
இலங்கை அரசாங்கம் அவற்றை எப் படி துல்லியமான குறிவைத்தன?
அதுவரை இலங்கை கடற்படையால் குறிவைக்கவே முடியாமலிருந்த புலி களின் கப்பல்களை, 2006 இல் இருந்து எப்படி தாக்கியழிக்க முடிந்தது?
புலிகளின் ஆயுதக்கப்பல் ஒன்றுகூட 2006 இன் பின்னர் முல்லைத்தீவுக்கு வர வில்லையென கூறப்படுகிறதே, அது உண்மையா?
இந்த கேள்விகளிற்கு பதில் தெரிய வேண்டுமெனில் முதலில் புலிகளின் ஆயுதக்கடத்தல் கட்டமைப்பின் ஆரம்பத்திலிருந்து சில விடயங்களை சொல்ல வேண்டும்.
கே.பி என்கின்ற குமரன் பத்மநாதன் எப்படி புலிகளின் ஆயுதக்கடத்தல் வலை யமைப்பை உருவாக்கினார் என்பதை ஏற்கனவே விபரமாக குறிப்பிட்டிருக் கின்றோம். இந்தியாவில் தங்கியிருந்த காலப்பகுதியில் வரதா பாய் என்கிற வரதராஜ முதலியார் ஊடான தொடர்புகளால் ஆப்கான் சென்றது,
பின்னர் அங்கிருந்து தாய்லாந்து சென்றது, தென்னாசியாவை மையமாக வைத்து கே.பி புலிகளின் மெகா ஆயுதக்கடத்தல் வலையமைப்பை உருவாக் கியது பற்றியெல்லாம் குறிப்பிட்டிருந்தோம்.தாய்லாந்து, மியன்மார் (முன் னைய பர்மா), கம்போடியா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகளைதான் கே.பி தளமாக வைத்திருந்தார்.
அதிலும் மியன்மாரும், தாய்லாந்தும் அவரது பிறந்த வீட்டைப்போல. இரண்டு நாடுகளின் அரசுமட்டத்தில் புலிளிற்கு நல்ல தொடர்பிருந்தது. குறிப்பாக மியன்மார் இராணுவ ஆட்சியாளர்கள் புலிகளுடன் நல்ல தொடர்பில் இருந் தனர்.
மியன்மாரின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்களும் புலிகளிற்கு கிடைத்துள்ளன என்றால் பார்த்து கொள்ளுங்கள்.
மியன்மாரும் புலிகளும் எவ்வளவு நெருக்கமாக இருந்தார்கள் என்பதை புரிய வைக்க ஒரு சம்பவம் சொல்கிறோம்.
2005 காலப்பகுதியில் மியன்மாரில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கு தமிழர்கள் அதிகம் வாழும் பிரதேசம்தான் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது. மியன்மாரில் நடக்கும் பிரச்சனைகளை வெளியுலகத்திற்கு தெரியாமல் மறைப்பதில் இராணுவ ஆட்சியாளர்கள் கில்லாடிகள்.
ஆனால், தமிழர்கள் அதிகம் பாதிக்கப்பட்டதால் இந்திய தமிழ் ஊடகங்களின் வழியாக தமிழர்கள் மத்தியில் இந்த செய்தி பரவலடைய தொடங்கியது. அது அப்படியே இலங்கைத்ததமிழ் ஊடகங்களிலும் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கப்பட்டது.
அங்குள்ள தமிழர்களின் நிலைமை இந்த செய்திகள் வழியாக வெளியாகாமல் தடுக்க இராணுவ ஆட்சியாளர்கள் விரும்பினார்கள். உடனே புலிகளிற்கு ஒரு மெசேஜ் அனுப்பினார்கள். எப்படியாவது இந்த செய்தியை இனிமேல் வெளியா காமல் செய்துவிடுங்கள் என அதில் கேட்கப்பட்டிருந்தது.
உடனே தமிழ் ஊடகங்களிற்கு புலிகளின் மெசேஜ் போகவேண்டிய விதத்தில் போனது. அவ்வளவுதான். மொத்த தமிழ் ஊடகங்களும் மியன்மார் வெள் ளத்தை மறந்து விட்டன.
