எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி அன்னம் சின்னத் தில் களமிறங்கவுள்ளது.
நேற்றும் இன்றும் ஐக்கிய தேசிய முன் னணியின் பங்காளி கட்சிகளின் தலை வர்களிற்கிடையில் நடந்த சந்திப்பில் இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க, ராஜித சேனா ரத்ன, மனோ கணேசன், சம்பிக்க ரண வன்ன, ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் இதற்காக இணக்கம் வெளியிட்டுள்ள னர்.
அடுத்த மாதம் 9ம் திகதி காலி முகத்திடலில் பிரமாண்ட பேரணியை ஏற்பாடு செய்து, கூட்டணி ஒப்பந்தம் செய்து கொள்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஒக்ரோபர் 3ம் திகதி ஐ.தே.க பிரமாண்ட பேரணியை செய்து, அதில் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக பகிரங்கமாக அறிவிக்க தீர்மானித் துள்ளது.
இதேவேளை, இன்று அலரி மாளிகையில் கட்சி முக்கியஸ்தர்களுடனான சந் திப்பின் போது சஜித்தை வேட்பாளராக்க இணக்கம் வெளியிடப்பட்டது. ஐந்து நிபந்தனைகளின் கீழேயே இவர் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.