
அச் சம்பவத்திற்கு முன்னர், சில பின் னணி தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அரசுக்கும் புலி களிற்குமிடையிலான சமாதான உடன்பாடு முறிவடைந்த போது புலிகள் இரண்டு முனைகளில் களங்களைத் திறந்தார்கள்.
ஒன்று, சம்பூரில். மற்றையது யாழை குறிவைத்து முகமாலை, கிளாலி முனை களில். சம்பூரில் சிறிய முன்னேற்றத்தை புலிகள் கண்டார்கள். ஆனால் பின் னர் இராணுவம் அதனை முறியடித்தது. யாழ் நோக்கிய நகர்வில் எதுவும் நடக் கவில்லை.

கேரதீவு பகுதிக்கு அண்மையில் மாலதி படையணி யின் அணியொன்றுதான் ஊடறுத்து உள்நுழைந் தது. வேறெந்த முனைகளிலும் புலிகளால் உள் நுழைய முடியவில்லை. ஊடறுத்து உள்நுழைந்த மகளிர் அணியை இராணுவம் சுற்றி வளைத்து விட்டது.
புலிகள் கிட்டத்தட்ட ஒரு வாரமாக முயன்றும் இராணுவ முன்னரணை உடைக்க முடியவில்லை. உண்மையில் புலிகளின் அந்த முயற்சி ஒரு விசப் பரீட்சை. புலிகள் எடுத்த தவறான இராணுவ முடிவு களில் ஒன்று.
பலனில்லாத அந்த யுத்தத்திற்கு செல விட்ட ஆளணி, ஆயுத தளபாடங் களை சேமித்திருந்தால் அல்லது சாத கமான வேறொரு முனையில் தாக் குதல் நடத்தியிருந்தால் வேறுவித மாக சூழ்நிலைகள் மாற்றமடைந்தி ருக்கும்.
புலிகளிற்கான ஆயுத தளபாட வரவு கடல்மார்க்கமாக தடுக்கப்பட்டிருந்தது. ஆளணி பற்றாக்குறை நிலவியது. யாழ்ப்பாண யுத்தத்தை நடத்தினால் இரா ணுவத்திற்கு பேரழிவை ஏற்படுத்தி ஆயுத தளபாடங்களை பெற்றுக்கொள்ள லாமென நினைத்தார்கள்.
ஆனால் முகமாலை முன்னரண் இரண்டு தரப்பா லும் கடக்க முடியாதது என்பதே உண்மை. இராணு வம் அதற்கு முன்னர் பலமுறை முயன்று கையை சுட்டுக் கொண்டது. முகாமாலையிலுள்ள புலிக ளின் அரண்களை உடைத்து உள்நுழைய இராணு வம் தன்னால் இயலுமானவரை முயற்சி செய்து விட்டுத் தான் கைவிட்டது.
அதன்பின்னர்தான் புலிகள் கையை சுட்டுக் கொண் டார்கள்.
முகமாலை பகுதி குறுகியது. கேந்திர முக் கியத்துவம் மிக்கது. அதனால் இரண்டு தரப்பும் நெருக்கமாக, பலமான முன்னரணை அமைத்தி ருந்தன. மன்னார் பகுதி போன்ற பரந்தமுனை யென்றால் ஒரு பகுதியில் முடியாவிட்டால் இன்னொரு பகுதியால் முயன்று நுழையலாம். முகமாலையில் அது முடியாது.
இரண்டு தரப்பும் முன்னரணிற்கு முன்பாக கண்ணிவெடி வயலை உருவாக்கி வைத்திருந்தன. அதனைவிட, இரண்டு தரப்பு முன்னரணிற்கும் முன்பாக வெளியான பிரதேசம் இருந்தது. வன்னி மீதான யுத்தத்தின் வெற்றியென்பது கிளிநொச்சி, முல்லைத்தீவை கைப்பற்றுவதே.
