
கருணா பிரிவு சமயத்தில், திருகோணமலை
தளபதியாக இருந்த பதுமனை புலிகள் எப்படி வன்னிக்கு அழைத்துச் சென் றார்கள் என்பதை இந்த தொடரில் ஏற் கனவே குறிப்பிட்டிருக்கின்றோம்.
தளபதி சொர்ணம் தான் இந்த நடவடிக்கையை கச்சிதமாக செய்தார். விடு தலைப்புலிகள் அமைப்பிற்குள் ஏற்பட்ட இரண்டு குழப்பத்திலும் பிரபாகர னிற்கு நம்பிக்கையானவராக, அவருக்கு ஆபத்தில் உதவும் முதல் மனிதராக சொர்ணம் இருந்தார்.
சொர்ணத்தின் வரலாற்றை அறிந்தாலே இந்த பிணைப்பை புரிந்து கொள்ள லாம்.
1994 இல் மாத்தையா விவகாரம் புலிகளிற்குள் சிக்கலை தோற்றுவித் தது. வன்னிப் படையணி மாத்தையாவிடம் இருந்தது.
மாத்தையாவின் தீவிர விசுவாசிகளாக, அறியப்பட்ட சண்டைக்காரர்களான சுரேஸ் போன்றவர்கள் இருந்தார்கள். மாத்தையாவை கைது செய்யும்போது நிச்சயம் பெரிய சண்டை மூளுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சொர்ணம் அதனை வித்தியாசமாக கையாண்டார்.
அதனை விபரமாக பின்னர் பார்க்கலாம்.1964 இல் பிறந்த சொர்ணத்தின் இயற் பெயர் யோசப் அன்ரனிதாஸ். யாழ்ப்பாணம் மானிப்பாயில் பிறந்தபோதும் திருகோணமலையின் அரசடி வாழைத்தோட்டம் என்ற சிறிய கிராமம்தான் சொர்ணம் வளர்ந்த இடம்.
1983 இல் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து, இந்தியாவின் மூன்றா வது பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றார். இதே பயிற்சி முகாமில்தான் கருணாவும் பயிற்சி பெற்றார்.
பயிற்சியின் பின்னர் இந்தியாவில் தங்கியிருந்த சொர்ணத்தின் நடவடிக்கைகள் பிரபாகரனிற்கு பிடித்து போய் விட்டது.
அமைப்பிற்காக எந்த வேலையையும் செய்ய தயாராக இருந்ததுடன், தலைமை மீது அளவற்ற விசுவாசம் வைத்திருந்தார். அதனால், பிரபாகரனின் மெய்பாதுகாவலராகவும் செயற்பட்டார்.
விடுதலைப்புலிகள் அமைப்பில் ஆரம்பகால போராளிகள் குறைந்தளவானவர்கள். அனைவரும் பிரபாகரனு டன் பரிச்சயமானவர்கள்.
அவர்கள் எல்லோரையும் விட சொர்ணத்தில் வித்தியாசமான பிணைப் பொன்றை பிரபாகரன் பேணினார். பின்னாளில் சொர்ணத்தின் நடவடிக்கைகள் சிலவற்றில் அதிருப்தியடைந்து அவரை தள்ளிவைத்த போதும், நெருக்கடியான சமயம் ஏற்படும்போது முதலாவது ஆளாக சொர்ணத்தைதான் பிரபாகரன் அழைத்தார்.
இருவருக்குமிடையிலான பிணைப்பிற்கு இதுதான் சாட்சி. 1990இல்தான் தேர்ச்சி மிக்க படையணியொன்றின் மூலம் பிரபாகரனின் பாதுகாப்பை உறுதி செய்வதென விடுதலைப்புலிகள் அமைப்பு முடிவுசெய்தது. அந்தப் பொறுப்பு சொர்ணத்திடம் வழங்கப்பட்டது.
இம்ரான்- பாண்டியன் படையணியென்ற பெயரில் ஒரு படையணியை உரு வாக்கி பிரபாகரனின் பாதுகாப்பை சொர்ணம் கவனித்துக் கொண்டார். பின்னாளில் பிரபாகரனின் பாதுகாப்பை நேரடியாக கவனித்துக்கொள்ளும் பொறுப்பு கடாபியிடம் சென்றாலும், சொர்ணம் அந்த படையணியின் தளபதியாக 1995 வரை இருந்தார்.
இரண்டாம் ஈழப்போர் காலத்தில் யாழ்ப்பாண குடாநாடுதான் புலிகளின் பிர தான போர்த்தளம். வடக்கில் பலாலி தளமும், தென்கிழக்கு பகுதியில் ஆனை யிறவுத் தளமும் இருந்தன. இந்தப்பகுதிகளை மையமாக வைத்தே பிரதான சண்டைகள் நடந்தன. இந்தக்களங்களில் சொர்ணம் ஈடு இணையற்ற தளப தியாக அப்போது விளங்கினார்.
