நீதிமன்றக் கட்டளையை மீறி நீராவியடிப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த மதகுருவின் உடலை எரித்தது இனநல்லிணக்கத்தை குழி தோண்டி புதைப்பதாகும்.

நீதிமன்றக் கட்டளையை மீறி நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த மதகுருவின் உடலை எரித்தது இனநல்லிணக்கத்தை குழி தோண்டி புதைப்பதாகும். அதற்கு உடந்தையாகவும் இன மத முரண்பாடுகளை ஏற்படுத் துவதற்கு பொலிஸாரும் துணை நின்றுள்ளார்கள்.
இது கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்துள்ள இலங்கை தமிழ்அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, இத்தகைய சம்பவங்கள் இனியும் நடக்காது இருப்பதற்கு குறித்த நடவடிக்கையில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப் பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
நீதிமன்ற அவமதிப்புத் தொடர்பில் ஏற்கனவே சிறைவாசம் அனுபவித்த ஞானசார தேரர் தன் குழுவுடன் இணைந்து இந்தக் குற்றச் செயலை மீண்டும் செய்துள்ளார். சிறைவாசம் அனுபவித்த தேரரை ஜனாதிபதி பொது மன்னிப் பில் விடுதலை செய்துள்ளார்.
இந்த நிலையில் மீளவும் நீதிமன்ற அவமதிப்பு இடம்பெற்றுள்ளது. இதற்கு ஜனாதிபதி என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளார் என்பதை நாங்கள் மட்டுமன்றி அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம். இத்தகைய இன மத விரேத செயற்பாடுகள் இந்து மத கோவில்களை ஆக்கிரமித்து புத்தர் சிலைகளையும் விகாரைகளையும் கட்டுவது தொடர்கின்றது.
இத்தகைய நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் பௌத்தகுருமார் அத்துமீறிச் செயற்படுவதை நிறுத்தவும் ஆக்கிரமிக்கப்பட்ட அத்துமீறிய செயற்பாடுக ளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து ஏனைய மத நடவடிக்கைகளுக்கும் இந்து தலங்களுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் நீதி கிடைக்கவேண்டும் என ஜனாதிபதியிடம் வற்புறுத்துகின்றோம் எனத் தெரிவித்துள்ளாா்.