728x90 AdSpace

<>
Latest News
Wednesday, 11 September 2019

கருணா படித்த பாடசாலையில் பிரபாகரன்தான் ஹெட் மாஸ்டர்!- இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 32

விடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கேணல் கருணா 2004 மார்ச் 03ம் திகதி திடீர் அறிவிப்பொன்றை விடுத்தார். 

“விடுதலைப்புலிகள் அமைப்பிலி ருந்து பிரிந்து, கிழக்கு மாகாண அணி யினராகிய நாம் தனித்து செயற்பட போகின்றோம்“ என்பதே அந்த அறி விப்பு. 


இந்த அறிவிப்பின் பின்னணி என்ன? 

அப்போது என்னென்ன சம்பவங்கள் நடந்தன? யார் யார் என்னென்ன பாத் திரங்கள் வகித்தார்கள்? இதையெல்லாம் கடந்த பாகங்களில் விபரமாக குறிப் பிட்டுள்ளோம். 

கருணா பிளவை ஒரு தத்துவார்த்தமான பிளவாக  சிலர் குறிப்பிடுவதுண்டு. வடக்கு கிழக்கு மோதல், கிழக்கு போராளிகள் மீதான மேலாதிக்கம் என பல கதைகள் கிளப்பப்பட்டன. உண்மையில் அதெல்லாம் கதைகள்தான். 

இந்த பிளவை நியாயப்படுத்த பின்னாளில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. இப்படி திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கதைகளின் பின்னால், பெரும் வலை யமைப்பே இருந்தது. வடக்கு- கிழக்கு மோதலை தத்துவார்த்த பின்னணியில் உருவாக்கினால்தான், பிளவு வெற்றியடையுமென்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்திருந்தார்கள். 

அதே சமயத்தில் வடக்கு- கிழக்கு பிளவை வெறித்தனமானதாக மாற்றும் முயற்சியும் நடந்தது. அதாவது வடக்கை சேர்ந்தவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி, அதை உணர்வுபூர்வமானதாக மாற்றி, இரத்தக்களரியை தோற்றுவிக்கும் முயற்சிக்கான விதை அது. கிழக்கு பிளவிற்கு தத்துவார்த்த அர்த்தம் கற்பிக்கும் முயற்சியும் நடந்தது. இதன் பின்னணி யார் என்பதை நாம் கூறப்போவதில்லை. 

ஆனால் நாம் தரும் தகவல்களில் இருந்து நீங்கள் விசயங்களை ஊகித்துக் கொள்ளலாம். 2004 மார்ச்சில் கருணா தனது பிரிவை அறிவித்ததும், தென்னி லங்கையைச் சேர்ந்த சிங்களப் பத்திரிகையாளர்- பெண்மணி- கருணாவின் அணிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முகாமொன்றில் வந்து தங்கியிருந்தார். 

கருணா அணியின் தகவல்களையும், அறிக்கைகளையும் உடனுக்குடன் இலங்கை மற்றும் வெளிநாடுகளிற்குள் பரப்புவதுதான் அவரது வேலை. அவரை யார் அங்கு அனுப்பி வைத்தார்கள்? 

அதையும் நாம்தான் உங்களிற்கு சொல்லி புரிய வைக்க வேண்டுமா என்ன? மட்டக்களப்பில் இருந்த வடக்கை சேர்ந்தவர்களை கருணா குழு சுட தொடங்க, பதிலுக்கு புலிகளும் கருணா குழுவை சேர்ந்தவர்கள் மீது சுடத் தொடங்க, கிழக்கே கலவர பூமியானது. 

ஒவ்வொரு நாளும் கொலை விழுந்த நாட்கள் அவை. இந்த சமயத்தில் மீண்டும் கருணாவுடன் இடைத்தரகர்கள் ஊடாக பேச்சுவார்த்தை நடத்த புலிகள் முயன்றனர். கரு ணாவை சமரசமாக கிழக்கை விட்டு வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதே புலி களின் பிரதான நோக்கமாக இருந்தது. 

