தளபதி பால்ராஜின் குடும்ப வாழ்வில் சில குழப்பங்கள்
வந்திருந்தது என்பதை கடந்த பாகத் தில் குறிப்பிட்டிருந்தோம். இது தனி மனித விவகாரம்- அந்த பெரிய ஆளு மையை மதிப்பிடும் விவகாரமல்ல- என்பதால், அந்த பகுதியை அதிகம் பேசாமல் கடந்து செல்கின்றோம்.
குடு ம்ப உறவுகள் தொடர்பில் பிரபாகரனிடம் எப்படியான பார்வை இருந்தது என் பதையும் கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம்.
தனி மனித ஒழுக்கத்தில் ஒரு மகானாகவே வாழ்ந்தவர் பிரபாகரன். அவரது தனி மனித ஒழுக்கத்தைப் பற்றி ஒரு சிறு வதந்திகூட எழுந்ததில்லையென்ப திலிருந்தே, அவரது தனி மனித ஒழுக்கத்தை புரிந்து கொள்ளலாம். தனது அமைப்பிலுள்ள அனைவரும் அப்படியே இருக்க வேண்டுமென்றும் பிரபாகரன் விரும்பினார்.
குறிப்பாக தளபதிகள். சு.ப.தமிழ்செல்வனின் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்ட போது, பிரபாகரன் எப்படி நடந்து கொண்டார் என்பதை பற்றி ஏற்கனவே குறிப் பிட்டுள்ளோம். பால்ராஜ் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம், பிரபாகரனை கோப மடைய வைத்தது. தளபதிகள் முன்னுதாரணமாக இருக்க வேண்டுமென்பது பிரபாகரனின் நிலைப்பாடு.

பால்ராஜ் குடும்பத்திற்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தை கையாள்வதற்கு வசதி யாக, அவரை ஒரு இடத்தில் தங்க வைக்க முடிவெடுத்தார் பிரபாகரன். அந்த பொறுப்பு வழங்கப்பட்டது- உள்ளக புலனாய்வு பிரிவுப் பொறுப்பாளர் காந்தியி டம்!
பால்ராஜை உங்களிடம் தருகின்றோம், சில தளபதிகள் அவரை தொடர் ந்து சந்திப்பார்கள் என காந்திக்கு சொல்லப்பட்டிருந்தது.
இந்த சமயத்தில் ஒரு குழப்பம் ஒன்று நேர்ந்தது. காந்தியின் கீழிருந்த உள்ளக பாதுகாப்பு பிரிவின் பிரதான சிறைச்சாலை, வள்ளிபுனத்தில் அமைந்திருந்தது. யுத்தத்தின் பின்னர் படையினர் கைப்பற்றிய பின்னர் அதன் படங்கள் வெளியா கியிருந்தன.

அதேவேளை, போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தான பின்னர், சர்வதேச நியமனங்களிற்குட்பட்ட சிறைச்சாலையொன்றை விசுவமடு- தொட்டியடிக்கு அப்பால் அமைத்திருந்தனர்.
வள்ளிபுனம் சிறைச்சாலைக்குச் சற்று வெளியில், சிறைச்சாலை நிர்வாகத்திலுள்ள போராளிகள் தங்கியிருக்கும் வீடொன்று இருந்தது. அந்த வீட்டில் பால்ராஜ் தங்க வைக்கப்பட்டார்.
புலிகளின் மூத்த உறுப்பினர்கள் நடேசன், யோகி, தமிழேந்தி, பேபி சுப்ரமணி யன், பரா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சிலர் தினமும் பால்ராஜை சந்தித்து பேசி, கவுன்சிலிங்கை ஒத்த முறைமையொன்றை பிரபாகரன் ஏற்பாடு செய் தார்.

