இலங்கையில் சட்ட ஆட்சியை நிலை நாட்டவும் சிறுபான்மையினர் உரிமை களைப் பாதுகாக்கவும் ஐ.நா.வின் பங்களிப்பு அவசியம் என வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் ஐ.நா. செயலாளர் நாயகம் ஆன்ரோனியோ குட்ரர ஸின் கவனத்திற்கு மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புக் கள், மக்கள் இணைந்து முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற் கொண்டதோடு ஐ.நா. செயலாளர் நாய கம் ஆன்ரோனியோ குட்ரரஸ் கவனத் திற்கு மகஜர் ஒன்றை கிளிநொச்சியில் அமைந்துள்ள ஐ.நா அலுவலகத்தில் கையளித்துள்ளனர்.
இந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் வருமாறு,
1948ம் ஆண்டு முதற்கொண்டு இலங்கையில் ஆட்சிக்கு வந்த அரசுகளின் இன வாத பாரபட்சக் கொள்கைகளினாலும், அரச நிறைவேற்று அங்கங்களினா லும், சட்ட ஆட்சியைப் பேணுவதற்குப் பொறுப்பான கட்டமைப்புகளினாலும், சிங்கள பௌத்த அடிப்படைவாத சக்திகளின் இனப்பகைமை வன்முறை களாலும் இலங்கையின் சிறுபான்மைச் சமூகத்தினரான நாம் தொடர்ச்சியான அடக்குமுறைகளுக்கு உள்ளாகி வருகின்றோம்.
1983இற்குப் பின்னர் இலங்கையின் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் துரித மாக விரிவாக்கப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், இராணுவ மய மாக்கல் மற்றும் போர் ஆகியவற்றின் காரணமாக இப்பிரதேசத்து மக்க ளான நாம் தொடர்ச்சியாக இடம் பெயர நேர்ந்ததோடு எமது வாழ்விடங்களையும் வாழ்வாதரங்களையும் இழக்கவும் நேர்ந்தது.
குறிப்பாக, போரினால் பாரிய அழிவுகளையும், இன அழிப்பையும் எதிர்கொள்ள நேர்ந்ததோடு கூட்டுப் பாலியல் குற்றங்களுக்கும் உள்ளாக நேர்ந்தது.
அது மாத்திரமின்றி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் காரணமாக ஏதேச்சையான கைதுகள், பல ஆண்டுகாள விசாரணையற்ற தடுத்துவைப்புகள், சித்திரவதை கள், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் ஆகியவற்றுக்கும் எமது சமூகத்தினர் உள்ளாக நேர்ந்தது.
இந்நிலையில், 2015இல் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் மற்றும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையுடன் இலங்கை செய்துகொண்ட ஒப்பந்தங்களின் காரணமாக சிறுபான்மையினருக்கு நீதி கிடைப்பதோடு உரிமைகள் உத்தர வாதப்படுத்தப்படும் என நம்பினோம்.
எனினும், இலங்கை அரசானது, சிங்களக் குடியேற்றங்களை இராணுவத்தின் ஒத்துழைப்போடு வடக்கு கிழக்கில் திட்டமிட்டு உருவாக்குவதோடு, பௌத்த அடிப்படைவாத சக்திகளினால் மேற்கொள்ளப்படும் சட்டத்துக்குப் புறம்பான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தடைசெய்யாது இருந்துவருகிறது.
இதன் காரணமாக சிறுபான்மையினரின் வணக்கத்தலங்கள், கலாச்சாரமை யங்கள், வாழ்வாதர நிலங்கள் ஆகியன ஆக்கிரமிக்கப்டுகின்றன. பௌத்த சிங் கள அடிப்படைவாத சக்திகளினால் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறுபான்மை யினர் உடல் ரீதியாக தாக்கப்பட்டுள்ளதுடன் அவமானப்படுத்தல்களுக்கு உள் ளாகியுள்ளனர்.
