முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் நீதிமன்ற தீர்ப்பை புறக்கணித்து பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்த விவகாரத்தில், உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரவுள்ளது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு.
நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த பிக்கு களால், இறந்த பிக்குவின் உடல் ஆலய வளாகத்தில் தகனம் செய்யப்பட்டது.
இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல், இதில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை யெடுக்க வேண்டுமென குறிப்பிட்டு, நாளை மறுநாள் உயர்நீதிமன்றத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வழக்குத் தாக்கல் செய்யவுள்ளது.
முல்லைத்தீவு நியமன பட்டியல் எம்.பி சாந்தி சிறிஸ்கந்தராசா சார்பில், ஜனா திபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இந்தவழக்கை தாக்கல் செய்வார்.