சமநேரத்தில் வரதாவுடனும் மூத்த பெண் போராளிகள் பேசி, இருவரையும் இணைத்து வைக்க விரும்பினார்கள்.
எனினும், வரதா மனரீதியாக காய மடைந்திருந்தார். மீண்டும் இணைந்து வாழ அவர் உடன்படவேயில்லை. அதே வேளை, மீண்டும் வரதாவுடன் இணைவது குறித்து பால்ராஜ் எப்படியான நிலைப்பாட்டில் இருந்தார் என்பதை இந்த கட்டுரையாளரால் உறுதிசெய்ய முடியவில்லை.
அதனால் இந்த விவகாரத்தை இத்துடன் முடித்து கொள்ளலாம். விடுதலைப் புலிகளின் விசுவமடு சிறைச்சாலை நடந்த விவகாரங்கள் பால்ராஜை பெரு மளவு பாதித்து விட்டது. உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் அவர் பாதிக்கப் பட்டிருந்தார். நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற உடல் பிரச்சனைகளால் பாதிக் கப்பட்டிருந்தார்.

அதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். எனினும், அவர் உடலில் அக் கறை கொள்ளவில்லை. மருத்துவ சிகிச்சை பெற்றாலும் மாத்திரைகளை சீராக பாவிப்பதில்லை, உணவுக்கட்டுப்பாடு இல்லையென வைத்தியர்கள் முணு முணுத்தார்கள். ஆனாலும் அவரை கட்டுப்படுத்த யாராலும் முடியாது.
ஒரு பிக்கப். இரண்டு மூன்று போராளிகள். ஒரு வசதிக்குறைவான தங்குமிடம். உணவு வசதிகளிற்காக செலவு செய்யவோ, இதர வசதிகளை பெறவோ அவர் கட்டாயமாக மறுத்து வந்தார்.
அவருக்கு ஒதுக்கப்பட்ட வசதிகளையே அவர் பெறவில்லை.
உடல்நிலை மோசமாகி சில தடவை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தார். எங்கிருந்தாலும், என்ன உடல் நிலையிலிருந்தாலும் போராட்டம் பற்றியே அவர் சிந்தித்துக் கொண்டிருந்தார். இதற்கு ஒரு சுவாரஸ்யமான உதாரணம் உள்ளது.
விடுதலைப்புலிகள் சுயநிர்ணய உரிமைபற்றி பேச ஆரம்பித்த சமயம். அன்ரன் பாலசிங்கம் வன்னிக்கு வரும் சமயங்களில் உள்ளக சுயநிர்ணயம், வெளியக சுயநிர்ணயம் பற்றி போராளிகளிற்கு வகுப்பெடுப்பார். தொடர்ச்சி யாக படையணிகளிற்கு அந்த வகுப்பு நடைபெற்றது.
அப்போது புதுக்குடியிருப்பில் இருந்த பொன்னம்பலம் வைத்தியசாலையில் பால்ராஜ் அனுமதிக்கப்பட்டிருந்தார். நீரிழிவு உச்சமடைந்து வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
குறிப்பிட்ட பிரிவின் போராளிகள் சிலர் பால்ராஜை பார்க்க வைத்தியசாலைக்கு சென்றனர்.
உடல்நலமில்லாத பால்ராஜ் நன்றாக ஓய்வெடுத்துக் கொண்டிருப்பார் என்று தான் போன போராளிகள் நினைத்தனர். அவருக்கு எப்படி ஆறுதல் செல்லலா மென திட்டமிட்டபடி போனார்கள். அவர்கள் போனபோது சிறிய குறிப்பு புத் தகத்தில் எதையோ குறித்தபடியிருந்தார். வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்த காலத்திலும் புதுப்புது யோசனைகளை குறிப்பு புத்தகங்களில் எழு தியபடி தான் இருப்பார்.