கருணாவுடன் மோத முடிவெடுப்பது, வீணாண அழிவு, பின்னடைவு ஏற்படு மென்பது புலிகளிற்கு தெரிந்திருந்தது. ஆனால், கருணா அதற்கு சம்மதிக்க வில்லை. ஐயாயிரம் போராளிகள் தன்னிடமிருந்ததால், கிழக்கில் தனியான நிர்வாகம் அமைக்கலாமென அவர் நினைத்தார். 

ஆனால்….. இந்த இடத்தில் உங்களிற்கு ஒரு பிளாஷ்பேக் அவசியம். கருணா விவகாரத்தை எழுத தொடங்கியபோது, ஒரு விசயத்தை சொல்லியிருந்தோம். கருணா படித்த பாடசாலையில் ஹெட்மாஸ்ரர் பிரபாகரன்தான் என!


போர்த்தந்திரங்களில் பிரபாகரனா, கருணாவா சிறந்தவர் என கேட்டால், சந் தேகமேயில்லாமல் பிரபாகரன்தான் என சொல்லலாம். அதற்கு ஆதாரம்- கருணா கிளர்ச்சியை அவர் கட்டுப்படுத்திய விதத்தை சொல்லலாம்! 

கருணா பிரிவில் இடையில் கட்டாயம் சொல்ல வேண்டிய இன்னொரு விவ காரம்- திருகோணமலை தளபதியாக இருந்த பதுமன் கைது செய்யப்பட்டது. 

அதை இப்பொழுது குறிப்பிடுகிறோம். 

இதை தொடர்ந்து, கருணாவை விட போர்த்தந்திரத்தில் பிரபாகரன் ஏன் சிறந் தவர் என்பதற்கான ஆதாரங்களை குறிப்பிடுகிறோம். கருணா பிரிவு விவ காரத்தில் கிழக்கின் இன்னொரு தளபதியாக இருந்த பதுமன் புலிகளால் கைது செய்யப்பட்டார். 

அப்போது அவர் திருகோணமலை தளபதியாக இருந்தார்.கருணா பிரிவை பதுமன் ஏற்கனவே அறிந்து வைத்திருந்தார். ஆனால் அதில் நேரடி தொடர்பை வைத்திருக்கவில்லை. கருணா பிளவை பதுமன் அறிந்து வைத்திருக்கிறார், 

இரண்டு தளபதிகளிற்கிடையிலும் நெருக்கம் உள்ளது போன்ற தகவல்களை புலிகள் அறிந்து வைத்திருக்கவில்லை. எதிர்பாராதவிதமாக நடந்த சுவாரஸ் யமான சம்பவம் ஒன்றின் மூலமே, புலிகள் இதை அறிந்து கொண்டார்கள். 

கிழக்கில் கருணா பிரிந்தபோது, ஜெயந்தன் படையணியின் அணியொன்று வடக்கில் நிலைகொண்டிருந்தது. அந்த அணியின் தளபதியாக ஜெனார்த்தனன் இருந்தார். இப்போது பிரித்தானியாவில் வசிக்கிறார். 

அவருடன் சுமார் நானூறு வரையான போராளிகள் இருந்தார்கள். அந்த அணி நாகர்கோவிலில் நிலைகொண்டிருந்தது. கிழக்கிலிருந்த கருணா அணியிடமி ருந்து ஜெனார்த்தனனை பலமுறை தொடர்பு கொண்டனர். 

அவரது அணியையும் கூட்டிக்கொண்டு உடனடியாக மட்டக்களப்பிற்கு வரும் படியும், அதற்கான ஏற்பாட்டை தாங்கள் செய்வதாகவும் கூறினார்கள். ஜெனார்த்தனன் விடுதலைப்புலிகள் அமைப்பில் விசுவாசமாக இருந்தவர். அவருக்கு இதில் உடன்பாடிருக்கவில்லை. 

உடனடியாக தனது மேலதிகாரிகளிடம் விசயத்தை சொன்னார். அது பொட்டம் மானிற்கு உடனடியாக அறிவிக்கப்பட்டது. பொட்டம்மான் இந்த விசயத்தை கையில் எடுத்தார்! ஜெனார்த்தனனை கிளிநொச்சியிலுள்ள புலனாய்வுத் துறையின் ஒப்ரேசன் மையமொன்றிற்கு அழைத்த பொட்டம்மான், அவரை சில விசயங்களிற்காக தயார்படுத்தினார். 

