728x90 AdSpace

<>
Latest News
Tuesday, 24 September 2019

நீராவியடி சம்பவம் இந்தியாவுடனான நல்லுறவையும் பாதிக்க செய்யலாம்: இராதாகிருஸ்ணன் எச்சரிக்கை!

நீராவியடி சம்பவத்தின் போது சட்டத்தரணிகளுக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது நீதிதுறைக்கு விடுக்கப்பட்ட சவாலா என்ற கேள்வியை எங்கள் மத்தியில் எழுப்புகின்றது. 

மத தலைவர்கள் மதம் சார்ந்தவர்களாக இருக்க வேண்டுமே தவிர் மதம் பிடித் தவர்களாக இருக்க கூடாது. மதத்தின் பெயரால் எடுக்கப்படும் எந்த வொரு சம் பவத்தையும் அனுமதிக்க முடியாது. 

முல்லைத்தீவு நீராவி பிள்ளையாரடி சம்பவமானது இந்துக்களையும், சைவர்களையும் ஏலனப்படுத்தும் செயலா கும். மத நல்லிணக்கத்திற்கு வைக்கப்பட்ட பெரும் ஆப்பாகும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான கலா நிதி.வேலுசாமி இராதாகிருஸ்ணன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு நீராவி பிள்ளையாரடி சம்பவம் தொடர்பாக தொடர்ந்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், முல்லைத்தீவில் உயிரிழந்த விகாராதிபதி மேதாலங்கார தேரரின் உடலை நீதிமன்ற உத்தரவை மீறி புனிதமான ஒரு இடத்தில் அந்த உடலை தகனம் செய்தமையானது பௌத்த துறவிகளுக்கு சர் வதேச ரீதியாக அவப்பெயரை கொணடு வரும் ஒரு செயலாகும். 

இது மத நல்லிணக்கம் தொடர்பாக முன்னின்று செயல்படுகின்ற ஜனாதிப திக்கு விடுக்கப்பட்ட பாரிய சவலாகும்.இந்த சம்பவத்தின் மூலமாக இலங் கைக்கும் இந்தியாவிற்கும் உள்ள நல்லுறவில் பாதிப்பு ஏற்படலாம். 

ஏனெனில் அண்மையில் இந்து மதத்தை முன்னிறுத்தி முன்னெடுக்கப்படு கின்ற இந்திய ஜனநாயக ஆட்சியில் பிரதமர் மோடி பௌத்த மத பிராந்தியம் ஒன்றை ஏற்படுத்தி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்துள் ளார். 

இவ்வாறான சம்பவங்கள் அண்மைய நாடுகளை மத ரீதியாக பாதிப்பிற்குட் படுத்தும் செயலாகும். நீராவியடி சம்பவத்தின் போது சட்டத்தரணிகளுக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது நீதிதுறைக்கு விடுக்கப்பட்ட சவாலா என்ற கேள்வியை எங்கள் மத்தியில் எழுப்புகின்றது. 

எனவே இது தொடர்பாக உரிய தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எடுக்க முன் வர வேண்டும். இந்த விடயத்தில் எந்தவிதமான விட்டுக்கொடுப்பிற்கும் இட மில்லை எனவும் மேலும் தெரிவித்தார்.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: நீராவியடி சம்பவம் இந்தியாவுடனான நல்லுறவையும் பாதிக்க செய்யலாம்: இராதாகிருஸ்ணன் எச்சரிக்கை! Rating: 5 Reviewed By: Thamil