2006இல் இராணுவம் நிலைகொண்டிருந்த பகுதிகளிலிருந்து பார்த்தால், இந்த இரண்டு இடங்களிற்கும் நெருக்கமாக இருந்தது யாழ். முன்னரண்தான். ஆனால் இராணுவம் இறுதி யுத்த நகர்வை யாழில் இருந்து செய்யவில்லை. பலநூறு மைல்களிற்கு அப்பாலிருந்த மன்னாரின் எல்லையிலிருந்து ஆரம் பித்தது.
அது ஏன்?
இலங்கை இராணுவத்தில் திறமையான அதிகாரிகள் முன்னணிக்கு வந்ததன் விளைவது. வழக்கமாக இப்படியான சந்தர்ப்பங்களில் முகமாலையிலிருந்து நான்கைந்து முறை முயன்று பார்த்துவிட்டு, முடியாதப்பா என இராணுவம் இருந்துவிடும்.
ஆனால் இம்முறை புலிகளை அழிப்பதில் மிக கவனமாக திட்டமிட்டு படை நட வடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
முதலாவதாக, முகமாலையிலிருந்து நகர முடி யாதென்பது இராணுவத்திற்கு மிக தெளிவாக தெரியும். ஏற்கனவே முயன்று பார்த்து தெரிந்து கொண்டுவிட்டது.
அதனால், மன்னாரிலிருந்து நடவடிக்கையை ஆரம்பித்தது. மன்னாரிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட படைநடவடிக்கைக்கு மூன்று நோக்கங்கள்.
ஒன்று, புலிக ளின் ஆளணியை சிறுகச்சிறுக அழிப்பது.
மன்னாரில் தள்ளாடியிலிருந்து இராணுவத்தின் 58வது டிவிசன் நகர்வு ஆரம் பித்து மடு, பெரிய பண்டி விரிச்சான், பாலமோட்டை, அடம்பன் பகுதிகளில் யுத் தம் மிகநீண்ட நாட்கள் நீடித்தது. அந்த யுத்தங்களில் அதிக தூரம் கைப்பற்றும் ஆவலெதுவும் இராணுவத்திடம் இருக்கவில்லை.
தினமும் சிறிய முன்னகர்வு, புலிகளின் அணிகளை பெட்டி (BOX) அடித்தல் தான் இராணுவத்தின் நோக்கம். தினமும் யுத்தம். இறந்த போராளிகளின் உடல் கள் கிளிநொச்சிக்கு வரிசையாக வரத் தொடங்கியது. ஆரம்பத்தில் இராணுவம் முன்னகர முயல்வதை போல காட்டினாலே புலிகள் தீவிரமாக போரிட்டனர்.
பின்னர் தான் இராணுவத்தின் உத்தியை புரிந்து கொண்டார்கள். புலிகளின் கோட்டையான கிளிநொச்சி, முல்லைத்தீவிற்குள் நுழைவதற்கு முன்னரேயே எல்லையோரத்தில் புலிகளின் ஆளணியை சிறிது சிறிதாக அழித்து விடுவது படையினரின் நோக்கங்களில் ஒன்று.
அடுத்தது, மேற்கு கரையோரமாக தமி ழகத்துடன் கொண்டிருந்த பின்தள தொடர்பை நிறுத்துவது.
மற்றையது, முகமாலை புலிகளின் முன்னரணை அப்புறப்படுத்துவது. முக மாலை முன்னரணிலிருந்து கிட்டத்தட்ட 150 மைல்கள் அப்பாலிருந்து படையி னர் நகர்ந்து வந்து, அதனை பின்பக்கமாக தாக்கி அகற்ற திட்டமிட்டார்கள். முக மாலை முன்னரண் அகற்றப்பட்டால் தான் யாழில் குவிக்கப்பட்டிருந்த போரி டும் ஆற்றலுள்ள 40,000 படையினர் வன்னியை நோக்கி முன்னகர்த்தப்பட லாம்.