அந்த சமயத்தில் புலிகளிடம் இரண்டு நட்சத்திர தளபதிகள் இருந்தனர். ஒருவர் பால்ராஜ். அவர் அதிகம் வன்னியை தளமாக கொண்டிருந்தார். மற்றையவர் சொர்ணம். இவர் யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டிருந்தார். ஆனால் பெரும் பாலும் யாழில் நடந்த பெரும்பாலான களங்களை இருவருமே பங்கு போட்ட னர்.
1990 களில் சொர்ணம் அச்சுறுத்தும் தளபதியாக இருந்தார். இராணுவம் சொர்ணத்தை பிரிகேடியர் என தொலைத்தொடர்பு கருவிகளில் அழைத்து கொள்வதாக அப்போது போராளிகளிடம் பேச்சிருந்தது. போரா ளிகளும் சொர்ணம் என்றால் சிறுநீர் கழிக்காத குறையாக பயப்பிடுவார் கள்.
அவ்வளவு சக்திமிக்கவராக, கோபக்காரராக வலம் வந்தார். அவரது கட்ட ளையில் நடந்த தாக்குதல்களும் வெற்றியடைய, பேராளுமையாக உருப்பெற் றார்.
சொர்ணம் என்பதும் குறிப்பிட வேண்டியது கட்டைக்காடு ஆயுதக் களஞ் சியம் மீதான தாக்குதல்.
ஆனையிறவு மீது புலிகள் நடத்திய ஆகாய கடல்வெளி சமரின் பின் புலிக ளிற்கு ஆயுதப்பஞ்சம் ஏற்பட்டது. ஆயுத இருப்பை உறுதி செய்யாவிட்டால் அடுத்தடுத்து இராணுவம் மேற்கொள்ளும் பெரிய நடவடிக்கைகளை தாக்குப் பிடிக்க முடியாதென்ற இக்கட்டான நிலை புலிகளிற்கு உருவானது.
இந்த சமயத்தில் சொர்ணம் தனது படையணியுடன் கட்டைக்காடு ஆயுதக் களஞ்சியத்தை கைப்பறினார். அந்த ஆயுதங்கள் புலிகளிற்கு பெரும் துணை யாக இருந்தன.1990களின் பின்னர் புலிகள் கூட்டுப்படை தலைமையகம் என்ற கட்டமைப்பை ஏற்படுத்தினார்கள்.
இதன் முதலாவது தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். அப்போது வன்னியில் மாங்குளம், கொக்காவில் மற்றும் ஆனையிறவு தாக்குதல்களில் சிறப்பாக செயற்பட்டு, நட்சத்திரமாக உருவாகியிருந்தார் பால்ராஜ்.
பால்ராஜின் தாக்குதல் திட்டமுறை வேறு, சொர்ணத்தின் முறை வேறு.
பால்ராஜ் எதையும் நுணுக்கமாக திட்டமிடுபவர். ஒரு திட்டம் சிக்கலானால் மாற்று, அதற்கு மாற்று என நிறைய உபாயங்களை தயார்படுத்திக் கொள்பவர். ஆளணி இழப்பை தவிர்த்து, தந்திரோபாய நகர்வுகளிற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்.
ஆனால் சொர்ணம் வேறு மாதிரி. எல்லாமே அதிரடிதான் அவரது பாணி.
அவ் வளவு நுணுக்கமான திட்டமிடல் இருப்பதில்லை. ஆக்ரோசம்தான் மூலதனம். மண்டைதீவு தாக்குதல், கட்டைக்காடு முகாம் தாக்குதல் என்பவற்றில் புதிய போருத்திகளை சொர்ணம் கையாண்டார்.
கட்டைக்காடு தாக்குதலில்தான் எதிரிகளின் நிலைக்கு பின்புறமாக வந்து, பிடரியில் அதிர்ச்சியடி அடிக்கும் உத்தியை கையாண்டார்கள். அது இறுதி வரை வெற்றிகரமான உத்தியாக இருந்தது.
எனினும், இப்படி ஓரிரண்டு தாக்குதல்கள் தான் சொர்ணத்தின் பெயர் சொல்பவையாக அமைந்தன.
மற்றும்படி, “அதோ தெரிகிறது இலக்கு, தாக்கு“ உத்திதான். இது ஆரம்பத்தில் கைகொடுத்தாலும், பின்னர் கைகொடுக்கவில்லை.
கூட்டுப்படை தலைமைய தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்ட பின்னர் விமர்சனமொன்று கிளம்பியது. அந்த பொறுப்பிற்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர் சாள்ஸ் அன்ரனி படையணி தளபதியாக செயற்பட்டவர்.
