலி தாத்தாவின் இடத்திற்கு அனுப்பியது யார் என தளபதிகள் மட்டத்தில் இது பேசப்பட்டபோது, பொட்டம்மான் கொஞ்சம் காரசாரமாக கருணாவை பேசிவிட்டார். 

தனக்கு இதில் சம்பந்தமில்லை, தனது கட்டளை மையத்தை சேர்ந்த யாரோ தளபதிதான் மாறி செயற்பட்டு விட்டார் என கூறி கருணா சமாளித்தார். ஓரளவிற்கு மிஞ்சி புலிகளும் அதை விவகாரமாக்கவில்லை. அப்பொழுது கள விசாரணை பகுதியை புலிகள் உருவாக்கியிருந்தார்கள். 

களத்தில் நடக்கும் சிக்கல்களை விசாரணை செய்து அறிக்கையிடுவதே வேலை. அவர்களிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்டது. அதற்கு கருணா அவ் வளவாக ஒத்துழைக்கவில்லை. பின்னர் அந்த விசாரணை கைவிடப்பட்டது! 

அதற்கு பின்னர் வன்னியில் பொட்டம்மான், கருணா மோதல் உக் கிரமடைந்தது. விடுதலைப் புலிகளின் இரண்டாவது தலைவராக பகிரங் கமாக அறிவிக்கப்படவில்லையே தவிர, அப்படி செயற்பட்டது பொட்டம்மான் தான். பிரபாகரன் அதற்கு அனுமதித்திருந்தார். 

வன்னியில் கருணாவிற்கு பிரபாகரன் கொடுத்த முக்கியத்துவத்தால் அவரை தனித்து செயற்பட வைத்தது. மட்டக்களப்பில் எப்படி நிர்வாக கட்டமைப்புக்க ளிற்கு கீழ்ப்படாமல் சுயாதீனமாக இயங்கினார்களோ, அப்படியே வன்னிக்குள் ளும் இயங்கினார்கள். 

அந்த சமயத்தில் போராளிகளின் போக்குவரத்திற்கென ஒரு பேருந்து சேவை இயக்கப்பட்டது. அதற்கு பெயர் சிறப்பு பணி. தனியார் பேருந்துகளில் போராளி கள் ஏறினால், பேருந்து உரிமையாளர்களால் தொழில் செய்ய முடியாது. இதை கருத்தில் கொண்டுதான் சிறப்பு பணி ஆரம்பிக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பில் இருந்து விசுவமடுவிற்கு வந்த தனியார் பேருந்தை ஜெயந்தன் படையணி போராளிகள் ஆறுபேர் மறித்துள்ளனர். போராளிகளிற்கு சிறப்பு பணி இருக்கிறதுதானேயென நினைத்தோ என்னவோ, நிறுத்தாமல் சென்றார் சாரதி. பேருந்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி நிறுத்தி, சாரதியையும் கடுமையாக தாக்கினார்கள் ஜெயந்தன் படையணியினர். 

பொதுமக்கள் பேருந்தில் இருந்தபோதும் நல்லவேளையாக உயிரிழப்புக்கள் நிகழவில்லை. புலிகள் அமைப்பில் இருந்த யாராவது இப்படி துப்பாக்கியை தவறாக பயன்படுத்துவது கிட்டத்தட்ட மரணதண்டனைக்குரிய குற்றம். 

புலிகள் அமைப்பில் இருந்தாலும் சிவில் குற்றங்களில் சம்பந்தப்பட்டால் அவர்களை காவல்துறை கைது செய்து, வழக்கமான காவல்துறை நடை முறைப்படியே விசாரணைகள், தண்டனைகள் அமையும். 

துப்பாக்கிச்சூட்டுடன் சம்பந்தப்பட்ட ஆறுபேரையும் காவல்துறை விசார ணைக்கு எடுக்க முயல, கருணா கடும் ஆட்சேபம் தெரிவித்தார். இறுதியில் கடுமையான இழுபறியின் பின் அவர்களை காவல்துறை கைது செய்தது.

இதுவே ஏனைய படையணிகள் என்றால், சிறிய சிக்கலுமில்லாமல் காவல் துறை விசாரணைக்கு ஒத்துழைத்திருப்பார்கள். கிழக்கில் புலிகளின் சிவில் நிர்வாக கட்டமைப்புக்கள் இருக்கவில்லை. 

கிழக்கு தளபதிகள், போராளிகளிற்கும் அதனுடன் இணைந்து செயற்பட்ட அனுபவம் இருக்கவில்லை. புலிகளிற்குள் பிளவு ஏற்பட இதைவிட இன்னும் இரண்டு காரணங்களும் உள்ளன. 

அதில் முக்கியமானது பொட்டம்மான், கருணா மோதல். அது 1987 இல் இருந்தே இருக்கிறது. அதாவது பொட்டம்மானுடனான 17 வருட பகை முற்றிய சமயத்திலேயே இயக்கத்திலிருந்து கருணா வெளியேறினார். 1987இல் இரு வருக்குமிடையில் ஆரம்பித்த மோதலை அடுத்த வாரம் குறிப்பிடுகிறேன்.

 (தொடரும்)

அடுத்த தொடர்கள்
































கருணா படித்த பாடசாலையில் பிரபாகரன்தான் ஹெட் மாஸ்டர்!

































  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: பொட்டம்மான்- கருணா பதினேழு வருட பகை!: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன 14 Rating: 5 Reviewed By: Thamil