728x90 AdSpace

<>
Latest News
Tuesday, 17 September 2019

பிரபாகரனிற்கும், பால்ராஜூக்குமிடையில் கெமிஸ்ற்ரி சரியில்லையா?- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 61

இந்தவாரத்தில் இருந்து விடுதலைப்புலிகளின் தலைசிறந்த தளபதி பால்ராஜின் அத்தியாயத்தை பார்க்க போகின்றோம். 

விடுதலைப்புலிகள் அமைப்பில் நீண்ட காலம் கோலோச்சிய தளபதி கள் பால்ராஜூம் சொர்ணமுமே. இதில் சொர்ணத்தின் முக்கியத்துவத் திற்கு பிரபாகரனுடன் இருந்த தனிப் பட்ட நெருக்கம் காரணமாக அமைந் தது. 

பால்ராஜின் கதை வித்தியாசமானது. விடுதலைப்புலிகள் அமைப்பில் மிக முக்கிய தளபதியாக இருந்தவர்களில் பிரபாகரனுடன் நெருக்கம் குறைந்த ஒரே தளபதி பால்ராஜ்தான். இது நிறையப்பேருக்கு அதிர்ச்சியாக இருக்கும். இது மட்டுமல்ல, பால்ராஜின் வரலாற்றில் இன்னும் நிறைய அதிர்ச்சிகள் உங்களிற்கு காத்திருக்கிறது. 

நம்பச் சிரமப்படுவீர்கள் என்பது தெரியும். ஆனால் வரலாற்றை யாராலும் திரித்து எழுத முடியாது. வரலாறு கசப்பானதாகத்தான் இருக்கும். பிரபாகரனிற் கும் பால்ராஜிற்குமிடையில் இடைவெளி இருந்ததென குறிப்பிடுவதை மோத லாக நீங்கள் புரிந்து கொள்ள கூடாது. 

என்ன அர்த்தத்தில் குறிப்பிட்டோம் என்பதை புரிய வைக்கிறோம். டந்த வாரங்களில் மணலாறு காட்டின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் குறிப்பிட் டோம். மணலாற்றின் முதலாவது தளபதியை விட்டால் மிச்சப்பேர் அத்தனை பேரும் எப்படி நியமனம் பெற்றார்கள் என்பதை குறிப்பிட்டேன். அதாவது, பிரபாகரனின் மெய்பாதுகாவலர் அணியில் இருந்து, அவரது கண் முன்னால் வளர்ந்தவர்கள். 

அவர்கள் தளபதி பொறுப்பை சரியாக செய்வார்கள் என்ற நம்பிக்கையை பிரபாகரன் பெற்றதும், அவர்களை தளபதியாக்கினார். இது புலிகளின் இறுதிக் காலம் வரை நிகழ்ந்தது. புலிகள் அமைப்பிற்குள் இரண்டுவிதமான வளர்ச் சிப்பாதை உண்டு. ஒன்று, பிரபாகரனின் மெய்பாதுகாவலர் அணியிலிருந்து வளர்பவர்கள். 

மெய்பாதுகாவலர் அணி பொறுப்பாளராக இருப்பவர் குறிப்பிட்ட காலத்தில் மாற்றப்பட்டு, ஏதாவதொரு தளபதி பதவிக்கு செல்வார். வெள்ளை, கடாபி, குமரன், வேலவன், ராஜேஷ், ஆராமுதன், இரட்ணம் என வரிசையான உதார ணங்கள் உள்ளன.இன்னொரு பாதை, யுத்தமுனை. 

பால்ராஜ், தீபன், வீரமணி, ராஜசிங்கன் என உதாரணங்கள் உள்ளன. இவர்கள் களத்தில் செல்வாக்கு செலுத்துவார்கள். ஆனால் அமைப்பில் அதிகாரம் செலுத்தவோ, களத்திற்கு அப்பால் செல்வாக்கு செலுத்துபவர்களாகவோ இருக்க மட்டார்கள்.

இதில் இரணடாம் வகை- களத்தில் செல்வாக்கு செலுத்துபவர்கள்- ஊடகங்க ளில் அடிபட்டு, சனங்களிற்குள் அறியப்பட்டிருப்பார்கள். அவர்கள்தான் விடு தலைப்புலிகளின் முகம் என சனங்கள் நினைப்பார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. 