(முகமாலையிலிருந்து புலிகள் பின்வாங்கியதன் பின்னர் நாகர்கோவிலை மையமாக கொண்டிருந்த 55வது டிவிசனும், முகமாலையில் நிலை கொண்டி ருந்த 53வது டிவிசனும் முன்னகர ஆரம்பித்தனர்) முகமாலை புலிகளின் அரணை உடைக்க முடியாமல் மன்னாரிலிருந்து படை நடவடிக்கையை ஆரம் பிக்க வேண்டியிருந்ததெனில், அந்த நிலைகளின் இறுக்கத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள்.
முகமாலை உள்ளிட்ட வடபோர்முனை கட்டளைத்தளபதியாக செயற்பட்டவர் தீபன்.
மன்னாரிலிருந்து முன்னகர்ந்த இரா ணுவம் 2009 ஜனவரி முதலாம் நாள் பரந்தன் சந்தியை எட்டிவிட்டது. முக மாலை உள்ளிட்ட வடபோர்முனை முன்னரணிற்கு நேரடியான தரைப் பாதை துண்டாடப்பட்டு விட்டது. அத ற்காக அனைத்து வழிகளும் துண் டாடப்பட்டு முற்றுகைக்குள் சிக்கி விட்டார்கள் என்று அர்த்தமல்ல.
வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளத்தின் ஊடாக பாதை இருந்தது. அப்போது மாரி காலம் என்பதால் சுண்டிக்குளம் கடற்கரையையொட்டிய பாதை சிறிது தூரத் திற்கு கடலுடன் இணைந்திருந்தது.
சுமார் ஒரு கிலோமீற்றர் கடல்வழி பயணமிருந்தது.யாழ்ப்பாணத்திலிருந்து படையினர் முன்னகர முடியாது. பரந்தனிற்கு வந்த இராணுவத்தினர் ஆனை யிறவு பக்கமாக நகரவிடாமல் இன்னொரு அரண் அமைத்துவிட்டு, அந்த பகு தியை தக்கவைக்கலாமென தீபன் நினைத்தார்.
ஆனால், திடீரென அணிகளை பின்னகர்த்துமாறு தலைமைப்பீடம் கட்டளை யிட்டது.
தீபன் அதிர்ந்து போனார். முகமாலையை தக்க வைத்திருப்போம் என் பதே அவரது நிலைப்பாடு.
தலைமையும் அதே முடிவைத்தான் எடுக்குமென தீபன் நம்பியிருந்தார். ஆனால் தலைமை வேறு முடிவெடுத்தது. இந்த முடிவு தீபனிற்கு சிறிதும் விருப்பமில்லை.
(தொடரும்)
அடுத்த தொடர்கள்
அடுத்த தொடர்கள்
18.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 18
ஐந்து வருடங்களிற்கு முன்னரே கருணாவை கணக்குபோட்டு வைத்த பிரபாகரன்!
ஐந்து வருடங்களிற்கு முன்னரே கருணாவை கணக்குபோட்டு வைத்த பிரபாகரன்!
20.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 20
கடற்படைக்கு புலிகள் வைத்த பொறி… துல்லியமாக தாக்கிய புலிகளின் ராங்கிகள்; மாட்டியது ஈ.பி.டி.பி
கடற்படைக்கு புலிகள் வைத்த பொறி… துல்லியமாக தாக்கிய புலிகளின் ராங்கிகள்; மாட்டியது ஈ.பி.டி.பி
24.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 24
புலிகளின் பகுதிக்குள் வெடித்த கிளைமோர்: பின்னணி பொட்டம்மானிற்கு தெரியும்!
புலிகளின் பகுதிக்குள் வெடித்த கிளைமோர்: பின்னணி பொட்டம்மானிற்கு தெரியும்!
30.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 30
காதலால் தவறிய புலிகளின் கொழும்பு இலக்கு… கருணா விசயத்தில் நடந்ததும் அதுதான்!
காதலால் தவறிய புலிகளின் கொழும்பு இலக்கு… கருணா விசயத்தில் நடந்ததும் அதுதான்!
கருணா படித்த பாடசாலையில் பிரபாகரன்தான் ஹெட் மாஸ்டர்!