நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் கேணியில் காலமான பௌத்த பிக்குவின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டமைக்கு ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளர் ஜனகன் விநாயகமூர்த்தி தனது கண்டனத்தை தெரிவித் துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். ஜனகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் மேலும் இவ்வாறு தெரிவித்துள்ளார். நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் கேணி யில் காலமான பௌத்த மதகுருவின் பூதவு டல் தகனம் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றம் இந்த இடத்தில் தகனம் செய்ய தடை விதித்ததுடன், அதற்கான வேறு ஒரு இடத்தை ஒதுக்கி கொடுத்து தீர்ப்பு வழங்கியது. இருப்பினும் அந்த தீர்ப்பை அவமதித்து அதே இடத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவதத்தில் இரண்டு முக்கிய விடயங்களை கருத்தில் கொள்ள வேண் டும். முதலாவது சட்டத்தை மீறியுள்ளார்கள்.
நீதிமன்றத்தை அவமதித்துள்ளார்கள். நீதிமன்ற தீர்ப்பை செயற்படுத்த வேண் டிய காவல்துறையினர் நடைபெற்ற சம்பவத்துக்கு ஆதரவாக இருந்துள்ளனர். அல்லது கண்டும் காணாமலும் இருந்துள்ளனர்.
இவை எதிர்காலத்தில் இன்னும் மோசமான சம்பவங்கள் நடைபெறுவதற்கு தூண்டு கோலாக அமையப்போகின்றது.