728x90 AdSpace

<>
Latest News
Tuesday, 17 September 2019

எனக்கு மேலேயும் செல் அடியுங்கள்‘… கட்டளை மையத்தை நிலைகுலைய வைத்த செல்வி: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 67

ஓயாத அலைகள் இரண்டு நடவடிக் கையை
வெற்றிகொள்ள வேண்டுமென்றால் கிளிநொச்சியிலுள்ள படையினருக்கு ஆனையிறவு பின் தளத்திலிருந்து உதவி கிடைக்கக்கூடாது. உதவியை தடுக்கும் பொறுப்பு பால்ராஜிற்கு கொடுக்கப்பட்டது என்பதை கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம். கிளிநொச்சிக்கும் பரந்தனிற்குமிடையில் இரகசி யமாக ஊடறுத்து நகர்ந்து அணியுடன் நிலையெடுத்தார் பால்ராஜ்.

கிளிநொச்சி மோதலில் தாக்குபிடிக்க முடியாமல் தப்பியோடி வந்த படையினர் ஊடறுத்த போராளிகளுடன் கைகலப்பில் ஈடுபட்டதை கடந்த வாரம் குறிப்பிட் டிருந்தோம். லெப்.கேணல் செல்வியின் நிலைக்கருகில் இராணுவம் குழுமி விட்டது. ஆனமட்டும் சுட்டு படையினரை வீழ்த்தினார்கள் போராளிகள். இறுதி யில் போராளிகளின் கையிருப்பில் இருந்த வெடிபொருள் தீர்ந்துவிட்டது. இரா ணுவம் போராளிகளை சூழ்ந்துவிட்டது. அடுத்து என்ன செய்யலாம்? செல்வி ஒரு அதிரடி முடிவெடுத்தார். போராளிகளிற்கு உதவியாக ஆட்லறி தாக்குதல் செய்து கொண்டிருந்த ஆட்லறி அணியை தொடர்பு கொண்டார். 

தமது நிலை அமைந்துள்ள அமைவிடத்தை கணித்து, அந்த இடத்திற்கு ஆட் லறி செல் அடிக்க சொன்னார். எனினும், ஆட்லறி அணி தயங்கியது. போராளி கள் இருக்குமிடத்தை குறிவைத்து எப்படி செல் அடிப்பதென தயங்கி, மறுத்தார் கள். ஆனால் செல்வி உறுதியாக இருந்தார். தான் அறிவித்த அமைவிடத்திற்கு செல் அடிக்க சொல்லி உறுதியாக இருந்தார். இயன்றவரை பதுங்குகுழிக்குள் இருந்து கொள்வதாக செல்வி கூறினார். பகுதி கட்டளை தளபதியுடன் கலந்து ரையாடி செல்வியின் நிலை மீது எறிகணை தாக்குதல் நடத்துவதாக முடிவாகி யது. 

குடாரப்பு தரையிறக்கத்திற்கு தயாராகிய சமயத்தில் இதற்குள் செல்வியின் நிலை வாசல் வரை இராணுவம் வந்துவிட்டது. எஞ்சிய ரவைகளை வைத்து அவர்களையும் போராளிகள் வீழ்த்திக் கொண்டிருக்க, புலிகளின் எறிகணை மழை ஆரம்பித்தது. அந்த பகுதியில் குழுமிய படையினர் பெரும்பாலானவர் கள் வீழ்ந்தார்கள். செல்வி இருந்த பதுக்குகுழி “ஐ“ பங்கர் வகையை சேர்ந்தது. அதாவது, மேல் பக்கம் மூடப்படாமல் நான்கு, ஐந்து அடி நீளத்தில் வெட்டப் படும், ஒரே நீளமான பங்கர். அன்று இரவு இராணுவ பகுதிக்குள் நுழைந்து அவ சர அவசரமாக வெட்டிய சிறிய பதுக்கு குழிகள் அவை. நேரடி துப்பாக்கிச் சூட்டி லிருந்து பாதுகாத்து கொள்ளத்தான் உகந்தவை. எறிகணை தாக்குதலிலிருந்து தப்பிக்க உகந்தவை அல்ல. 

