லெபனானில் அமைதி நடவடிக்கையில் ஈடுபட்ட ஸ்ரீலங்கா இராணுவத்தி னரை திருப்பி அனுப்பும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது ஐநா.
இவ்வாறு திருப்பி அனுப்பப்படும் ஸ்ரீலங்கா இராணுவத்தினருக்கு பதிலாக இந்தோனே ஷிய இராணுவத்தினர் நிறுத்தப்படுவதாக கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமை ச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
இதனால் லெபனானுக்கு செல்ல வேண் டிய ஸ்ரீலங்கா இராணுவத்தின் மற் றொரு பிரிவின் பயணம் இரத்துச் செய் யப்பட்டுள்ளது.
கடந்தவாரம் நியுயோர்க் கில் ஐ.நா பேச்சாளர் தெரிவிக்கையில்,
ஐ.நா அமைதிகாப்பு நடவடிக்கையில் 25 வீதமான பங்களிப்பை ஸ்ரீலங்கா இரா ணுவத்தினர் வழங்கிவருவதாகவும் ஆனால் அவர்கள் திரும்ப பெற்றுக் கொள் ளப்படவுள்ளதாகவும் கூறினார்.
இந்த திரும்ப பெறுதல் போர்க்குற்றச்சாட்டுக்குள்ளான சவேந்திரசில்வா இரா ணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டதன் விளைவு எனவும் தெரிவிக்கப்படுகி றது. எனினும் ஐ.நாவின் இந்த குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சு வன்மை யாக மறுத்துவருகிறது.
இந்தநிலையில் மாலியில் அமைதிகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் நிலை தொடர்பிலும் கொழும்பிலுள்ள இராணுவ வட் டாரங்கள் கவலையடைந்துள்ளன. இது அமைதி காக்கும் படையினருக்கு மிக மோசமான நிலையாக விளக்கப்பட்டுள்ளது.
இந்த வட்டாரங்களின் தகவல்படி வேறு எந்த குழுவும் அந்த நாட்டில் பணி களை மேற்கொள்ள தயாராக இல்லை என்று நம்புகின்றன. அதேவேளை தென் சூடானிலும் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் அமைதிகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் அதுவும் கேள்விக்குறியாகி உள்ளது.