மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக எடுத்துச் சொல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரி வித்துள்ளாா்.
உகண்டா நாட்டில் நடபெற்று வரும் பொது நலவாய நாடுகளின் கூட்டத் தொடரில் சபாநாயகருக்கு பதிலாக குழுக்களின் பிர தித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கலந்துகொண்டுள்ள நிலையில், மாநாடு தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக் கப்பட்டுள்ளது.
குறித்த செய்திக் குறிப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பொது நல வாய நாடுகளின் கூட்டத்தொடர் இந்த முறை உகண்டா நாட்டில் நடைபெறு கின்றது. பல்வேறு நாட்டு சபாநாயகர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இக்கூட்டத் தொடரிலே அவர்களோடு தனிப்பட்ட ரீதியில் பேசுவதற்கான சந் தர்ப்பம் கிடைத்துள்ள நிலையில், இலங்கையில் நடந்து கொண்டிருக்கின்ற இனப்பிரச்சினை சம்பந்தமான விடயங்களையும், தமிழ் மக்களுக்கு எதிராக நடந்து முடிந்த, நடைபெற்றுக்கொண்டிருக்கும் நீதித்துறையின் மீதான தவ றான அடாவடி நடவடிக்கைகள் பற்றியும் நேரடியாக எடுத்து விளக்கக்கூடிய அரிய சந்தர்ப்பம் எனக்கு கிடைத்திருந்தது.