அந்தப் பொறுப்பிலிருந்து கூட்டுப்படை தலைமையகத் தளபதியாக மாற்ற ப்பட்ட பின்னரும், அவர் படையணி தளபதியாகவே செயற்படுகிறார் என்ற விமர்சனம் கிளம்பியது. அனைத்து விடயங்களிலும் சாள்ஸ் அன்ரனி படை யணியை முன்னிலைப்படுத்தியே அவர் செயற்பட்டதாக மற்றைய தளபதி களிடம் அதிருப்தியேற்பட்டது.
இந்த விமர்சனங்களையடுத்து, கூட்டுப்படை தலைமை தளபதியாக சொர்ணம் நியமிக்கப்பட்டார். 1996 இல் யாழ்ப்பாண குடாநாட்டை இராணுவம் கைப்பற்றும்வரை அந்தப் பொறுப்பில் சொர்ணம் செயற்பட்டார்.
1996 சூரியக்கதிர் நடவடிக்கைதான் சொர்ணத்திற்கு சரிவை ஏற்படுத்தியது. அதன்பின் அவர் தன்னை நிரூபிக்கவே முடியவில்லை. எல்லா களங்களிலும் சறுக்கினார். யாழ்ப்பாண குடாநாட்டை கைப்பற்றும் நோக்கில் 1995 இல் சூரியக் கதிர் நடவடிக்கை ஆரம்பமானது.
அந்த பெருமெடுப்பிலான நடவடிக்கையை புலிகள் எதிர்கொள்ள முடிய வில்லை. இயன்றவரை போரிட்டபடி பின்வாங்கினார்கள். இந்த சமரில் சொர்ணத்தின் திட்டங்கள் பயனளிக்கவில்லை. குறிப்பாக தென்மராட்சியை இராணுவம் கைப்பற்றிய விவகாரம்.
அந்த சமயத்தில் ரவி என்பவர் யாழ்மாட்ட தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். ரவி அறியப்பட்ட தளபதியல்ல. சூரியக்கதிர் நடவடிக்கையில் எங்கோ ஒரு மூலையில் சிறப்பாக செயற்பட்டார் என, தென்மராட்சியில் யுத்தம் மையம் கொண்ட சமயத்தில் ரவி தளபதியாக்கப்பட்டார்.
ரவிக்கு வழங்கப்பட்டிருந்த படைய ணியை சரியான இடங்களில் நிறுத்த வில்லை. இதனால் இரவோடு இர வாக இராணுவம் சிக்கலில்லாமல் சாவகச்சேரிக்குள் நுழைந்தது. அனைவரும் வன்னிக்கு தப்பிச்செல்ல வேண்டியேற்பட்டது.
யாழ்ப்பாண தோல்விக்கான முழு பொறுப்பும் இரண்டுபேரின் தலையில் விழுந்தது. ஒருவர் ரவி. அவர் சாதாரண போராளியாக படையணியில் விடப்பட்டார். சிறிது காலத்தில் அமைப்பிலிருந்து விலகி சென்றுவிட்டார். அடுத்தவர் சொர்ணம்.
அவர் திருகோணமலை மாவட்ட தளபதியாக அனுப்பப்பட்டார்.
(தொடரும்)
அடுத்த தொடர்கள்
அடுத்த தொடர்கள்
18.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 18
ஐந்து வருடங்களிற்கு முன்னரே கருணாவை கணக்குபோட்டு வைத்த பிரபாகரன்!
ஐந்து வருடங்களிற்கு முன்னரே கருணாவை கணக்குபோட்டு வைத்த பிரபாகரன்!
20.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 20
கடற்படைக்கு புலிகள் வைத்த பொறி… துல்லியமாக தாக்கிய புலிகளின் ராங்கிகள்; மாட்டியது ஈ.பி.டி.பி
கடற்படைக்கு புலிகள் வைத்த பொறி… துல்லியமாக தாக்கிய புலிகளின் ராங்கிகள்; மாட்டியது ஈ.பி.டி.பி
24.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 24
புலிகளின் பகுதிக்குள் வெடித்த கிளைமோர்: பின்னணி பொட்டம்மானிற்கு தெரியும்!
புலிகளின் பகுதிக்குள் வெடித்த கிளைமோர்: பின்னணி பொட்டம்மானிற்கு தெரியும்!
30.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 30
காதலால் தவறிய புலிகளின் கொழும்பு இலக்கு… கருணா விசயத்தில் நடந்ததும் அதுதான்!
காதலால் தவறிய புலிகளின் கொழும்பு இலக்கு… கருணா விசயத்தில் நடந்ததும் அதுதான்!
கருணா படித்த பாடசாலையில் பிரபாகரன்தான் ஹெட் மாஸ்டர்!