அதாவது, கிழக்கு அணியுடன் இணக்கமாக பேசி, தகவல்களை கறக்க வேண் டும்! ஜெனார்த்தனன் அதை கச்சிதமாக செய்தார். “கிழக்கு விவகாரங்கள் உங்குள்ள ஜெயந்தன் படையணி போராளிகளிற்கு தெரியுமா?“ என கருணா அணியினர் கேட்டனர். 

”ஆம்… அனைத்து தகவல்களும் ஓரளவுக்கு தெரிந்துள்ளது. புலிகள் பயங்கர மான தணிக்கை நடைமுறைகளை அமுல்படுத்தியுள்ளனர். புலிக ளின் குரல் வானொலி மட்டுமே கேட்பதற்கு அனு மதிக்கப்பட்டுள்ளனர். 

ஆனால், விசயத்தை தெரிந்துள்ள என்னைப் போன்ற சிலர் மூலம் ஓரளவு விசயங்கள் போரா ளிகளிடம் சென்றுள்ளது“ “ஓஹோ… போராளி கள் என்ன சொல்கிறார்கள்? வன்னியை விட்டு மட்டக்களப்பிற்கு வரத் தயாராக இருக்கிறார்களா?“ “யாரும் வெளிப்படையாக பேசவில்லை. 

அவர்களிற்கு பயமாக இருக்குமென நினைக்கிறேன். யார் யாருடைய ஆட்க ளென்பதை கண்டுபிடிக்க முடியாதல்லவா?. ஆனால் மேலோட்டமாக பேசி யதில் பல போராளிகள் மட்டக்களப்பிற்கு வரத் தயாராக இருக்கிறார்கள். மிகச் சிலர் விரும்பாமலிருக்ககூடும். 

ஆனால், அனைவரையும் மட்டக்களப்பிற்கு கொண்டு வரலாம்“ “சரி… தொடர் பில் இருங்கள். அதுபற்றி பின்னர் தகவல் தருகிறோம்“ இந்த உரையாடல் ஜெனார்த்தனனிற்கும், புலிகளிலிருந்து பிரிந்த கிழக்கின் முக்கிய தளபதி யொருவரிற்குமிடையில் நடந்தது. 

இந்த உரையாடலை ஜெனார்த்தனனுடன் இருந்து பொட்டம்மானும் கேட்டுக் கொண்டிருந்தார்! இந்த உரையாடலை பொட்டம்மான் அவதானித்துக் கொண் டிருப்பதை கருணா குழு அறிந்திருக்கவில்லை. 

ஜெனார்த்தனன் உண்மையிலேயே மட் டக்களப்பிற்கு வரத் தயாராக இருக்கி றார் என்றுதான் கருணா குழு நம்பியது. மட்டக்களப்பிற்கு வருவதனால், எப்படி வருவதென்று கருணாகுழுவிடம் கேட் கும்படி பொட்டம்மான் கூறியிருந்தார். 

அடுத்த உரையாடலில் ஜெனார்த்தனன் கேட்க, மறுமுனையில் பேசிய முக் கியஸ்தர் திட்டத்தை புரியவைத்தார். “இப்பொழுது நீங்கள் நாகர்கோவில் முன்னரணில் நிலைகொண்டிருக்கிறீர்கள். 

கடற்கரையோரமாக கண்ணிவெடிகளை அகற்றி ஒரு பாதையை தயார் செய் யுங்கள். நீங்கள் தயார்செய்யும் பாதையை இராணுவத்தினர் பார்த்தால், அதற்கு நேராக அவர்களும் ஒரு பாதையை தயார்செய்து தருவார்கள். 