செய்திகளை கவனித்து அமைப்பு செய்யச் வேண்டிய நடவடிக்கைகளையும் குறித்து வைப்பார். இந்த போராளிகள் போனதும், சாதாரண சிரிப்புடன் வர வேற்ற பால்ராஜ், அவர்களை உட்காரச் சொல்லிவிட்டு, தலைமாட்டில் இருந்த ஒரு குறிப்பு புத்தகமொன்றை எடுத்து, உள்ளக சுயாட்சி பற்றி அவர்களிற்கு நடந்த வகுப்பை விமர்சிக்க ஆரம்பித்தார்.
பால்ராஜை அறிந்தவர்களிற்கு தெரியும், அவரது பேச்சு பாணி. ஊரில் கிரந்தம் கதைப்பது என்பார்கள். அதை அவர் அடிக்கடி பாவிப்பார். “ம்… உள்ளக சுய நிர் ணயம் பற்றியெல்லாம் கதைக்கிறியளாம்.. ம்.. இனியென்ன நீங்கள் எல்லா ரும் உள்ளக சுயநிர்ணய உரிமையை எடுத்து சுதந்திரமாக இருக்கப் போறியள். இயக்கமும் ஆரம்பத்திலிருந்து உள்ளக சுயநிர்ணயத்தைதானே கேட்டது.

மாவீரர் எல்லாரும் அதுக்காகத்தானே வீரச்சாவடைந்தவை“ என ஆரம்பித்து ஒரு கட்டத்தில் கோபத்துடன் சொன்னார்- “இவையெல்லாம் என்ன விளை யாடிக் கொண்டிருக்கினம். உள்ளக சுயாட்சி எடுக்கிறதுக்காகவா இத்தனை ஆயிரம் பொடியளை களத்தில சாகக் குடுத்தனான்“ என. இதை சொன்னபோது அவர் முகம் சிவந்து போயிருந்தது.
கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் அந்த போராளிகள் பால்ராஜூடன் இருந்தனர். இடையில் அவர்கள் வாய்திறந்து, உடம்பு எப்படி என ஒரு வார்த்தை கேட்க முடியவில்லை. பால்ராஜே பொரிந்து தள்ளினார். இதுதான் பால்ராஜின் இயல்பு. ஆனால் துரதிஷ்டவசமாக அவரது திருமண பிரச்சனை பிரபாகரனு டனான உறவை சிதைத்து விட்டது.

தனிப்பட்ட வாழ்க்கை நெறி பிரதானமானதென நினைப்பவர் பிரபாகரன். தனிப் பட்ட வாழ்க்கையில் பிரச்சனையுடையவர்கள் யாருமே எந்தக்காலத்திலும் பிரபாகரனிற்கு அருகில் இருந்ததில்லை. அவரது இயக்க வாழ்க்கையின் ஆரம்பத்தில் உமாமகேஸ்வரனுடன் ஏற்பட்ட முரண்பாடும் இதுதான்.
உமாமகேஸ்வரனின் காதலை பிரச்சனையானதாக கருதினார். அதனால் உமாவை விட்டு விலகினார். மரபான விவகாரங்களில் பெரும் உடைப்பை செய்வதில் பிரபாகரனிற்கு உடன்பாடில்லை. குறிப்பாக திருமணம். அது ஒரு புனிதமான உறவு என்பதே அவரது நிலைப்பாடு.

புலிகளின் முக்கியஸ்தராக இருந்தவர் தினேஷ் மாஸ்ரர். போர்ப்பயிற்சி ஆசிரி யர்களை தயார் செய்வது, திட்டமிடுதல் போன்றவற்றில் பொறுப்பானவராக இருந்தவர். அவரது திருமண வாழ்க்கை சீராக அமையவில்லை.
மகளீர் தளபதியாக இருந்த ஜானகியை திருமணம் செய்தார். இருவருக்கு மிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். ஜானகிக்கும் பிரபாகரனின் மனைவி மதிவதனிக்குமிடையில் நெருக்கமான நட்பிருந்தது. இருவரையும் இணைத்து வைக்க பிரபாகரன் முயற்சித்தார்.