தாய்லாந்து ஆட்சியாளர்களுடன் புலிகளிற்கு இவ்வளவு தொடர்பு கிடையாது. அங்கு கே.பியின் தனிப்பட்ட தொடர்புகளே இருந்தன. அங்குள்ள முக்கியமான மூன்று புலனாய்வு அமைப்புக்களுடனும் கே.பி எப்படியான உறவை பேணி, ஆயுதங்களை வாங்கிக்கொண்டிருந்தார் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந் தோம்.
முக்கிய புலனாய்வு அமைப்புக்களுடன் உறவிலிருந்தால் பிறகெதற்கு பயப் பிட வேண்டும்? அரச உயர்மட்டத்தில் என்ன திட்டம் தீட்டப்பட்டாலும், மறு நொடி கே.பியின் காதிற்கு விலாவாரியாக அனைத்து விபரங்களும் வந்து விடும்.
இதைவிட, தாய்லாந்து இன்னொரு விதத்தில் கே.பிக்கு ஸ்பெஷல். அதுதான் அவரது மாமியார் நாடு.
கே.பி திருமணம் செய்தது ஒரு தாய்லாந்து பெண்ணை. அது காதல் கல்யா ணம். அவர்களிற்கு ஒரு மகள் இருக்கிறார். அங்குள்ள பல்கலைகழகத்தில் படித்து, இப்பொழுது வேலை செய்ய ஆரம்பித்து விட்டார்.
ஆயுதக்கடத்தல், தாய்லாந்தில் பழங்கள் பொதியிடும் தொழிற்சாலை, உக்ரே னில் ஆயுத தொழிற்சாலை, சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தல் என உலகத்தின் மிகப்பெரிய கடத்தல் வலையமைப்பை நிர்வகித்து கொண்டி ருந்தவர் கே.பி. இந்தகாலப்பகுதியில் ஆபிரிக்காவின் மிகப்பெரிய கடத்தல் காரர்களையும் புலிகளின் ஆயுத தரகர்கள் சந்தித்து பேசியிருக்கிறார்கள்.
ஆபிரிக்காவில் சொந்தமாக துறைமுகம் வைத்துள்ள மெகா கடத்தல்காரரே இருக்கிறார். கடத்தல் உலகத்தில் நம்பர் 1 ஆட்கள் புலிகள்தான் என்று இவர் கள் எல்லோரும் ஒத்துக்கொண்டுள்ளனர்.
இந்தக் கடத்தல் உலகமென்பது வித்தியாசமான உலகம். எச்சரிக்கையுணர்வு, புத்திகூர்மை, எதிராளிகளின் நகர்வுகளை கணக்கிட்டு முன்னரே மாற்று உத் திகள் வைத்திருப்பது, சந்துபொந்துகளிற்குள்ளால் நுழைய தினம் தினம் புதிய மார்க்கங்களை உருவாக்கல், தட்டி பேசுவது தொடக்கம்.
“தட்டுவது“ வரை கையாள வேண்டிய உத்தியை பாவித்து எதிராளிகளை மடக் குவதென ஒரு சகலகலா வல்லவனால்தான் இந்த வலையமைப்பை இயக்க முடியும். கே.பியால் அது முடிந்தது.1998 ஆம் ஆண்டு வரை சர்வதேச கடலில் சஞ்சரிக்கும் ஆயுதகப்பல்களில் பொதுமக்களே பணியாற்றினார்கள்.
1998 இல் இந்த பணிக்காக போராளிகளை அனுப்ப தொடங்கி, 2000 ஆம் ஆண் டில் புலிகளின் அனைத்து ஆயுதக்கப்பல்களையும் போராளிகளே இயக்கினார் கள். இது புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பில் முதலாவது குழப்பத்தை ஏற்படுத்தியது.
கப்பலும், திட்டங்களும் கே.பியுடையவை. போராளிகள் சூசையின் ஆட்கள்.
கப்பலிற்கு அனுப்பப்பட்டவர்கள் அனேகர் சூசையின் மிக நம்பிக்கைக்குரி யவர். அவர்கள் கே.பிக்கு அவ்வளவாக விசுவாசம் காட்டவில்லை.
சூசையின் கட்டளைக்குத்தான் கீழ்ப்படிவார்கள். இதனால் அடிக்கடி சில குழப் பங்கள் ஏற்படுவது, இரு தரப்பும் பேசி தீர்ப்பதென காலம் ஓடிக்கொண்டிருந்தது. 2000 ஆம் ஆண்டில் கே.பி கடல்வழியாக முல்லைத்தீவிற்கு வந்து பிரபாக ரனைச் சந்தித்து விட்டுச் சென்றார்.
