728x90 AdSpace

<>
Latest News
Friday, 27 September 2019

சுன்னாகம் தடுப்பு காவல் கைதி கொலை வழக்கு சந்தேகநபர் ஒருவர் சிறைக்குள்ளேயே உயிரிழப்பு!

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நப ரான சுமணன் என்ற இளைஞனை சித்திரைவதை செய்த பின் கொலை செய்த னர் என்ற குற்றம் சுமத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 5 பொலிஸாரில் 5 ஆவது எதிரி சுகவீனம் காரணமாக அநுராதபுரம் சிறைச்சாலையில் உயிரிழந் துள்ளார்.
  
சுமணன் கொலை வழக்கு நேற்று இடம் பெற்றபோது, எதிரியின் இறப்புத் தொட ர்பில் உரிய சான்றிதழ்கள் கிடைக்கப் பெறவில்லை. அதனால் உரிய நடவ டிக்கைகளை முன்னெடுத்து 5வது எதி ரியை நீக்கிய திருத்திய குற்றப்பத்தி ரிகையை தாக்கல் செய்ய அரச சட்ட வாதி அனுமதி கோரினார்.

அதற்கு அனுமதியளித்த மேல் நீதிமன்றம், வழக்கை வரும் ஒக்டோபர் 8ஆம் திகதி வரை ஒத்திவைத்தது. இந்த வழக்கை விசாரிப்பதற்கு வேறொரு நீதி பதியை நியமிக்குமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் நீதிச் சேவை ஆணைக்குழுவின் தலைவரான பிரதம நீதியரச ருக்கு விண்ணப்பம் செய்திருந்தார்.

அதனடிப்படையில் இந்த வழக்கை விசாரிப்பதற்கு யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி தாவூத் லெப்பை அப்துல் மனாப் நிய மிக்கப்பட்டார். இந்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி தாவூத் லெப்பை அப்துல் மனாப் முன்னிலையிலேயே நேற்று விசாரணைக்கு வந்தது.

முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திசாநாயக்க முதியன்சேலாகே சின்திக நிஷான்த பிரியபண்டார, ராஜபக்ச முதியன்சேலாகே சங்ஜீவ ராஜபக்ச, கோன்கலகே ஜயன்த மற்றும் ஞானலிங்கம் மயூரன் ஆகிய நான்கு எதிரிகளை யும் அநுராதபுரம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மன்றில் முற்படுத்தினர்.

இதன்போதே 5வது எதிரியான வீரசிங்க தொரயலாகே ஹேமசந்திர வீரசிங்க நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிறைச்சாலையில் உயிரிழந்தார் என்று ஏனைய எதிரிகளால் மன்றுக்குத் தெரிவிக்கப்பட்டது. 5வது எதிரியின் இறப்புத் தொடர்பில் எந்தவொரு ஆவணமும் கிடைக்கப்பெறவில்லை. 

இறப்பை உறுதிப்படுத்தி அவரை குற்றப்பத்திரிகையிலிருந்து நீக்கி திருத்திய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மன்று அனுமதியளிக்க வேண்டும் என்று அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் மன்றுரைத்தார். அதற்கு அனுமதி யளித்த மேல் நீதிமன்றம் வழக்கை வரும் ஒக்டோபர் 8ஆம் திகதிவரை ஒத்தி வைத்தது.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: சுன்னாகம் தடுப்பு காவல் கைதி கொலை வழக்கு சந்தேகநபர் ஒருவர் சிறைக்குள்ளேயே உயிரிழப்பு! Rating: 5 Reviewed By: Thamil