728x90 AdSpace

<>
Latest News
Monday, 30 September 2019

இலங்கையை துவம்சம் செய்தது பாகிஸ்தான்.!

பாகிஸ்தான் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் எதிர்பார்க்கப்பட்டதை போலவே தோல்வியடைந்தது. 

ஆனாலும், ஒரு சிறு நம்பிக்கையா கவும், சுவாரஸ்யமாகவும் செஹான் ஜயசூரிய, தசுன் சானக இணை 5வது விக்கெட்டிற்கு 177 ஓட்டங்களை பகி ர்ந்து, ஆட்டத்தை சுவாரஸ்ய மூட்ட முயன்றது. 

எனினும், இலங்கை அணியில் முன் வரிசையிலோ, பின்வரிசையிலோ துடுப்பாட்ட வீரர்கள் இல்லாததால் ஆட் டம் சுவாரஸ்யமில்லாத முடிவை நோக்கி சென்றது. காராச்சி மைதானத்தில் நடந்த ஆட்டத்தில், நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. 

50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 305 ஓட்டங்களை பெற்றது. பாபர் ஆசம் 105, பக்சர் சமன் 54, ஹரிஸ் சொகைல் 40 ஓட்டங்களை பெற்றனர். பந்து வீச்சில் ஹசரன்ங டி சில்வா 63 ஓட்டங்களிற்கு 2 விக்கெட் வீழ்த்தினார். நான்கு விக்கெட்டையே இலங்கை பந்துவீச்சாளர்கள் வீழ்த்தினர். 

3 விக்கெட் ரன் அவுட். உண்மையில் இலங்கை பந்துவீச்சிற்கு எதிராக பாகிஸ் தான் அதிக ஓட்டங்கள் குவித்திருக்க வேண்டும். அந்தளவிற்கு தாக்கமற்ற பந்துவீச்சு. எனினும், பாகிஸ்தான் துடுப்பாட்டமும் மந்தமாக இருந்தது.

பதிலளித்து ஆடிய இலங்கை, சம்பிரதாயங்களை மீறாமல் 10.1 ஓவரில் 5 விக் கெட் இழந்து 28 ஓட்டங்களை பெற்றது. முதல் விக்கெட் 18 ஓட்டத்திலும், 2,3,4 ம் விக்கெட்கள் 22 ஓட்டத்திலும் வீழ்த்தப்பட்டன.

6வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த செஹான் ஜயசூரிய, தசுன் சானக இணை 40.5 ஓவர்கள் வரை போட்டியை கொண்டு சென்று 205 ஓட்டத்திற்கு உயர்த்தி யது. இலங்கையை படுமோசமான தோல்வியிருந்து இந்த இணை மீட்டதே தவிர, அது வெற்றிக்குரிய கூட்டணியாக தென்படவில்லை. 

இந்த இணை ஆட்டமிழக்கும்வரை ஓட்டவிகிதம் 5 ஆகத்தான் இருந்தது. ஆனால் தேவைப்படும் ஓட்டவிகிதம் எகிறிக்கொண்டு சென்றது. முன்வரிசை யில் குணதிலக 14, சமரவிக்கிரம 6, விஷ்வ பெர்னாண்டோ 1, அவிஷ்க பெர் னாண்டோ 0, திரிமன்ன 0 என வருவதும் போவதுமாக அணிநடை பயின்றனர். 

40.5 ஓவரில் செஹான் ஆட்டமிழந்ததும் இலங்கையின் சரிவு மீண்டும் ஆரம் பித்தது. செஹான் 109 பந்தில் 7 பௌண்டரி, 1 சிக்சருடன் 96 ஓட்டம், தசுன் சானக 80 பந்துகளில் 6 பௌண்டரி, 2 சிக்சருடன் 68 ஓட்டங்கள் பெற்றனர். பின்வரிசையின் ஹசரன்க சில்வா 23 பந்தில் 30 ஓட்டம் பெற்றார். 

இலங்கை 46.5 ஓவரில் 238 ஓட்டங்களிற்கு ஆட்டமிழந்து, 67 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பந்துவீச்சில் உஸ்மான் சின்வரி 51 ஓட்டங்களிற்கு 5 விக்கெட், சடப் காண் 76 ஓட்டங்களிற்ற்கு 2 விக்கெட். ஆட்டநாயகன் உஸ்மன் சின்வரி.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இலங்கையை துவம்சம் செய்தது பாகிஸ்தான்.! Rating: 5 Reviewed By: Thamil