இந்த சந்திப்பிலும் இரண்டு கட்டளை மையங்களால் ஏற்படும் குழப்பங்கள் பற்றி கே.பி முறையிட்டிருந்தார். அப்பொழுது சூசையையும் அழைத்து பேசி, இணக்கமாக செயற்படும் ஆலோசனையை பிரபாகரன் வழங்கியிருந்தார்.
ஆனால், அதே பிரபாகரன் இரண்டு வருடங்களின் பின்னர்- 2002 இல் கே.பியை வெளிநாட்டு பொறுப்பாளர் பதவியிலிருந்து நீக்கினார்?
அப்பொழுது புலிகளின் நிதி விவகாரங்களிற்கு பொறுப்பாக தமிழேந்தி அப்பா இருந்தார்.
அவர் நிதி விடயத்தில் எவ்வளவு இறுக்கமானவர் என்பதை ஏற்கனவே குறிப் பிட்டிருக்கிறோம். ஒரு ரூபாய் கணக்கென்றாலும் நூறு முறை கணக்கு பார்ப்ப வர். அவ்வளவு இறுக்கமாக இருந்ததால்தான் பொருளாதார தடைகளின் மத் தியிலும் புலிகளால் தாக்குபிடிக்க முடிந்தது.
கே.பியின் நிதி விவகாரங்கள் தனியானவை. கே.பியால் மட்டுமே அது கையா ளப்பட்டு வந்தது. இந்த தொடரில் ஆயுத கடத்தல் பற்றிய விடயங்களை பேசத் தொடங்கிய சமயத்தில், ஆயுதக்கடத்தல் உலகத்தில் உள்ள ஏமாற் றுக்காரர் களை பற்றி குறிப்பிட்டிருந்தோம்.
ஏமாற்றுக்காரர்களை பற்றி முதலில் ஏன் குறிப்பிட்டோம் என்றால்- ஆயுதக் கடத்தல் உலகத்தில் இயங்குவதென்றால் எவ்வளவு பெருந்தொகை பணம் அவசியம் என்பதை புரியவைக்கவே. சிலருக்கு கொடுத்த பணம், கோயில் உண்டியலில் போட்டதாகவே முடியும். மொத்தத்தில் பெரும்தொகை பணம் கையாளப்படும் உலகம் அது.
கே.பி கையாள்வது அளவிற்கு அதிகமான பணம், இவ்வளவு பணம் அவரிற்கு தேவையில்லையென தமிழேந்தி நினைத்தார். கே.பி தனது தனிப்பட்ட வங் கிக்கணக்கிற்கு பெருமளவு பணத்தை மாற்றி, சொத்து சேர்க்கிறார் என்பது தமிழேந்தியின் குற்றச்சாட்டு. சூசை, கஸ்ரோ, பொட்டம்மான் போன்றவர்க ளும் இதே நிலைப்பாட்டில்தான் இருந்தனர்.
ஆயுதக்கடத்தல் உலகத்தின் நிச்சயமற்ற தன்மையை பயன்படுத்தி கே.பி அள விற்கதிகமான பணத்தை கையாண்டுமிருக்கலாம். ஆனால் கே.பியில் கைவைக்க முன்னர் அவருக்கு மாற்றான ஏற்பாடு இருக்கிறதா என்பதை புலி கள் சரியாக கவனிக்கவில்லை.
கே.பியின் தொடர்பு இல்லாமல் தமது ஆட்களாலேயே ஆயுதங்களை கொண்டு வரலாமென சூசையும் பிரபாகரனிடம் பலமுறை சொல்லியிருக்கிறார். தரகர் களிடம் பேசி ஆயுதபேரத்தை முடிப்பது மட்டும்தானே கே.பியின் வேலை, அதை யாராவது செய்தால் மிச்சத்தை தாமே பார்த்துக்கொள்வோம் என சூசை சொல்லியிருந்தார்.
அப்பொழுது கஸ்ரோ அனைத்துலக தொடர்பக பொறுப்பாளராக இருந்தார்.
