கணவனின் தொந்தரவு தாங்கமுடியாமல் தனக்கு தானே தீ மூட்டிய நான்கு பிள்ளைகளின் தாய் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
உத்தரிப்புத்துறை சிலாவத்துறை மன் னார் பகுதியினை சேர்ந்த சுகந்தி சூசைப்பு வயது (32) என்ற குடும்ப பெண்னே உயிரிழந்தவர் ஆவார்.
உயி ரிழந்த பெண்ணுக்கு 1½ வயதில் குழ ந்தை ஒன்றும் உள்ளமை குறிப்பிடத் தக்கது. சம்பவம்
தொடர்பில் தெரிய வருவதாவது:
மிகவும் வறுமைப்பட்ட குடும்பத்தில் மனைவி கூலி வேலைக்கு சென்றே பிள் ளைகளை பராமரித்து வந்துள்ளார். ஆனால் கணவன் தினந்தோறும் குடித்து விட்டு வந்து மனைவியினை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இந் நிலையில் கடந்த 22ம் திகதி மதுபோதையில் வீட்டுக்கு வந்த கணவன் மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதன் போது குறித்த பெண் மண் ணென்னையினை ஊற்றி தனக்கு தானே தீ வைத்துள்ளார்.
மனைவி தீயில் எரிவதை கண்ட கணவன், மதுபோதையில் மனைவியினை கட்டிப்பிடித்து தீயினை அணைக்க முற்பட்டுள்ளார். இருவரும் பலத்த தீக் காயங்களுக்கு உள்ளான நிலையில் அயலவர்களினால் காப்பாற்றப்பட்டு சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற் றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மனைவி உயிரிழந்துள்ளார்.
கண வன் தொடர்ந்து அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இறப்பு விசாரணையினை வைத்தியசாலையின் திடீர் இறப்பு அலுவலர் நம சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதணையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.