வெளியில் பெயர் அடிபடாத முதலாம் வகையினர்தான் விடுதலைப்புலிகளின் முகம். இந்த தொடர் முடியும் தறுவாயில் வாசகர்கள் அதை தெளிவாக புரிந்து கொள்ளலாம். பால்ராஜ், தீபன் ஆகியோரின் இறுதிக்காலம் பற்றிய அத்தி யாயங்கள் கூடுதல் புரிதல் தரும். 

பால்ராஜ் கொக்குத்தொடுவாயை சேர்ந்தவர். 1983ம் ஆண்டு விடுதலைப் புலி களுடன் இணைந்தார். உள்ளூரிலேயே பயிற்சியை முடித்திருந்தார். 1984 இல் இராணுவத்தின் பதுங்கித்தாக்குதல் ஒன்றில் சிக்கி, தோளில் காயமடைந்து சிகிச்சைக்காக இந்தியா சென்றார். 

அவருக்கு சிகிச்சை முடிந்த சமயத்தில் இந்தியாவில் 9வது பயிற்சிமுகாம் ஆரம்பித்தது. அதில் இணைக்கப்பட்டார். பயிற்சி முடிந்ததும் முல்லைத்தீவு வந்துவிட்டார். அப்போது முல்லைத்தீவு தளபதியாக இருந்தவர் பசீலன். பசீல னின் அணியில் பால்ராஜ் சிறப்பாக செயற்பட்டு கொண்டிருந்தார்.

பிரபாகரன் அப்போது இந்தியாவிலும், யாழ்ப்பாணத்திலும் இருந்து செயற் பட்டார். அதனால் பால்ராஜை அவர் சரியாக அறிய முடியாமல் போய்விட்டது. இந்திய இராணுவத்தின் வருகையின் பின்னர் மணலாற்று காட்டுக்கு பிரபாகரன் சென்றபோதுதான். 

பால்ராஜ், நவம் போன்றவர்களுடன் நேரடி பரிச்சயம் ஏற்பட்டது. இந்தியப் படைகள் வெளியேறிய பின்னர் பால்ராஜ் வன்னி படையணிகளை ஒருங் கிணைத்து தளபதியானார். மற்ற முக்கிய தளபதிகள் தமது ஆரம்ப கட்டத்தில் பிரபாகரனிற்கு முன்பாக வளர்ந்திருப்பார்கள். 

ஒரே முகாமில் தங்கி, நீண்டநாட்கள் ஒன்றாக இருந்திருப்பார்கள். பால்ராஜிற்கு இது கிடைக்கவில்லை. என்னதான் புலிகளின் தலைசிறந்த போர்த்தளபதியாக அவர் இருந்தாலும், பிரபாகரனுக்கும் அவருக்குமிடையில் “கெமிஸ்றி“ சரியாக அமையவில்லை.பால்ராஜ் அபரிமிதமான போராற்றல் கொண்டவராக இருந்தாலும், தீர்மானிப்பவராக அவர் இருக்கவில்லை. 

1990களின் தொடக்கத்தில் கூட்டுபடை தலைமையகம் என்ற கட்டமைப்பை புலிகள் அறிமுகம் செய்தனர். அதன் முதலாவது தளபதியும் பால்ராஜ்தான். ஆனால் விரைவிலேயே அந்த பொறுப்பு சொர்ணத்திற்கு கைமாற்றப்பட்டது. 

காரணம், பால்ராஜ் தனது படையணியான சாள்ஸ் அன்ரனி படையணி தளப தியை போல செயற்படுகிறார் என்ற குற்றச்சாட்டு. கூட்டுபடை தலைமையகம் என்பது போருக்கான கட்டமைப்பு. 

அதன் தளபதியாக நியமிக்கப்படுபவர், போரிடும் படையணி தளபதிகளிற்கு முன்னுரிமை கொடுப்பார் என்ற ரீதியிலும் இதனை பார்க்கலாம். பிரபாகர னின் மெய்ப்பாதுகாவலர் அணி முக்கியஸ்தர்களை பால்ராஜ் அவ்வளவாக அறிந்திருக்கமாட்டார். 

பரிச்சயமிருந்தாலும் ஆளுமை, திறமை மதிப்பீட்டிற்கு வாய்ப்பிருக்காது. இது வும் ஒரு காரணமாக இருக்கலாம். இதன்பின் யாழ்ப்பாணத்தில் நடந்த பெரிய தாக்குதல்கள் அனைத்தையும் சொர்ணம்தான் வழிநடத்தினார். 