1991 ஆனையிறவு சமரில் இடுப்பின் கீழ் உணர்விழந்த நிலையில் இருந்தவர். எப் பொழுதும் படுக்கையில் இருப்பதாலோ என்னவோ அதிகமான கோபம் அவ ருக்கு வரும்.
வடமராட்சியை சேர்ந்த கஸ்ரோ ஹாட்லி கல்லூரியின் பழைய மாணவன்.
கஸ்ரோவின் கீழ் புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பு முழுதாக வந்தது. இப்பொழுது கே.பிக்கு பதிலாக கஸ்ரோ, சூசையின் கூட்டு செயற்பாட்டின் கீழ் புலிகளின் ஆயுத கடத்தல் விவகாரம் முழுமையாக கைமாறியது.
கே.பி பொறுப்புக்களில் இருந்து ஒதுங்கி, தாய்லாந்தில் இயங்கிய பழம் பொதி யிடும் நிறுவனத்தை மட்டும் மேற்பார்வை செய்துகொண்டு இருக்குமாறு பிரபாகரன் அறிவித்தார். இந்த அறிவிப்புடன் புலிகளின் நீண்டகால ஆயுதக் கடத்தல் வலையமைப்பு செயலிழக்க ஆரம்பிக்கிறது.
இந்த அறிவித்தலை தொடர்ந்து கே.பி, பிரபாகரனிற்கு ஒரு கடிதம் அனுப்பி னார். விடுதலைப்புலிகளின் ஆரம்பகாலத்தில் எப்படி அர்ப்பணிப்பாக செயற் பட்டேன் என்பதை மிக உணர்வுபூர்வமாக எழுதியிருந்தார்.
அந்த கடிதத்தில் கே.பி ஒரு சம்பவத்தையும் குறிப்பிட்டிருந்தார். 1970களின் இறுதியில் புலிகள் துப்பாக்கி வாங்க முயன்றபோது கடுமையான பணத்தட்டுப் பாடு நிலவியது.
என்ன செய்வதென எல்லோரும் திண்டாடிக்கொண்டிருந்தபோது, வீட்டிலிரு ந்து மோதிரமொன்றை விற்று கே.பிதான் பணத்தேவையை ஈடுசெய்திருந் தார்.
இந்த சம்பவங்களையெல்லாம் குறிப்பிட்டு, தன்னை ஏன் சந்தேகித்தீர்கள் என உருக்கமாக அந்த கடிதத்தை அனுப்பியிருந்தார்.
அந்த கடிதத்தை படித்ததும் பிரபாகரன் நெகிழ்ந்து விட்டார். சமாதான உடன் படிக்கை காலத்தின் பிற்பகுதியில் புதுக்குடியிருப்பில் கணினி பிரிவினர் ஒரு முகாம் அமைத்திருந்தனர்.
புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் சாலையில் இருந்தது. அங்குதான் ஒரு நீச்சல் குளமும் இருந்தது. பிரபாகரன், பாலச்சந்திரன் குளிக்கும் படங்கள் அங்குதான் எடுக்கப்பட்டவை.
அந்த சமயத்தில் மாதத்தில் ஒரு சனிக்கிழமை தளபதிகளை அழைத்து, அங்கேயே சமைத்து சாப்பிட்டு, பகல் பொழுதை கழிப்பார் பிரபாகரன். அன்று விசேடமாக ஆடு வெட்டப்பட்டு சமைக்கப்படும். கே.பியின் கடிதம் வந்ததற்கு அடுத்தடுத்த நாளில் வந்த சனிக்கிழமையில், கே.பி பற்றியே பிரபாகரன் பேசிக்கொண்டிருந்தார்.
மிகச்சில சந்தர்ப்பங்களில் மட்டும்தான் பிரபாகரன் நெகிழ்ந்திருக்கிறார். இதில் ஒன்று இந்த சந்தர்ப்பமும். பிரபாகரனின் திருமணத்தில் மாப்பிளை தோழனாக இருந்தவராயிற்றே கே.பி!
இதன்பின், மாதாமாதம் கே.பிக்கு ஒரு தொகை பணம் வழங்க பிரபாகரன் உத் தரவிட்டிருந்தார். அந்த சமயத்தில் கே.பி, கப்பலொன்றை கட்டிக்கொண்டி ருந்தார். அதற்கான செலவையும் ஈடுகட்ட இந்த பணம் வழங்கப்பட்டது.