இந்த பாதையால் நாகர்கோவில் முகாமிற்கு போங்கள். அவர்கள் அங்கிருந்து கப்பலில் வாகரையில் இறக்கிவிடுவார்கள். எங்களுடன் வந்து சேரலாம். முக்கியமான ஒரு விசயம்- நாகர்கோவிலில் இராணுவ முகாமிற்கு போகும் போது, துப்பாக்கிகள் எதையும் கொண்டுபோக வேண்டாம். 

அனைத்து ஆயுதங்கள், கைக்குண்டு களையும் அப்படியோ போட்டுவிட்டு செல்லுங்கள்“ இந்த உரையாடலை அவ தானித்துக் கொண்டிருந்த பொட்டம்மா னிற்கு பொறி தட்டியது. 

‘வாகரையில் இராணுவம் இறக்கி விடு வார்களா? 

அந்த பகுதி திருகோணமலை மாவட்ட அணியின் செல்வாக்குள்ள இடமா யிற்றே’. உடனே இன்னொரு கேள்வியை கேட்கும்படி ஜெனார்த்தனனிடம் எழுத்து மூலம் கொடுத்தார். 

அந்தக் கேள்வி- “வாகரையிலா எங்களை தரையிறக்குவார்கள்? 

அங்கு பதுமன்ணையின் ஆட்கள் (திருகோணமலை அணி) இருக்குமே? நாங் கள் ஆயுதங்கள் இல்லாமல் வருகிறோம். எங்களை சுட்டுத்தள்ளி விடுவார் களே?“. “அதைப்பற்றி நீங்கள் யோசிக்க வேண்டியதில்லை. 

பதுமனுடன் அனைத்தும் பேசியாயிற்று. அவரும் நமக்கு வேண்டியவர்தான். அவருக்கு எல்லாம் தெரியும். திருகோணமலை ரீமால் எந்த சிக்கலும் வராது“ உடனடியாகவே நாகர்கோவில் இராணுவ முன்னரணில் சரணடைவதாக ஜெனார்த்தனன் கூறியிருந்தார். 

அந்த செய்திக்காக கருணா அணி காத்திருந் தது. கடைசிவரை நாகர்கோவில் இராணு வத்திடம் கையை உயர்த்திக்கொண்டு புலி கள் யாரும் செல்லவேயில்லை. ஆனால், இலங்கை இராணுவ உலங்கு வானூர்தியில் புலிகளின் தளபதியொருவர் திருகோண மலைக்குச் சென்றார். 

அவர்- தளபதி சொர்ணம்! 

பிரபாகரனின் மிக நம்பிக்கையான தளபதி. திருகோணமலையை சேர்ந்தவர். விடுதலைப்புலிகளின் இரண்டு பிரதான பிளவின்போதும், பிரபாகரனின் மிக நம்பிக்கையை வென்றவர். 

இரண்டு சமயத்திலும், பிளவில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தது சொர்ணம் தான். சொர்ணம் கைது செய்த முதலாவது கிளர்ச்சியாளர் மாத்தையா! 1994 இல் புலிகளிற்குள் ஏற்பட்ட பிளவையடுத்து மாத்தையா கைதானார். 

கொக்குவிலில் இருந்த மாத்தையாவின் முகாமிற்கு இம்ரான் பாண்டியன் படையணியுடன் சென்று, மாத்தையாவின் கையில் விலங்கிட்டது சொர்ணம் தான். அந்த அணியில் பொட்டம்மானும் இருந்தபோதும், சொர்ணம் தான் அனைத்தையும் வழிநடத்தினார். கருணா பிளவின்போது, பதுமனை கைது செய்ய சென்றதும் சொர்ணம் தான். 

சொர்ணம் திருகோணமலைக்கு போய், பதுமனை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். பதுமனிற்கு புலிகளை விட்டுச் செல்லும் எண்ணமிருக்க வில்லை. அதனால்தான் சுலபமாக சரணடைந்திருக்கிறார். 

அவரை வன்னிக்கு கொண்டு செல்ல வேண்டும். எப்படி கொண்டு செல்வது? உலங்கு வானூர்தியில்- அதுவும் அரசாங்கத்தின் உலங்கு வானூர்தியில் கொண்டு செல்ல முடிவெடுத்தனர். 

