ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விலைபோயுள்ளதாக வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் குற்றஞ்சாட்டி யுள்ளனர்.
அதனாலேயே முல்லைத்தீவு நீராவி யடியில் பௌத்த துறவிகளினால் அரங்கேற்றப்பட்ட சம்பவங்கள் தொட ர்பாக கூட்டமைப்பின் தலைமை எந்த வித அக்கறையும் காட்டவில்லை என்றும் அவர்கள் சாடியுள்ளனர்.
வவுனியா ஊடக அமையத்தில் நேற்று சனிக்கிழமை ஊடகச் சந்திப்பு ஒன்றை நடாத்திய காணாமல் ஆக்கப் பட்டவர்களின் உறவுகள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.