தியாகி திலீபனின் 32ம் ஆண்டு நினைவஞ்சலி இன்று வடக்கு கிழக்கு எங்கும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
1987ம் ஆண்டு செப்ரெம்பர் 15ம் திகதி இந்திய அரசிடம் 5 அம்ச கோரிக்கையை முன்வைத்து திலீபன் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்.
எனினும், இந்த போராட்டத்தை இந்தியா கணக்கிலெடுக்காத நிலையில், திலீபன் 32 வருடங்களின் முன்னர் இதே நாளில்- செப்ரெம்பர் 27ம் திகதி- உயிர் நீத்தார். இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நேர்மைத்தன்மையை அம்பலப்படுத்தி யதுடன், இந்திய இலங்கை உடன்படிக் கையின் பலவீனத்தையும் வெளிப்படுத் தியிருந்தது.
தமிழர்களின் அகிம்சை வழி மொழியை இந்தியா புரிந்து கொள்ளாததை யடுத்து, பின்னர் இந்தியா- புலிகள் போர் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
தியாகி திலீபன் நினைவேந்தனை இன்று வடக்கு, கிழக்கு உணர்வுபூர்வமாக கடைப் பிடித்தது.
நல்லூர்
நல்லூரில்அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயத்தில், தியாகி திலீபனின் உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்ட நேரமான காலை 9.45 மணிக்கு பொதுச் சுடரேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
பொதுச் சுடரினினை மாவீரர் ஒருவரின் பெற்றோர் ஏற்றி வைத்தார்.தொடர்ந்து திரண்டிருந்த மக்கள் அனைவரும் கட்சி வேறுபாடுகளின்றி மிகவும் உணர்வு பூர்வமாக மலரஞ்சலி செலுத்தி, மலர் மாலை அணிவித்து அஞ்சலி செய்தனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணி,தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உள்ளு ராட்சி மண்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாகவும் உணர்வு பூர்வமாகவும் நினை வேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது.
பருத்தித்துறை
பருத்தித்துறையில் அமைந்துள்ள திலீபன் நினைவுத்தூபியருகில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இதில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி. விக்னேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
கிளிநொச்சி

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்ற லில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் உள்ளிட்ட பெருமளவானவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மண்டூர், கணேசபுரம் கண்ணகி விளையாட்டுக் கழக மைதா னத்தில் நடைபெற்ற அஞ்சலி நிக ழ்வை தமிழ் தேசியக் கூட் டமைப்பும், ஜன நாயகப் போராளிகள் கட்சியியும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்ட மைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப் பினர் பா.அரியநேத்திரன், பொதுமக்கள், கட்சிகளின் உறுப்பினர்கள், ஆதரவா ளர்கள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.