இப்படியான சமரச முயற்சிகளை பிரபாகரன் செய்ததாக இதற்கு முன் தகவல் இல்லை. ஜானகிக்கும் மதிவதனிக்கும் இடையில் இருந்த நெருக்கம் அதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.
ஆனால் அந்த சமரச முயற்சி வெற்றிபெற வில்லை.
பிரபாகரன் அதற்கு பின்னர் தினேஷ் மாஸ்ரரை முக்கிய பொறுப்புக்களில் நியமித்ததுமில்லை, சந்தித்ததுமில்லை. பிரபாகரனின் இந்த இயல்பை பார் த்து, அவர் பழமைவாத சிந்தனை கொண்டவர் என யாராவது தவறாக சிந்திக் ககூடாது.
பிரபாகரன் அதற்கு பின்னர் தினேஷ் மாஸ்ரரை முக்கிய பொறுப்புக்களில் நியமித்ததுமில்லை, சந்தித்ததுமில்லை. பிரபாகரனின் இந்த இயல்பை பார் த்து, அவர் பழமைவாத சிந்தனை கொண்டவர் என யாராவது தவறாக சிந்திக் ககூடாது.
பெண்களை உயர்வாக மதித்தார், தாழ்வாக மதித்தார் என்ற பேச்சிற்கே இட மில்லாமல், பெண்களை மனிதர்களாக மதித்தார். அவர்களின் வாழ்க்கையை அவர்களே தீர்மானிக்க வேண்டுமென்பதே பிரபாகரனின் நிலைப்பாடு. குடும் பம் என்ற அமைப்பிற்குள் இருவரும் இணைந்தால் பிரியக்கூடாதென நினைத் தாலும், தமக்கான எல்லையை மனைவிகளே தீர்மானிக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார்.
அதுபோல மகள் துவாரகாவின் வாழ்க்கையிலும் தலையிட்டதில்லை.
இத ற்கு ஒரு உதாரணம். 2007 இல் கிளிநொச்சியில் ஒரு ஆசிரியையிடம் பரத நாட் டியம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார் துவாரகா. அதேநேரத்தில் புதுக்குடியிருப் பில் இருந்த சோதியா படையணி போராளிகளிடம் 240 ட்ரக்ரர் ஓட்டி பழகினார். ட்ரக்ரர் ஓட்டி பழகியதும், அந்தபகுதியிலுள்ள முகாம் ஒன்றிற்கான தண்ணீர் பவுசரை அந்த ட்ரக்ரரில் கொழுவி. தானே ஓட்டிச் செல்வார். ட்ரக்ரர் ஓட்டு வதில் அவருக்கு அலாதி பிரியம் இருந்தது.
அடுத்த தொடர்கள்
18.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 18
ஐந்து வருடங்களிற்கு முன்னரே கருணாவை கணக்குபோட்டு வைத்த பிரபாகரன்!
ஐந்து வருடங்களிற்கு முன்னரே கருணாவை கணக்குபோட்டு வைத்த பிரபாகரன்!
20.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 20
கடற்படைக்கு புலிகள் வைத்த பொறி… துல்லியமாக தாக்கிய புலிகளின் ராங்கிகள்; மாட்டியது ஈ.பி.டி.பி
கடற்படைக்கு புலிகள் வைத்த பொறி… துல்லியமாக தாக்கிய புலிகளின் ராங்கிகள்; மாட்டியது ஈ.பி.டி.பி
24.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 24
புலிகளின் பகுதிக்குள் வெடித்த கிளைமோர்: பின்னணி பொட்டம்மானிற்கு தெரியும்!
புலிகளின் பகுதிக்குள் வெடித்த கிளைமோர்: பின்னணி பொட்டம்மானிற்கு தெரியும்!
30.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 30
காதலால் தவறிய புலிகளின் கொழும்பு இலக்கு… கருணா விசயத்தில் நடந்ததும் அதுதான்!
காதலால் தவறிய புலிகளின் கொழும்பு இலக்கு… கருணா விசயத்தில் நடந்ததும் அதுதான்!
கருணா படித்த பாடசாலையில் பிரபாகரன்தான் ஹெட் மாஸ்டர்!