யுத்தத்தின் முடிவில் கே.பியிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக கூறி அரசாங்கம் கொழும்பிற்கு கொண்டு வந்த கப்பல்தான் அது.
கே.பி ஒதுங்கிய பின்னர் அரங் கத்திற்கு வந்தவர்கள் அனைவரும் புதியவர்கள் அவர்களிற்கு இந்த உலகத் தின் சூட்சுமம் புரியவில்லை.
இந்த உலகத்தில் ஆரம்பத்திலிருந்து வளர்ந்து, அனைத்தையும் தீர்மானிப்ப வராக வளர்ந்தால்தான் சிறப்பாக செயற்பட முடியும். சூசை, கஸ்ரோவின் ஆட்கள் அப்படியானவர்கள் அல்ல.கஸ்ரோ ஆயுதம் வாங்க உபயோகித்த வர்கள் பெரும்பாலும் அங்குள்ள பல்கலைகழகங்களில் படித்த மாணவர்கள், வைத்தியர்கள், நல்ல பொறுப்பில் இருந்தவர்கள்தான்.
இப்படியான சுவாரஸ்ய சம்பவமொன்றும் உள்ளது. லண்டனை சேர்ந்த மூர்த்தியென்பவர் வைத்தியர். வன்னிக்கு வந்து கஸ்ரோவை சந்தித்துவிட்டு, அமெரிக்காவிற்கு சென்று ஸ்கட் ஏவுகணை வாங்க முயன்றார். இன்றும் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.
இந்த அனுபவமின்மைகளுடன் இன்னொரு நெருக்கடியை புலிகள் எதிர் கொண்டனர். சூசை, கஸ்ரோவின் ஆட்கள் செயற்பட தொடங்கியதும், கே.பி யின் ஆட்கள் பெரும்பாலும் ஒதுங்கிக்கொண்டு விட்டனர். புதியவர்களின் கீழ் செயற்பட அவர்கள் தயாராக இல்லை.
2001 இரட்டை கோபுர தாக்குதலின் பின், உலகளாவிய ஆயுத இயக்கங்களிற்கு ஆயுதங்கள் செல்வதை தடுக்கும் நடவடிக்கையை அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவுஅமைப்பு ஆரம்பித்தது.
புலிகளின் ஆயுத கடத்தல் வலையமைப்புதான் உலகத்தில் பெரிய வலைய மைப்பு என்பதும் சி.ஐ.ஏக்கு தெரியும். முதலில் அதை செயலிழக்க செய்யும் நடவடிக்கையில் இறங்கியது.
இதன் முதற்கட்டமாக கே.பியிடன் செயற்பட்டுவிட்டு, தற்போது ஒதுங் கியுள்ளவர்களை குறிவைத்தனர். அவர்களை கண்காணிப்பு வலயத்திற்குள் கொண்டு வந்துவிட்டு, தம்முடன் ஒத்துழைக்கா விட்டால் கைது செய்துவிடு வோம் என மிரட்டுவார்கள்.
ஏற்கனவே புதிய அணியிலுள்ள கோபம், புலனாய்வு அமைப்பின் மிரட்டல் எல்லாம் சேர, சி.ஐ.ஏ அமைப்புக்கு ஒத்துழைத்து செயற்பட ஆரம்பித்தனர்.
பிறகென்ன, ஆயுதக்கடத்தல் வலையமைப்பின் அத்தனை தகவல்களையும் விரல்நுனியில் வைத்திருக்க ஆரம்பித்தது சி.ஐ.ஏ!
கஸ்ரோவின் கீழ் ஆயுதக்கடத்தல் விவகாரங்களின் ஒரு பகுதியை கண் காணித்து வந்தவர் ஸ் ரீபன். கஸ்ரோ சம்பந்தமான பகுதிகளை ஸ் ரீபன் கவனித்து வந்தார்.
2006 இல் ஸ் ரீபன் இந்தோனேசியாவில் தங்கியிருந்தார். அவரிடம் இரண்டு பாஸ்போர்ட்டுகள் இருந்தன.
ஒன்று இந்தோனேசியா. மற்றையது இங்கிலாந்து. புலிகளின் தளங்களில் இந்தோனேசியாவும் ஒன்று என்பதால், இந்தோனேசிய புலனாய்வாளர்களு டன் சி.ஐ.ஏ அப்பொழுது நெருக்கமான உறவை பேண ஆரம்பித்து விட்டது.