மிக நெருக்கடியான கட்டத்தில் முன்னேறிப்பாய்தலிற்கு எதிராக புலிகள் 1995 இல் மேற்கொண்ட புலிப்பாய்ச்சல் நடவடிக்கையை சொர்ணம், பால்ராஜ் இருவரும் இணைந்து வழிநடத்தினர். அதன்பின் சொர்ணமே யாழ்ப்பாண சண்டையை வழிநடத்தினார். 

புலிகள் யாழ்ப்பாண குடாநாட்டையே இழக்கும் நிலையேற்பட்டதை இந்த தொடரில் முந்தைய பகுதிகளில் குறிப்பிட்டோம்.சொர்ணம் தாக்குதலிற்கு சரி வர மாட்டார் என்ற பின்னர், 1996 முல்லைத்தீவு மீதான ஓயாத அலைகள் 1 பால்ராஜின் தலைமையில் நடந்தது. 

இதன்பின்னர் 1997 இல் ஆனையிறவு மீதான நடவடிக்கை பால்ராஜின் தலை மையில் நடந்தது. அது வெற்றியளிக்கவில்லை. இதுதான் பால்ராஜ் பெருமள வில் தலைமைதாங்கிய இறுதி நடவடிக்கை. அதன்பின் தீபன் யுத்தத்தில் எழுச்சிபெற, அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன் பின்னர் பால்ராஜின் முத்திரை பதிந்தது குடாரப்பு தரையிறக்கத்தில். இடைப்பட்ட காலத்தில் அவர் கடுமையான போராட்டத்தை சந்திக்க வேண்டி யிருந்தது. 1997 இல் படையினர் ஜெயசிக்குறு நடவடிக்கையை ஆரம்பித்தனர். மாங்குளத்திற்கு அண்மையில் மோதல் நடந்து கொண்டிருந்தது. 

அந்த பகுதி பொறுப்பாளராக இருந்தவர், பின்னாளில் மட்டக்களப்பு தளபதியாக இருந்த ரமேஷ். ஆனையிறவு தோல்வியின் பின்னர் ரமேஷின் கீழ் 150 பேர் கொண்ட அணித்தலைவராக பால்ராஜ் நிறுத்தப்பட்டார். அந்தநாட்களில் பால்ராஜ் சிரித்தபடியே களத்தில் நின்றார். 

தனக்குப் பின்னால் வந்தவர்களின் கீழ் சிறிய அணியுடன் நிறுத்தப்பட்டது அவருக்கு பிரச்சனையாக இருக்கவில்லை. ஆனால் அவருக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டவர்களிற்குத்தான் சங்கடம். இயக்கம் என்ன சொன்னாலும் செய்ய தயாராக இருக்க வேண்டும் என அடிக்கடி சொல்லி, அவர்களின் சங்க டத்தை களைய முயற்சிப்பார் பால்ராஜ்.

1996 இன் பின்னர் வன்னியில் ஏராளம் இராணுவ நடவடிக்கைகளை இரு தரப்பும் செய்தன. இதில் ஓயாத அலைகள் 1, சத்ஜெய முறியடிப்பு, 1997 ஆனை யிறவு தாக்குதல், ஜெயசிக்குறு எதிர்முனைகளில் சிறிய பகுதி, 1999 இல் ஒட்டுசுட்டானை கைப்பற்றிய ரிவிபல இராணுவத்திற்கு எதிரான முன்னரண் பாதுகாப்பு, 

ஓயாத அலைகள் 3 இல் சில முனை, குடாரப்பு தரையிறக்கம் என்பனதான் பால்ராஜ் பங்குபற்றிய தாக்குதல்கள். இதில் பின்னாளில் அவரது முக்கியத் துவம் குறைக்கப்பட்டு, ஒரு பகுதி வழிநடத்துபவராகவே இருந்தார். இதற்கு காரணம்தான், முன்னரே சொன்ன பிரபாகரனுடன் கெமிஸ்ற்ரி சரியில்லாதது. 

அடுத்த தொடர்கள்
































கருணா படித்த பாடசாலையில் பிரபாகரன்தான் ஹெட் மாஸ்டர்!

































  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: பிரபாகரனிற்கும், பால்ராஜூக்குமிடையில் கெமிஸ்ற்ரி சரியில்லையா?- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 61 Rating: 5 Reviewed By: Thamil