728x90 AdSpace

<>
Latest News
Sunday, 29 September 2019

நல்லிணக்கத்திற்கு எதிராக செயற்படும் ஞானசாரரை கல்லில் கட்டி கடலில் போடுங்கள்!

நாட்டில் இன நல்லினக்கத்திற்கு எதிராக செயற்படும் ஞானசார தேரரை கல்லைக் கட்டி கடலில் போடுங்கள் என சமாதானத்தை விரும்பும் சிங்களவர் களிடம் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் வேண்டு கோள் விடுத்துள்ளார். 

பல்லின மக்கள் வாழும் இலங்கைத் தீவில் ஞானசார தேரர் போன்ற இன வாத விஷக்கிருமிகளை வைக்கக் கூடாது அது ஒட்டு மொத்த நாட் டையே அழித்து விடும் ஆகவே தமிழ் சிங்கள மக்களுடன் சேர்ந்து அனை வரும் ஒருமித்து நாட்டின் எதிர்கால நன்மை கருதி ஞாசார தேரரை கடலில் போட வேண்டும் எனவும் தெரிவித் துள்ளார். 

பௌத்த மதத் துறவியருக்கு தனிச் சட்டங்கள் ஏதேனும் இயற்றப்பட்டுள்ளதா? எதற்காக நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அட்டூழியம் செய்த ஞானசரா தேரர் உட்பட பிக்குகளை கைது செய்யவில்லை? 

அறிவிலியான ஞானசார தேரர் கூறும் இலங்கை சிங்கள பௌத்த கொள் கையை ஏற்றுக் கொள்ள முடியாது. அதை தெற்கு மக்கள் ஏற்றுக் கொள்வார் கள் வடக்கு கிழக்கு தாயக மக்கள் ஒருபோது ஏற்க மாட்டார்கள்.

அதை ஏற்க வேண்டிய எந்த அவசியமும் தமிழர்களுக்கு இல்லை. தெற்கில் குடியிருக்கும் போதே பிசாசு போல் இனவாத ஆட்டம் போடும் ஞானசார தேரர் வடக்கில் குடியேறி மீண்டும் ஒரு இனக் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக் கின்றாரா? 

ஞானசார தேரர் உண்மையான தீட்சை பெற்ற பௌத்த துறவியா என்னும் சந் தேகம் எழுகிறது. ஏனெனில் புத்த பகவானின் பஞ்சீலக் கொள்கையை கடைப் பிடிக்கும் எவரும் இப்படி கீழ்த்தரமான செயலில் ஈடுபட மாட்டார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஏனெனில் அண்மையில் வவுனியா கல்குனா மடுவில் புத்த விகாரை உள்ளே ஒரு விநாயகர் ஆலயம் அமைப்பதற்கு எனது ஒதுக்கீட்டில் இருந்து நிதி வழங் கப்பட்டது. அவர்கள் பௌத்தர்களா? அல்லது ஞானசார தேரர் பௌத்தரா? அத னால் தான் கூறுகிறேன். 

இலங்கை இன முறுகலில் இருந்து விடுபட வேண்டுமானால் உடனடியாக ஞானசார தேரரை கல்லில் கட்டி கடலில் போடுங்கள் என வன்னி நாடாளு மன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: நல்லிணக்கத்திற்கு எதிராக செயற்படும் ஞானசாரரை கல்லில் கட்டி கடலில் போடுங்கள்! Rating: 5 Reviewed By: Thamil