இத்தகைய அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. இது சார்ந்து அண்மைய சில சம்பவங்களை நாம் இங்கு தங்களின் கவனத்துக்கு கொண்டுவருகிறோம்:
நீராவியடி பிள்ளையார் கோவில் விவகாரம்:
முல்லைத்தீவு மாவட்டத்தில் செம்மலைப் பிரதேசத்துக்கு உட்பட்ட நீராவியடி எனும் இடத்தில் அமைந்துள்ள பாரம்பரிய இந்து வணக்கதலத்துக்கு சொந்த மான இடத்தில் 2009ஆம் ஆண்டளவில் யுத்தம் முடிவுற்றதோடு இராணுவ முகாம் அமைக்கபட்டது.
அங்கு இராணுவத்தினால் தமது மத வழிபாட்டுக்காக பௌத்த வணக்கத்தலம் அமைக்கப்பட்டது.
இராணுவம் வெளியேறியதுடன் பௌத்த பிக்குவான காலஞ்சென்ற கொலம்ப மேதாலங்க கீர்த்தி தேரர் இவ்விடத்தை ஆக்கிரமித்து விகாரை அமைத்தார்.
இது குறித்து கோவில் நிர்வாக சபையினர் பொலிசில் முறைப்பாடு செய்த தற்கு அமைய பொலிஸ் ஆரம்ப கட்ட வழக்கைதொடுத்தனர். இதற்கமைய இரு தரப்புக்கும் வணக்கம் செய்ய அனுமதி வழங்கியதுடன், இங்கு கட்டடம் எழுப்பப்படக்கூடாது என முல்லைத்தீவு மாவட்ட நீமன்றம் தீர்ப்பளித்தது: வழக்கு எண்: Case NO. 31823 (PC Section 81)..
எனினும், இந்து தரப்பினரின் மத நடவடிக்கைகளுக்கு பௌத்த பிக்குவினாலும் அவர் சார்ந்தவர்களினாலும் பல்வேறு இடைஞ்சல்கள் மேற் கொள்ளப்பட்டு வந்தன.
இந்நிலையில், நோயுற்ற பௌத்த பிக்கு கொலம்ப மேதாலங்க கீர்த்தி தேரர் மகரகம வைத்தியசாலையில் காலமானார். அவரது பூதவுடல் 2019 செப்ரெம்பர் 21ம் திகதி சனிக்கிழமை முல்லைத்தீவுக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
இவரது உடலை இந்து வணக்கத்தல இடத்தில் தகனம் செய்தால் இனமுறுகல் ஏற்படும் என்பதைக் கருத்திற் கொண்டு சனிக்கிழமை இரவு பொலிசினால் மாவட்ட பதில் நீதவானிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதற்கமைய பிக்குவின் பூதவுடலை ஆலய வளாகத்தில் தகனம் செய்ய இடைக்கால தடை வித்தித்து பதில் நீதவான் தீர்ப்பளித்திருந்தார்.
எனினும் பொலிசார் நீதவானின் கட்டளையை உரியமுறையில் அமுலாக்கல் செய்ய வில்லை.
2019 செப்ரெம்பர் 23ம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் நீராவியடி கோயில் வளாகத்தில் பிக்குவின் உடலை தகனம் செய்யாது வேறுபொருத்த மான இடத்தில் தகனம் செய்ய தீர்ப்பளித்தது: வழக்கு எண்: AR 745/19. இதற்கு இணக்கம் தெரிவித்த பௌத்த தரப்பினர், தாம் நீராவியடியிலிருந்து 3 கிலோ மீற்றர் தள்ளி கடற்கரைக்கு அண்மித்த இடத்தில் தகனம் செய்வதாக ஏற்றுக்கொண்டனர்.
எனினும், நீதிமன்றத தீர்ப்புக்கு மாறாக தென்பகுதியில் இருந்து சென்ற பௌத்த பிக்குவான ஞானசார தேரர் மற்றும் ஏனையவர்களினால் மறைந்த பௌத்த பிக்குவின் உடல் நீராவியடி கோயில் பூமியில் தகனம் செய்யப் பட்டது.
நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு பொலி சார் பாதுகாப்பு வழங்கினார்கள். இதன் மூலம் பொலிசார் நீதிமன்ற ஆணையை மீறியுள்ளனர். இது தவறு என எடுத்துரைக்க சென்ற தமிழ் சட்டத் தரணியும் பொதுமக்கள் சிலரும் சிங்களவர்களினால் தாக்கபட்டனர்.
பொலிசார் பார்த்துக்கொண்டு இருந்ததுடன் தாக்கியவர்களைக் கைது செய்ய வும் இல்லை. இந்த ஞானசார தேரர் ஏற்கனவே நீதிமன்றத்தை அவமதித்ததன் காரணமாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஜனாதிபதியினால் நிறைவேற்று அதிகாரத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மகாவலி எல் வலய ஆக்கிரமிப்பு
முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் இராணுவத்தின் ஒத்து ழைப்புடன் அரசினால் மகாவலி அபிவிருத்தி எனும் பெயரில் தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகள் அபகரிக்கப்பட்டு திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காணிகளை இழந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்ல முடியாதுள்ள னர். தமது பாரம்பரிய வாழ்வாதர நிலங்களைத் திருப்பிதருமாறு மக்கள் பல முறை அரசிடம் கோரிக்கை வைத்தும் அரசு மக்கள் கோரிக்கையைக் கண்டு கொள்ளாது புறக்கணித்து வருகிறது.
கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோவில் விவகாரம்:
திருகோணமலை மாவட்டத்தில் கன்னியா வெந்நீரூற்று அமைந்துள்ள இடத் தில் தனியாருக்கு சொந்தமான பாரம்பரிய பிள்ளையார் கோயில் இருந்த இடத்தை பௌத்தர்கள் ஆக்கிரமித்தார்கள். 2019 ஜுலை 16 அன்று இதை எதிர் த்து வன்முறையற்ற முறையில் ஆர்ப்பாட்டம் செய்த சிறுபான்மையினரை அவ்விடத்தில் இருந்த சிங்கள வியாபாரிகள் அவமதித்ததுடன் பெண்கள் உட் பட சிலர் மீது சுடுதேநீர் ஊற்றினார்கள்.
இதை பொலிசார் பார்த்துக்கொண்டு இருந்ததுடன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேற் குறித்த சம்பவங்கள் இலங்கையில் சிறுபான்மையின ருக்கு எதிராக மேற் கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறை, பௌத்த சிங்கள பேரினவாதத்தின் விரிவாக்கம், அரச இனவாத பாரபட்சம் மற்றும் சட்ட ஆட்சி மீறப்படல் குறித்த சில உதாரணங்கள் மாத்திரமே.
நீதிமன்ற தீர்ப்பு மீறப்படுதல், இவ்வாறு மீறயவர்களுக்கு எதிராக சட்ட நட வடிக்கை எடுக்காது உரிய தரப்பினர் மௌனமாக இருத்தல், இனவாதத்துக்கு இடமளிப்பது மற்றும் அதை ஊக்குவிப்பது
யாவும் நாட்டில் சட்ட ஆட்சி வீழ்ச்சியடைவதையே காட்டுகிறது.
இது சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாகும். சட்ட ஆட்சி என்பது ஐ.நா.வின் அடிப்படைக் கொள்கையாகும். ஐ.நா. பட்டயத்தின் சாராம் சமாகும் . எனவே, ஐ.நா.வின் உறுப்பு நாடான இலங்கை சட்ட ஆட்சியை முழு மையாகக் கடைபிடிக்கவும் சிறுபான்மையினரைப் பாதுகாக்கவும்,
பௌத்த சிங்கள இனவாத சக்திகளின் சமூக விரோத
நடடிவக்கைகளை முடி வுக்குக் கொண்டு வரவும் பங்களிக்க வேண்டும் எனக் கோருகிறோம் எனவும் வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் மற்றும் மக்கள் என அந்த அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ளது.