728x90 AdSpace

<>
Latest News
Tuesday, 17 September 2019

பிரபாகரனுடன் முரண்பட்ட தமிழேந்தி: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 68

ஆனையிறவை வீழ்த்த புலிகள் கையாண்ட உத்திதான்,
ஆனையிறவை துண்டாடுவது. பால் ராஜ் தலைமையிலான அணி குடாரப் பில் தரையிறங்கி, ஆனையிறவு இரா ணுவ முகாமிற்கான, யாழ்ப்பாணத்து டனான தொடர்பை துண்டித்தார் என் பதை கடந்த வாரம் குறிப்பிட்டிருந் தோம். யாழ்ப்பாணத்துடனான தொடர்பு இத்தாவிலில் துண்டிக்கப்பட்டதும், பின்தளத்துடன் பிரதான பாதை தொடர்பை ஆணையிறவு இழந்தது.

கிளாலி முகாமிலிருந்து, சீரற்ற பாதை தொடர்பு ஒன்றின் ஊடாகவே உண வுகள் வந்தன. குடிநீர் இயக்கச்சியில் இருந்து வந்தது. இயக்கச்சியில் உள்ள குடிநீர் கிணற்றில் இருந்து வடக்கு ஆளுனர் செயலகத்திற்கு நீர் வருவதாக அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியானதை வாசகர்கள் படித்திருக்க கூடும்.

அந்த கிணற்றை கைப்பற்றித்தான், ஆனையிறவிற்கான குடிநீர் வழங்கலை நிறுத்தினர் புலிகள். அந்த கிணறுதான் அப்போது ஆனையிறவை அண்டிய படைமுகாம்களிற்கான ஒரேயொரு குடிநீர ஆதாரம். இன்றும் அந்த கிணற்றில் இருந்துதான் குடாநாட்டின் பெரும்பாலான படைமுகாம்களிற்கு பௌசர்களில் தண்ணீர் அனுப்பப்படுகிறது. 

பலாலி போன்ற படைத்தளங்களிற்கும் அந்த கிணற்றிலிருந்தே நீர் வழங்கப் படுகிறது. இதொரு இடையீடான தகவல். இலங்கைத் தமிழர்களிடம் நீண்ட போர் மரபுத் தொடர்ச்சியில்லை. பண்டைக்காலத்தில் குறிப்பிடும்படியான போராற்றல் மிக்க மன்னர்கள் இருக்கவில்லை. இதற்கு ஒரே காரணம்- நமது இனம் சிறியது. இராச்சியம் குறுகியது.

அனுராதபுர, பொலன்னறுவை இராச்சியங்கள் பரந்தளவையாக இருந்ததால், வரலாற்றில் பெயர் சொல்லும் இராச்சியங்களாக அவை மாறின. பெரிய அந்த சிங்கள இராச்சியங்களிற்கு போர் வரலாறுகள் உண்டு. 

கலை, கலாச்சார, கட்டிட அமைப்புக்களில் தனித்துவமிக்க அரசுகளாக அவை உருவாகின. நமக்கு அது அவ்வளவாக வாய்க்கவில்லை. ஐரோப்பியரின் வரு கைக்கு பின்னரே சங்கிலியன், வண்டாரவன்னியன் என இருவரின் வீரஞ்செறி ந்த வாழ்வை வரலாறாக கொண்டுள்ளோம்.

அதன்பின் புலிகளின் காலத்திலேயே அப்படியொரு வீரவரலாறு உருவானது. பிரபாகரன் அதை உருவாக்கினார். அவரது வீர இராச்சியத்தில் தலைசிறந்த போர்த்தளபதியாக விளங்கியவர் பால்ராஜ். ஈழத்தமிழர் வரலாற்றில் தலை சிறந்த போர்த்தளபதிகள் பட்டியலில் சந்தேகமேயில்லாமல் முதலிடத்தை அவருக்கு கொடுக்கலாம். 

ஆனையிறவிலிருந்து தப்பியோடிய இராணுவத்தின் டாங்கியில் புலிகள் எனி னும் அவரது இறுதிக்காலத்தில் அமைப்பிற்குள் சரியாக புரிந்து கொள்ளப்ப டாமை, அவரது நோய்கள் என்பன இணைந்து அவரை களத்திலிருந்து வெளி யில் தள்ளி வைத்திருந்தது. அவர் களத்தில் இல்லாதது வெளிப்படையாக தெரிந்தது.

அவர் ஒருவரால் இந்த யுத்தத்தை தலைகீழாக மாற்றியிருக்க முடியும் என்ப தல்ல. ஆனால் இந்த யுத்தத்தில் கணிசமான செல்வாக்கை அவர் செலுத்தியி ருப்பார் என்பது நிச்சயம். 