கருணா பிளவின் பின்னணியில் அரசாங்கம் இருக்கிறது என்கிறீர்கள், எப்படி அவர்களின் உலங்கு வானூர்தியில் பதுமனை வன்னிக்கு கொண்டு செல்ல புலிகள் முடிவெடுத்தார்கள் என நீங்கள் நினைக்கலாம். 

அந்த சமயத்தில் புலிகளின் தேவைகளிற்காகவும் உலங்கு வானூர்திகளை அரசாங்கம் வழங்கியது. சமாதான பேச்சுக்களிற்காக செல்லவும், கிழக்கு பய ணங்களிற்கும் சமாதான செயலகம் ஊடாக உலங்கு வானூர்திகளை பெற் றுக்கொள்ளலாம் என்ற ஏற்பாடு இருந்தது. 


இதன்படி உலங்கு வானூர்தியை பெற்று பதுமனை வன்னிக்கு கொண்டு வர திட்ட மிட்டனர். உங்களிற்கு வந்த சந்தேகம் புலி களிற்கும் வந்தது. ஒருவேளை உலங்கு வானூர்தியில் பதுமனை ஏற்றிய பின்னர், கொழும்பிற்கோ அல்லது வேறு இராணு வத்தளத்திற்கோ கொண்டு சென்று தரையி றக்கி விடுகிறார்களோ தெரியாதே! 

இந்த சந்தேகம் சொர்ணத்திற்கும் இருந்தது. திருகோணமலையில் இருந்து பதுமனை அழைத்துக்கொண்டு புறப்பட்ட இரண்டு போராளிகளிற்குமிருந்தது. அதற்கு சொர்ணம் ஒரு தீர்வைத் சொன்னார். 

“இடைவழியில் எங்காவது குழப்படி விட்டால், அல்லது ஹெலிகொப்டர் வேறு எங்காவது போகிறது என தெரிந்தால், பதுமனையும் கட்டிப்பிடித்துக் கொண்டு கீழே குதித்து விடுங்கள்“! 

பதுமன் வன்னிக்கு அழைத்து வரப்பட்டு, புலிகளால் விசாரிக்கப்பட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். யுத்தத்தின் இறுதிநாட்களில் தான் விடுவிக்கப் பட்டார். இப்பொழுது சாதாரண குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளார். 

பதுமன் விவகாரம் இவ்வளவுதான். 

போர்த்தந்திரத்தில் பிரபாகரனா, கருணாவா சிறந்தவர் என்பதை, இனி நான் குறிப்பிடும் தகவல்களை வைத்து நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். ஏப்ரல் 09ம் திகதி. அதாவது கருணா பிளவு நடந்து ஒரு மாதத்தின் பின்னர், மட்டக்களப்புக்கு புலிகள் அணிகள் நகர்த்தப்பட்டு, கருணாவின் கட்டுப்பாட்டி லிருந்து பிரதேசம் மீட்கப்பட்டது. 

அது ஒரு பெரிய வெள்ளிநாள். புலிகள் மட் டக்களப்பு மீது படையெடுப்பார்கள் என கருணா எதிர்பார்த்திருந்தார். அவர் நினைத் தார் வெருகல் ஆற்றைக் கடந்துதான் புலி கள் வருவார்கள் என. வெருகல் ஆற்றை கடக்காதவாறு பலமான அரண் அமைத் தால் சரி, புலிகளை கட்டுப்படுத்தி விடலா மென நினைத்தார். 

தன்னிடமிருந்த 600 போராளிகளை 30 அணிகளாக பிரித்து, ஆற்றின் தெற்கு பக்கமாக நிலைகொள்ள வைத்தார். (இதில் கணிசமான புதிய பெண் போராளி களும் இருந்தனர். ஆண், பெண் போராளிகளை ஒன்றாகவே நிலைகொள்ள வைத்தனர். 