அந்த எறிகணை தாக்குதலில் ஏராளம் இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். செல்வியும் சில போராளிகளும் மரணமானார்கள். இப்படியான அர்ப்பணிப்புக் களால் அந்த ஊடறுப்பு சமர் வெற்றியடைந்தது. அனைத்திற்கும் முக்கிய கார ணம், பால்ராஜின் திட்டமிடல், வழிநடத்தல். இதன்பின் பால்ராஜின் பெயர் சொன்ன அடுத்த பெரிய தாக்குதல் குடாரப்பு தரையிறக்கம். விடுதலைப்புலிக ளின் பெருங்கனவுகளில் ஒன்று ஆனையிறவை கைப்பற்றல். ஆனால் பன்னி ரண்டு வருடங்களாக அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்க வில்லை. அதற்கு இரும்புக்கோட்டையென இராணுவம் சும்மா பெயர் வைத்தி ருக்கவில்லை. 

உண்மையிலேயே இரும்புக்கோட்டையாகத்தான் இருந்தது. 1991 இல் ஆகாய கடல் வெளி சமர் என பெயரிட்டு பிரமாண்ட தாக்குதல் ஒன்றை ஆனையிற வின் மீது தொடுத்தார்கள். அதில் போராளிகள் மரணமடைந்தார்கள். 53 நாட்கள் நடந்த இந்த சமரில் புலிகள் வெற்றியடைய முடியவில்லை. இப்பொழுதும் ஆனையிறவு பகுதியால் பயணிப்பவர்கள் ஒரு காட்சியை காணலாம். படையி னர் ஒரு யுத்த கவச வாகனத்தை காட்சிப்படுத்தி, ஒரு இராணுவ வீரனை நினைவு கூர்கிறார்கள். 

முன்னர் புலிகள் அந்த இடத்தை நினைவுகூர்ந்தனர். குடாரப்பு தரையிறக்கம் வெட்டைவெளியை கடந்து இராணுவ பகுதியை நெருக்க முடியாமலிருந்து புலிகள் கவச வாகன உத்தியை பாவித்தார்கள். இரும்பு கவசங்களால் டோசர் ஒன்றை மறைத்து, கையெறி குண்டுகளால் தாக்கப்பட முடியாதவாறு நெற் அடித்து வாகனமொன்றை தயார் செய்தனர். அதை லெப்.கேணல் சராவும் (கல்வியங்காட்டை சேர்ந்தவர்) மேஜர் குததாசும் கவச வாகனத்தை நகர்த்தி செல்ல, அதன் மறைவில் போராளிகள் முன்னேறுவது திட்டம். இந்த கவச வாகனத்தை படையினரால் தடுத்து நிறுத்தவே முடியவில்லை. 

படையினரின் நிலையை நெருங்கிய சமயத்தில் லான்ஸ் கோப்ரல் காமினி குலரத்ன என்ற சிப்பாய் திடீரென கவச வாகனத்தில் ஏறி, அதற்குள் கையெறி குண்டை வீசிவிட, வாகனத்திலிருந்தவர்கள் கொல்லப்பட்டனர். காமினி குல ரத்னவும் உயிரிழந்தார். அவரது நினைவிடத்தையே படையினர் தற்போது உருவாக்கி வைத்துள்ளனர். அதன்பின் 1998 இலும் ஆனையிறை புலிகள் தாக்கி னார்கள். வெற்றியடைய முடியவில்லை. இந்த அனுபவங்களை வைத்து, 2000 இல் ஒரு திட்டம் தீட்டினர். 