நான்காம் ஈழப்போரின் ஆரம்ப நாட்களில் புலிகள் யாழ்ப்பாணம் மீது ஒரு தாக் குலை நடத்தினார்கள். அது சிறப்பான முடிவல்ல என்பது பால்ராஜின் நிலைப் பாடு. மன்னார் தள்ளாடி முகாம்தான் பால்ராஜின் இலக்கு. இறுதியுத்ததில் புலிகளின் முதுகெலும்பை உடைத்த 58வது டிவிசன் அப்போது தள்ளாடியில் உறங்கு நிலையில் இருந்தது.

எதிரி விழித்து தாக்குதல் நடத்தியபின் எதிர்கொள்வதைவிட, தயாராகாத சந் தர்ப்பத்தில் எதிர்கொள்வதே ஆளணியில் சிறிய படையணிகளிற்கு உகந்தது. அதைதான் பால்ராஜ் திட்டமிட்டார். இப்படியான நகர்வுகளின் மூலம் வன்னி யுத்தத்தில் அவர் செல்வாக்கை செலுத்தியிருப்பார். 

நீரிழிவு, இரத்த அழுத்தம், காயமடைந்து செயலிழந்த கால் தசைகள் அழுக தொடங்கியதென இறுதிக்காலத்தில் கடுமையான அவஸ்தையை சந்தித்தார். இடையில் ஒருமுறை சிங்கப்பூரிற்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சையளிக் கப்பட்டார். எனினும், அந்த சிகிச்சையும் பலனளிக்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் பால்ராஜ்தான். அவர் தனது உடலை சரியாக கவனிப்பதில்லை. இதனால்தான் இளமைக்காலத்திலேயே அதிக நோய்க்காளானார். நோய் வந்த பின்னரும் சிகிச்சையில் அக்கறை காட்டுவதில்லை. பிரபாகரன்- வேலவன் நீரிழிவை கட்டுப்படுத்த அவர் முயற்சிக்கவில்லை. இதனால் அடிக்கடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

மாத்திரைகளையும் சீராக பாவிப்பதில்லை. தான் பிறந்தது போரிடுவதற்கு என் பதை போல அவரது செயற்பாடுகள் இருக்கும். அமைப்பை பற்றியும், போர்க் களத்தை பற்றியுமே எந்த நேரமும் சிந்தித்தபடியிருப்பார். இதுவே அவருக்கு எமனானது.

2008 மே மாத ஆரம்பத்திலேயே பால்ராஜின் உடல்நிலை சரியாக இருக்க வில்லை. மே மாதம் 20ம் திகதி மதியமளவில் பால்ராஜிற்கு திடீரென மார டைப்பு ஏற்பட்டு, உயிர்நீத்தார். அவர் உயிர் பிரிந்தபோது, விசுவடு 12ம் கட்டை பகுதியிலுள்ள தனது தளபதிகள் சந்திப்பு முகாமில் பிரபாகரன் இருந்தார். 

மன்னார் களமுனை தொடர்பான ஒரு ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். அவருடன் அப்போதைய இம்ரான் பாண்டியன் படையணி தளபதி வேலவனும் இருந்தார். அப்பொழுதுதான் பால்ராஜின் மரணச்செய்தியை உதவியாளர் சொன்னார். அப்போது பிரபாகரனின் எதிர்வினை

எப்படியிருந்ததென்பதை, வேலவன் பின்னாளில் நெருக்கமான சிலருடன் பகிர்ந்திருந்தார். பிரபாகரனின் எதிர்வினை கொஞ்சம் அதிர்ச்சியளிப்பதாக இருந்ததாக வேலவன் குறிப்பிட்டிருந்தார். 

இந்த சம்பவத்தை விலாவாரியாக பின்னர் பார்க்கலாம்.

பால்ராஜ் மரணமடைந்ததன் பின்னர் யுத்தம் விரைவாக வன்னியின் மைய த்தை நோக்கி நகரத் தொடங்கியது. பானு, ஜெயம் என மூத்த தளபதிகளை மன் னார் முனைக்கு பொறுப்பாக பிரபாகரன் நியமித்தார். அதற்கு பலன் கிட்ட வில்லை. தளபதிகளை மாற்றியபோதும் பெரிதாக பலன் கிட்டவில்லை. முத லில் ஜெயம் மன்னார் முனையை கவனித்தார். ஆனால் படையினரின் நக ர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. 

