728x90 AdSpace

<>
Latest News
Tuesday, 24 September 2019

வடக்கு, கிழக்கில் பௌத்தம் புறக்கணிக்கப்படுகிறது; அங்கு எமக்கும் சமஉரிமையுள்ளது; அதனாலேயே களமிறங்கினேன்: ஞானசாரர் ‘மிரட்டல்’ பதில்!

இந்து, பௌத்த மோதலை உருவாக்க நாம் ஒருபோதும் நினைக்கவில்லை. ஆனால், நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் செயற்படும் சட்டத்தை வடக்கு கிழக்கில் மாத்திரம் தட்டிக்கழிக்க முயற்சிப்பதே முரண்பாடாக உள்ளதெனத் தெரிவித்துள்ளாா். 

பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர். நீதிமன்ற தீர்ப்பு தாமதமாகவே தேரரின் பூதவுடலை தகனம் செய்தோம் என்றும் தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத் தரவையும் மீறி, செம்மலை நீராவி யடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் கொல ம்பே மேதாலங்கார தேரரின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது தமிழ் மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. 

இந்த சட்டவிரோத நடவடிக்கையை ஞானசார தேரரே வழிநடத்தியிருந்தார். இந்த நிலையில், ஞானசாரர் இது குறித்து முதன்முறையாக வாய் திறந் துள்ளார். “இந்து பௌத்த மக்கள் மத்தியில் இன முரண்பாடுகளை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கம் எம்மிடம் இல்லை. 

கொழும்பிலும் ஏனைய சிங்கள பகுதிகளிலும் தமிழ், சிங்கள மக்கள் மிகவும் நல்ல உணர்வுடன் ஆலய, மத நடவடிக்கைகளை முன்னெடுத்து ஒற்றுமை யாகச் செயற்பட்டு வருகின்றனர். ஆனால், வடக்கிலும் கிழக்கிலும் மாத்திரம் அந்த நிலைமை இல்லாது பௌத்தம் புறக்கணிப்பட்டு இனவாதம் பரப்பப்பட்டு அரசியல் சுயநலம் காரணமாக முரண்பாடுகள் ஏற்படுத்தப்படுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. 

அது மட்டுமல்ல, அந்த பகுதி பௌத்த விகாரைக்குரிய நிலமாகும். இந்துக்க ளுக்கு எவ்வாறு அங்கு சகல உரிமைகளும் உள்ளதோ, அதேபோல பௌத்தர்க ளிற்கும் சம உரிமை உள்ளது. அங்கு எமது தேரர் ஒருவருக்கு நெருக்கடி என் றால் எம்மால் வேடிக்கை பார்க்க முடியாது. 

இந்த நாட்டில் பௌத்த சிங்கள முதன்மைத்துவம் அரசியல் அமைப்பில் கூறப் பட்டுள்ள நிலையில், அது வடக்கு கிழக்கிற்கு பொருந்தாது என்றே அவர்கள் நினைக்கிறார்கள். இந்த விடயத்தில் சட்டத்துறையை நாடிய சட்டத்தரணிக ளும் அவ்வாறான ஒரு பிரிவினைவாத நிலைப்பாட்டில் இருந்தே வாதாடவும் முன்வருகின்றனர். 

இதேபோல் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இவ்வாறான பிரிவினைகளை தூண்டி நாட்டில் இல்லாத பிரச்சனைகளை உருவாக்குகின்றனர். இவ்வாறான நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு என்னவாக இருந்தாலும் நாம் எமது உரிமை களை விட்டுக்கொடுக்க மாட்டோம்.

கேள்வி: எனினும் யுத்தத்திற்கு பின்னர் இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த ஒரு பகுதியில் விகாரை அமைத்து பழைமை வாய்ந்த விநாயகர் ஆலய பகுதியை புறக்கணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதென்ற நிலைப்பாடு தமிழ் மக்கள் மத்தியில் உள்ளதே? 

பதில்: யுத்தகாலத்தில் கைப்பற்றுவதாக கூறப்படுவது தவறு. இங்கு மேதாலங்கார தேரர் நீண்டகாலமாக இருந்தார். ஏன் வடக்கு, கிழக்கில் விகாரைகளை அமைக்கக்கூடாதா? அதனையா தமிழ் சமூகம் சார்பில் வலியுறுத்துகிறீர்கள்? 

கேள்வி: இல்லை. இந்து ஆலய வளாகத்தில் தகனம் செய்ததையே தவ றென மக்கள் கூறுகின்றனர். இது இந்து்களை வேதனைப்படுத்தும் வித மாக அமைந்துள்ளதே? 

பதில்: ஆலயத்தில் அப்படி நடந்து கொள்ளவில்லை. விகாரைக்கு உரிய இடத்திலேயே நாம் அவ்வாறு செய்தோம். அத்துடன் நீதிமன்றத்தை அவ மதிக்கவில்லை. தீர்ப்பு வரும்வரை உடலை வைத்திருக்க முடியாது. இதனால் அவசரமாக தகனம் செய்தோம். இதை இந்து, பௌத்த மோத லாக பார்க்க வேண்டாம்.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: வடக்கு, கிழக்கில் பௌத்தம் புறக்கணிக்கப்படுகிறது; அங்கு எமக்கும் சமஉரிமையுள்ளது; அதனாலேயே களமிறங்கினேன்: ஞானசாரர் ‘மிரட்டல்’ பதில்! Rating: 5 Reviewed By: Thamil