வெட்டைவெளி, மற்றும் கடலால் சூழப்பட்ட இயற்கை பாதுகாப்பை கொண்ட ஆனையிறவை நேரடியாக மோதி வெற்றிபெற முடியாதென்பதை தெரிந்த புலிகள் தீட்டியது, உலகப்போரியல் அறிஞர்களையே மலைக்க வைக்கும் திட் டம். வெற்றிலைக்கேணியில் இருந்து புறப்பட்ட புலிகளின் அணி 5 கடல்மைல் பயணம் செய்து குடாரப்பில் தரையிறங்கினார். கடற்படை மற்றும் கரையோர இராணுவ நிலைகளிற்கு தெரியாமல் கடலில் சுமார் 1,200 போராளிகளை கொண்டு செல்வது சாதாரண காரியமல்ல. 

குடாரப்பில் தரையிறங்குவதற்கு வசதியாக இராணுவத்தை திசைதிருப்ப புலி கள் ஒரு கரும்புலி தாக்குதல் செய்தனர். பளையில் அமைந்திருந்த ஆட்லறி நிலைகள் மீது ஒரு திடீர் தாக்குதல் நடத்தினர். படையினரின் கவனம் திசை திரும்பியிருந்த சமயத்தில் குடாரப்பில் தரையிறங்கிய போராளிகள் சுமார் பத்து கிலோமீற்றர் தூரம் மணல், சதுப்பு பகுதிகளை கடந்து இத்தாவிலில் பிர தான வீதியை ஊடறுத்து நிலைகொண்டனர். இதுவே பின்னாளில் பிரபலமான குடாரப்பு தரையிறக்கமும், இத்தாவில் BOXஉம்! ஆனையிறவு, யாழ்ப்பாணப் பகுதியில் 40,000 இராணுவம் நிலைகொண்டிருந்தது. 

இத்தாவிலில் நிலைகொண்டிருந்த 1,200 போராளிகளையும் சுற்றிவளைத்து இராணுவம் மூர்க்கமாக தாக்கியது. டாங்கிகள், கவசவாகனங்கள், ஆட்லறிகள் கொண்டு இராணுவம் மூர்க்கமாக தாக்கியது. கற்பனைக்கெட்டாத பெரும் போர் அது. ஆனையிறவிற்கான உண்மையான யுத்தமுனை அதுதான். பால் ராஜ் அதை வழிநடத்தினர். வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு பகுதியிலுள்ள தளங்களை தாக்கும் முனைகளை தீபன் வழிநடத்தினார். இந்த இடங்களை கைப்பற்றியதன் மூலம் பால்ராஜ் அணிக்கான தரைத்தொடர்பு ஏற்பட்டது. 

34 நாட்கள் பால்ராஜ் அணி அங்கு நிலைகொண்டதன் மூலம் ஆனையிறவு படையினருக்கு உணவு, வெடிமருந்து தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையெல்லாம் விட குடிதண்ணீர் பிரச்சனை ஏற்பட்டது. ஏனெனில் ஆனையிறவு படையின ருக்கான குடிதண்ணீர் இயக்கச்சி பகுதியில் இருந்துதான் சென்றது. புலிகள் அதை தடைசெய்த பின்னர் படையினரால் ஆனையிறவில் நிற்க முடிய வில்லை. கிளாலி கரையோரத்தால் தப்பியோடிவிட்டனர்.

குடாரப்பு தரையிறக்கம், இத்தாவில் BOX மூலம் பால்ராஜ் இந்த அதிசயத்தை நிகழ்த்தினார். குடாரப்பு தரையிறக்கத்திற்கு புறப்படுவதற்குமுன் போராளிகள் மத்தியில் பால்ராஜ் சொன்னது இதைதான்- “கடற்புலிகள் இப்பொழுது எங் களை கொண்டுபோய் இறக்கி விடுவார்கள். ஏற்றுவதற்கு திரும்பி வரமாட்டார் கள். பாதையெடுத்து நாங்கள்தான் திரும்பி வர வேண்டும்“

அடுத்த தொடர்கள்
































கருணா படித்த பாடசாலையில் பிரபாகரன்தான் ஹெட் மாஸ்டர்!

































  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: எனக்கு மேலேயும் செல் அடியுங்கள்‘… கட்டளை மையத்தை நிலைகுலைய வைத்த செல்வி: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 67 Rating: 5 Reviewed By: Bagalavan