அது ஏற்படுத்திய விளைவுகள் பின்னாளில் பூதகாரமாக எழுந்தது. அதைப் பற்றி பின்னர் குறிப்பிடுகிறோம்) இந்த படையணிகளிற்கு சூட்டாதரவு வழங்க, சுமார் எட்டு 120mm பீரங்கிகள் காட்டுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 

வெருகலில் நிலைகொண்டிருந்த கருணா அணிக்கு தலைமை தாங்கியவர் ரெஜி. கருணாவின் மூத்த சகோதரர். அதிகாலை 1.30 அளவில் புலிகளின் ஒப்ரேசன் தொடங்கியது. 

கடல்வழியாக வந்த புலிகளின் அணியொன்று, வெருகல் முகத்துவாரத்தின் தென்பகுதியில் இறங்கி, உள்பக்கமாக இரகசியமாக நகர்ந்தது. இன்னொரு அணி வெருகல் ஆற்றங்கரையின் மறுபக்கம் வந்தது. அந்த சமயத்தில் மட்டக் களப்பின் மூத்த உறுப்பினர்கள் தொலைத்தொடர்பு கருவிகளின் மூலம், 

கருணாவின் ஆட்களுடன் தொடர்புகொண்டு, மீண்டும் அமைப்பிற்குள் வரு மாறு கேட்டுக்கொண்டிருந்தனர். வெருகல் ஆற்றோரம் நின்ற அணி, வேறு விதமாக பேசியது. தாங்கள் சரணடைய போவதாக கேட்டார்கள். 

வாருங்கள் என சந்தோசமாக அழைத் தனர் கருணா அணியினர். சரணடைய வந்தவர்கள் திடீரென துப்பாக்கிகளை எடுத்து சுட ஆரம்பித்தனர். அதேநேரம் பால்சேனையில் இன்னொரு தரையிறக் கம் நடந்தது. கருணா அணியை எதிர் பாராத விதமாக புலிகள் சுற்றி வளைத் தனர். 

கதிரவெளியில் தரையிறங்கிய அணிகள், கருணா குழுவின் பின்பக்கமாகவும் வந்து தாக்க தொடங்கினார்கள். இதற்குள் இன்னொரு சுவாரஸ்யம். புலிக ளிற்கு எதிராக, 120mm பீரங்கிகளை கருணா நிறுத்தி வைத்திருந்தார் அல்லவா, அவற்றிலிருந்து ஒரு செல் கூட புலிகளிற்கு எதிராக அடிக்கப்படவில்லை. 

காரணம், கொமாண்டோ தாக்குதல் ஒன்றின் மூலம், அந்த பீரங்கிகளை புலிகள் கைப்பற்றினர்.எல்லா திட்டங் களும் குழம்பியதால், கருணா குழு வினர் நிலைகுலைந்து போனார்கள். அடுத்தது என்ன செய்வதென தெரி யாமல், திண்டாடினார்கள். 

பால்சேனையில் தரையிறங்கிய புலி கள், வடக்கு மற்றும் தெற்கு பக்கமாக முன்னேற தொடங்கினார்கள். இந்த அணிகளிற்கு ரமேஷ் தலைமை தாங்கி னார். ஒரு அணி கதிரவெளியை கைப்பற்ற, மற்ற அணி வாகரைக்கு பக்கத் திலிருந்த கண்டலடி முகாமை கைப்பற்றினர். 

கருணாவின் சகோதரர் ரெஜி அங்கிருந்துதான் கட்டளைகள் வழங்கிக் கொண் டிருந்தார். அவருக்கும் காயம் ஏற்பட்டது. காயத்துடன் தப்பியோடி விட்டார். மொத்தத்தில் சில மணித்தியாலத்தில் பெரும் உயிர் சேதமின்றி கருணா அணியை புலிகள் முறியடித்தனர். 

இப்பொழுது சொல்லுங்கள், கருணா படித்த பாடசாலையில் பிரபாகரன்தான் ஹெட்மாஸ்டர் என்பது சரிதானே! 

 (தொடரும்)

(தொடரும்)

அடுத்த தொடர்கள்
































கருணா படித்த பாடசாலையில் பிரபாகரன்தான் ஹெட் மாஸ்டர்!

































  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கருணா படித்த பாடசாலையில் பிரபாகரன்தான் ஹெட் மாஸ்டர்!- இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 32 Rating: 5 Reviewed By: Thamil