பின்னர் ஜெயம் மாற்றப்பட்டு பானு நியமிக்கப்பட்டார். இதற்குள் படையினர் மல்லாவிக்கு அண்மையாக வந்துவிட்டனர். இறுதியுத்தம் வாழ்வா சாவா யுத்தம் என்பதை பிரபாகரன் உணர்ந்திருந்தார். இதனாலோ என்னவோ இந்த சமயத்தில் தன்னால் வழங்கப்பட்ட கடமையை வெற்றிகரமாக செய்யாத வர்களை பொறுப்பிலிருந்து அகற்றி, சும்மா உட்கார வைத்தார். ஜெயம் மன் னார் கட்டளைபீடத்திலிருந்து அகற்றப்பட்ட பின்னர், குறிப்பிடத்தக்க பொறுப் பெதுவும் வழங்கப்படவில்லை. அதன்பின் பானுவிற்கு அந்த பொறுப்பு வழங் கப்பட்டது. 

பானுவாலும் முடியவில்லை. ஆனால் பானு ஒரேயடியாக தூக்கி வீசப்பட வில்லை. அதற்கு காரணம் சாள்ஸ் அன்ரனி. பிரபாகரனின் மூத்த மகனான சாள்ஸ் அன்ரனி அப்போது அமைப்பின் இரண்டாவது தலைவரை போல செயற்பட்டார். சாள்ஸ் அன்ரனியின் தீர்மானங்களை தளபதிகளும் அனு சரித்து நடந்தனர். இவர்களுள் சாள்ஸ் அன்ரனிக்கும் பானுவிற்குமிடையில் நெருங்கிய உறவிருந்தது.

பானு ஐயா என அன்பாக சாள்ஸ் அன்ரனி அழைப்பார். சாள்ஸ் அன்ரனியை பானு அதிகம் அனுசரித்ததால், அவர் தொடர்ந்து ஏதாவதொரு கட்டளை பீடத் தில் இருந்தார். பின்னர் நிலப்பரப்பு சுருங்கிய பின்னர், முழுமையான கள முனை தளபதிகளாக யாரும் நியமிக்கப்படாமல் பகுதிகளை பிரித்து ஒவ் வொரு களமுனைக்கும் ஒவ்வொரு தளபதிகள் நியமிக்கப்பட்டனர். 

ஸ்கந்தபுரத்தை உள்ளடக்கிய பகுதிகளிற்கு தளபதி வேலவன் பொறுப்பாக இருந்தார். பானு, தீபன் முதலியவர்களும் பகுதிகளை கவனித்தார்கள். மன் னாரில் யுத்தம் ஆரம்பித்த பின்னர் புலிகள் சொல்லும்படியான வலிந்த தாக் குதல் எதையும் செய்யவில்லை. காரணம் இடைவிடாமல் இராணுவம் முன் னேறிக் கொண்டிருந்தது.

புலிகளின் படையணிகளிலும் புதிதாக இணைக்கப்பட்டவர்கள்தான் இருந்தார் கள். போதாக்குறைக்கு ஆயுதப்பற்றாக்குறை வேறு. மன்னாரில் இருந்து சொல் லும்படியான பதிலடியில்லாமல் படையினர் முன்னேறி வந்தனர். இதை மாற்றி சிறிய வலிந்த தாக்குதல்களை இம்ரான் பாண்டியன் படையணியே செய்தது. தம்மிடமிருந்த சிறிய ஆளணியை வைத்து ஆங்காங்கே சிறியளவி லான பதில் தாக்குதல்கள் நடத்தினார்கள். 

இதில் சொல்லப்படகூடியது ஸ்கந்தபுரம் கரும்புத் தோட்டப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல். சிறிய பரப்பில், சிறிய ஆளணியை கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்றாலும், அதற்குரிய விளைவை கொடுத்தது. இராணுவம் அந்த பகுதியை விட்டு பின்வாங்கியதுடன் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. 

கட்டளை மையத்தை நிலைகுலைய வைத்த செல்வி! ஆனால் இதை பெரிய தாக்குதலாக மாற்றும் வாய்ப்பு புலிகளிற்கு இல்லாமல் போய்விட்டது. எல்லா முனைகளிலும் தாக்குதலை இராணுவம் செய்ததால் ஆளணியை புலிகளால் திரட்ட முடியவில்லை.

இந்த சவாலை கடக்க பிரபாகரன் பெரியளவில் பிரயத்தனப்பட்டார். முடிய வில்லை. இறுதியில் நிதித்துறை பொறுப்பாளர் தமிழேந்தியை கூட அதற்காக பாவித்தார். முடியவில்லை. இறுதியில் பிரபாகரனுடன் முரண்பட்டு கொண்டு போய் தனிமையில் இருக்கும் நிலைக்கு ஆளானார் தமிழேந்தி.

அடுத்த தொடர்கள்
































கருணா படித்த பாடசாலையில் பிரபாகரன்தான் ஹெட் மாஸ்டர்!

































  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: பிரபாகரனுடன் முரண்பட்ட தமிழேந்தி: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 68 Rating: 5 Reviewed By: Bagalavan