சஜித் பிரேமதாச தனி வழி சென்றால், அவரை எப்படி அரசியல்ரீதியாக நிர் மூலம் செய்வது என்பது குறித்து, ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவும் இரகசிய பேச்சு நடத்தி யுள்ளனர்.
இருதரப்பிற்கும் பொதுவான இடமொன் றில் இரவு 9 மணிக்கு ஆரம்பித்த பேச்சு நள்ளிரவு 11.30 மணிவரை நீடித்தது.
ஐ.தே. கவின் ஜனாதிபதி வேட்பாளராக தானே களமிறங்க முடிவு செய்துள்ள ரணில் விக்கிரமசிங்க, சஜித் தனிவழி சென்றால் எப்படி அவரை எதிர்கொள்வதென்ற குழப் பத்தில் இருந்தார்.
சஜித்தை எப்படி எதிர்கொள்வதென்ற குழப்பத்தில் பசில் தரப்பும் இருந்தது. இந்த நிலையிலேயே கடந்த 21ம் திகதி இரு தரப்பும் சந்தித்து பேசி, கூட்டாக செயற்பட்டு சஜித்தை எதிர்கொள்வதென தமக்குள் இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள்
சஜித்தை எதிர்கொள்வதற்கான பல்வேறு உபாயங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.
சஜித், சு.க, ஐ.தேகவின் பங்காளிக்கட்சிகள் இணைந்து தேர்த லில் போட்டியிட்டு வெற்றியீட்டினால், அதற்கடுத்த நாடாளுமன்ற தேர்தலில் ஐ.தே.கவும், பொதுஜன பெரமுனவும் கூட்டாக தேர்தலை சந்திப்பது அல்லது தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைப்பது என இணக்கம் காணப்பட் டது.
இரு தரப்பும் இணைந்து நாடாளுமன்ற அதிகாரத்தை கைப்பற்றினால், ஜனா திபதி சஜித்தை அரசியல்ரீதியாக பலவீனப்படுத்த முடியுமென இணக்கம் காணப்பட்டது.
இதேவேளை, தேர்தல் பிரசார காலத்தில் சஜித்திற்கெதிரான நகர்வுகள் குறித்தும் நீண்ட கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
சஜித்தை அரசியல்ரீதியாக பலவீனப்படுத்தவல்ல தகவல்கள் அடங்கிய சில கோப்புகளை, ஐ.தே.க தரப்பு, பெரமுனவிடம் கையளித்ததாகவும் தெரிய வரு கிறது. ரணில்- பசில் சந்திப்பு பற்றிய தகவல் சஜித் அணியின் காதிற்கும் சென்றுள்ளது. இரு தரப்பிற்கும் இடையிலான சந்திப்பையடுத்து சஜித் தரப்பு மிக “அப்செட்“டில் இருக்கிறது.
தமக்கெதிரான நகர்வில் இரு தரப்பும் கைகோர்த்துள்ளதால், தற்போது ஜனா திபதி தேர்தல் பந்தயத்தில் இருந்து சஜித் பின்வாங்க ஆரம்பித்துள்ளார். வேட் பாளராகுவதற்கு முன்னர் காட்டிய தீவிரத்தை அவர் தற்போது காண்பிக்க வில்லை.
இதேவேளை, சஜித் தரப்பின் பிரமுகர்களை வளைத்துப் போடும் நடவடிக்கையிலும் ரணில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
ரணில் முகாமில் இருந்து, சஜித் முகாமிற்கு தாவிய மலிக் சமரவிக்கிரம இதில் முதல் விக்கெட்டாக வீழ்ந்துள்ளார். அண்மையில் ரணில் கண்டிக்கு செல்லும்போது இருவரும் ஒரே காரில் பயணம் செய்து, ஒன்றாக மதிய உணவருந்தினர்.
மலிக்கின் திடீர் மனமாற்றத்தையடுத்தும் சஜித் முகாமில் சலசலப்பு எழுந்துள்ளது. தமது திட்டங்களை, தமக்கு பின்ன ணியிலுள்ள வர்த்தகர்கள் பற்றிய தகவல்களை ரணிலிடம் அவர் அம் பலப்படுத்தி விடுவார் என்ற குழப்பத்தில் சஜித் தரப்பு உள்ளது.