ஒருமுறை இந்தோனேசியாவிலிருந்து ஜேர்மனிக்கு செல்ல புறப்பட்டார் ஸ் ரீபன். விமானநிலையத்திற்கு வந்த ஸ் ரீபனை சாதாரண சந்தேகத்தில் இந் தோனேசிய பொலிசார் ஏதோ விசாரித்தனர். இதை எதிர்பாராத ஸ் ரீபன் தடு மாற்றத்துடன் பதிலளிக்க, சந்தேகம் வலுத்த பொலிசார் அவரை சோதனை யிட்டனர்.
பயணப்பைக்குள் இரண்டு பாஸ்போர்ட்கள் இருந்தன. இரண்டு பாஸ்போர்ட் இருந்ததால் சந்தேகம் வலுத்து, ஸ் ரீபனின் உடமைகளை சோதிக்க, ஒரு லப்ரொப் கணினி இருந்தது. அதை திறக்க, இந்தோனேசிய பொலிசார் மயக்கம் போட்டு விழாத குறையாக அதிர்ந்து விட்டனர்.
அவர்கள் பலநாள் தேடிய விபரங்கள் அதில் இருந்தன. கூரையை பிய்த் துக்கொண்டு கொட்டும் என்பார்களே… அப்படி. புலிகளின் ஆயுதக்கடத்தல் விபரங்கள் சில அதில் சேமிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது!
இந்த தகவல் சி.ஐ.ஏக்கு செல்ல, அவர்கள்இந்தேனோசியாவிற்கு வந்து ஸ் ரீபனை அள்ளிக்கொண்டு அமெரிக்காவிற்கு சென்றனர். கிட்டத்தட்ட இரண்டு மாதகாலம் சி.ஐ.ஏ யின் கட்டுப்பாட்டில் ஸ் ரீபன் இருந்தார்.
இந்த விடயத்தை மிக இரகசியமாக இந்தோனேசிய, அமெரிக்க புலனாய்வு அமைப்புக்கள் வைத்திருந்தன. ஸ் ரீபன் கைதானது, அமெரிக்காவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவது எதுவுமே புலிகளிற்கு தெரிந்திருக்க வில்லை.
திடீரென அவருடைய தொடர்பு இல்லாமல் போய்விட்டது, என்ன நடந்தி ருக்கும் என்றுதான் யோசித்தார்களே தவிர, சி.ஐ.ஏ கைது செய்திருக்கும் என்று சந்தேகிக்கவில்லை. ஸ் ரீபனை கைது செய்து விசாரித்ததில் கிடைத்த தகவல் களை கொண்டு எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் எதையாவது செய்து புலிகளை எச்சரிக்கையடைய வைக்ககும் நடவடிக்கையெதிலும் அமெரிக்க இறங்கவில்லை.
இதனால் புலிகள் அந்த கோணத்தில் சிந்திக்கவுமில்லை.ஸ் ரீபன் ஊடாக கிடைத்த தகவல்கள், கே.பியின் முன்னாள் செயற்பாட்டாளர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் மூலம் புலிகளின் ஆயுதக்கடத்தல் செயற்பாட்டை அமெரிக்க முழுமையாக அறிந்தது. இரண்டு தரப்பிலிருந்தும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கப்பல்களை அடையாளம் கண்டனர்.
கப்பல்களின் நடமாட்டத்தை அறிய, ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய சிறிய கருவிகளை கப்பலில் இரகசிய ஏஜெண்டுகளை வைத்து சி.ஐ.ஏ பொருத்தியதாகவும் புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பிலிருந்தவர்களி டம் இன்றும் ஒரு கருத்து உள்ளது.
அதற்கான வாய்ப்பு உள்ளதென்ற அளவில் ஏற்றுக்கொள்ளலாமே தவிர, அதற்கு ஆதாரம் கிடையாது.அதேவேளை, கப்பல் நடமாட்டத்தை இரகசிய கருவிகள் பொருத்தித்தான் கண்காணிக்க வேண்டுமென்ற அவசியம் அமெரிக் காவிற்கு இருக்கவில்லை.
