சஜித்தைத் தேர்ந்தெடுத்தமை தனக்குத் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சி என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள் ளார்.
அவருக்கு ஒரு கெட்டியான பௌத்த பின்னணி இருப்பது வரவேற்கத்தக் கது. ஆனால் ஒரு சில விடயங்கள் அவர் தமிழர் மீது தன்னுறுதியில் லாத மனோ நிலையைக் கொள்ளக் கூடியவாறு அமைந்திருக்கலாம்.
அவரின் தந்தையார் தமிழ்ப் போராளிகளின் வன்முறைக்கு இலக்கானார் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை ஒரு காரணம். அடுத்தது நிருவன மயப்படுத்தப்பட்ட பௌத்தத்திற்கும் புத்தரின் போதனைகளுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசத்தை அவர் உணர்ந்து கொண்டுள்ளாரோ தெரிய வில்லை.
தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அவரின் 'இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு' என்ற அதி தீவிர சிந்தனை தடையாக இருக்கலாம்.
ஆனால் அவர் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த நாடு சிங்கள பௌத்தர்களுக்குரிய நாடு அல்ல. புத்தர் காலத்திற்கு முன் பிருந்தே இந்த நாடு சைவத் தமிழ் நாடாக இருந்தது.
பௌத்தம் அறிமுகப் படுத்தப்பட்டதே தமிழ் இந்துக்கள் மத்தியில் தான். மேலும் சிங்கள மொழி யானது நடைமுறைக்கு வந்தது கி.பி.6ம் அல்லது 7ம் நூற்றாண் டிலேயே.
இன்று 2000 ஆண்டுகளுக்கு மேலான தொல்பொருள் சார்ந்த பௌத்த எச்சங்கள் என்று கூறப்படுபவை தமிழ் பௌத்தர்கள் கால எச்சங்கள்.
இன்று நாட்டின் 75 சதவிகிதமானவர்கள் சிங்கள் பௌத்தர்கள் என்பது உண்மையே. ஆனால் வட கிழக்கின் 85 சதவிகிதத்திலும் அதிகமானவர்கள் தமிழ் பேசும் மக்களே.
எங்களைப் பொறுத்தவரையில் எந்த மதத்திற்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே எமது நிலைப்பாடு.
வடக்கில் இந்து சமயமானது ஆதிகாலந் தொட்டு கோலோச்சி வந்துள்ளது.
அது மற்றைய மதங்கள் யாவற்றையும் மதிக்கும் ஒரு சமயம்.
'உண்மை ஒன்று; அதை ஞானிகள் பல நாமங்களால் குறிப்பிடுகின்றார்கள்' என்பதே இந்து மக்களின் கருத்து வெளிப்பாடு.அதனால் தான் வட கிழக்குத் தமிழ்ப் பேசும் மக்கள் தமக்கு பிரிக்கப்படாத நாட்டினுள் சுயாட்சியைக் கோருகின் றார்கள்.
'தேசிய அபிமானிகள்' என்ற வகையில் ஆட்சி ஓச்சியவர்களில் இருந்தும் வித் தியாசமான ஒருவராக சஜித் சிறந்து விளங்க முடியும்.
இதுவரையில் ஆட்சி ஓச்சியவர்கள் அறிவுடைமையையும் உணர்வுடைமையையும் வெளிக்காட்ட முடியாதவர்களாகவே இருந்தார்கள்.
தன்னால் பின்னப்பட்ட மேற்கூறப்பட்ட வலையில் இருந்து சஜித் விடுபட்டா ரானால் எல்லா மக்களும் பாராட்டும் அதி சிறந்த ஜனாதிபதியாக வரக்கூடிய தகைமைகள் கொண்டவர்; அவர் என்பது எனது கருத்து. எனத் தெரிவித்துள் ளாா்.