728x90 AdSpace

<>
Latest News
Monday, 23 September 2019

வடமாகாண பாடசாலைகளின் வகுப்பு பிரிவுகளில் 35 மாணவர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது –ஆளுநர்

வடமாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான அனுமதியினை கல் வியமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக மேற்கொள்ள வேண்டும் என்றும் ஒவ்வொரு வகுப்பு பிரிவிலும் எக்காரணம் கொண்டும் 35 மாணவர்க ளுக்கு மேல் இணைத்துக் கொள்ளக் கூடாது எனவும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணிப்புரை விடுத்துள்ளார்.


2020ஆம் ஆண்டில் பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக்கொள்வதற் கான செயற்பாடுகள் தற்போது பாடசாலைகளினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பாடசாலை அனுமதி தொடர்பான விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டது. 

இதன்போது, பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் போது வகுப்பு பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர் தொகையை விட அதிகமாக காணப்பட்டதுடன், அனுமதியின்றி மேலதிக பிரிவுகளும் இருந்தமை அவதா னிக்கப்பட்டுள்ளது. 

எனவே பாடசாலைகளில் மாணவர்களுக்கான அனுமதியினை மேற்கொள் ளும் போது மாகாண கல்வி அமைச்சினால் அனுமதிக்கப்பட்ட வகுப்பு பிரிவு கள் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும் என்றும் ஒவ்வொரு வகுப்பு பிரிவி லும் எக்காரணம் கொண்டும் 35 மாணவர்களுக்கு மேல் இணைத்துக் கொள் ளக்கூடாது என்றும் ஆளுநர் பணிப்புரை வழங்கியுள்ளார்.

இவ்விடயத்தில் தனிப்பட்ட கவனத்தினை செலுத்தி மாகாண பணிப்பாளர் மற் றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக சகல பாடசாலை அதிபர்களிற் கும் தெரிவித்து இவ்விடயத்தினை 2020ஆம் ஆண்டில் கண்டிப்பாக நடை முறைப்படுத்துமாறும் இது தொடர்பான அறிக்கையினை சகல கல்விப் பணிப் பாளர்களிடமிருந்தும் பெற்று சமர்ப்பிக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: வடமாகாண பாடசாலைகளின் வகுப்பு பிரிவுகளில் 35 மாணவர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது –ஆளுநர் Rating: 5 Reviewed By: Thamil