ஒருமுறை கப்பலின் தரிப்பிடத்தை அடையாளம் கண்டுகொண்டால், பின்னர் செய்மதி வழியாக அதன் அத்தனை நகர்வையும் துல்லியமாக கண்காணித்து கொண்டிருக்கலாம்.
கே.பியின் ஆட்கள் மாறி, கஸ்ரோவின் ஆட்கள் வந்தாலும் ஆயுத பேரம், பணகொடுக்கல் வாங்கல், மற்றும் கப்பல்களின் பதிவு விடயங்கள் அனைத் தும் மாற்றப்படவில்லை. இவர்கள் மூலம் சர்வதேச செயற்பாடுகளில் என்ன நடக்கிறதென்ற அப்டேற்றை கே.பியின் ஆட்கள் பெற்றுக்கொண்டிருந் தார்கள்.
கே.பியின் ஆட்களில் சிலரை ஆரம்பத்தில் சி.ஐ.ஏ இரகசியமாக கடத்தியுமி ருந்தது. அவர்களை கொல்வது அல்லது சிறைவைப்பது சி.ஐ.ஏயின் திட்ட மல்ல.
கே.பியிடமிருந்த பொறுப்புக்கள் கஸ்ரோவிற்கு மாற்றப்பட்டது, கே.பி யின் ஆட்கள் பலருக்கு பிடிக்கவில்லை, அதிருப்தியுடன் இருக்கிறார்கள் என்ற விபரத்தை சி.ஐ.ஏ மோப்பம் பிடித்துவிட்டது.
இரகசியமாக கடத்திச் செல்லப்பட்டவர்களை விசாரித்து தகவல்களை பெற்று, அவர்களை தமது ஆட்களாக வெளியில் உலாவவிடுவதே சி.ஐ.ஏயின் திட்டம்.
இப்படி சி.ஐ.ஏயின் ஆட்களாக உலாவிய கே.பியின் பழைய ஆட்களின் மூல மும் கப்பல்களை அடையாளம் கண்டிருக்கலாம்.
எப்படியோ புலிகளின் கப்பல்கள் வரிசையாக தாக்கப்பட்டு கொண்டே யிருந்தன.
எப்படியாவது ஆயுதங்கள் வன்னிக்கு வந்தால்தான் யுத்தத்தை வெல்லலாம். கடற்புலிகளால் ஒன்றும் செய்ய முடியாமலிருக்கிறதென்ற அதிருப்தி இயக்கத்தில் உருவாக தொடங்க, கடற்புலி தளபதி சிறீராமிற்கு ஒரு ஐடியா வந்தது.
சிறீராம் யார் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்- கொல்லப்பட்ட இசைப்பிரியாவின் கணவன்.
நிக்கோபர் கடற்பரப்பிற்கு சிறிய படகுகளில் செல்ல திட்டமிட்டார்.
(தொடரும்)
அடுத்த தொடர்கள்
அடுத்த தொடர்கள்
18.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 18
ஐந்து வருடங்களிற்கு முன்னரே கருணாவை கணக்குபோட்டு வைத்த பிரபாகரன்!
ஐந்து வருடங்களிற்கு முன்னரே கருணாவை கணக்குபோட்டு வைத்த பிரபாகரன்!
20.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 20
கடற்படைக்கு புலிகள் வைத்த பொறி… துல்லியமாக தாக்கிய புலிகளின் ராங்கிகள்; மாட்டியது ஈ.பி.டி.பி
கடற்படைக்கு புலிகள் வைத்த பொறி… துல்லியமாக தாக்கிய புலிகளின் ராங்கிகள்; மாட்டியது ஈ.பி.டி.பி
24.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 24
புலிகளின் பகுதிக்குள் வெடித்த கிளைமோர்: பின்னணி பொட்டம்மானிற்கு தெரியும்!
புலிகளின் பகுதிக்குள் வெடித்த கிளைமோர்: பின்னணி பொட்டம்மானிற்கு தெரியும்!
30.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 30
காதலால் தவறிய புலிகளின் கொழும்பு இலக்கு… கருணா விசயத்தில் நடந்ததும் அதுதான்!
காதலால் தவறிய புலிகளின் கொழும்பு இலக்கு… கருணா விசயத்தில் நடந்ததும் அதுதான்!
கருணா படித்த பாடசாலையில் பிரபாகரன்தான் ஹெட் மாஸ்டர்!