728x90 AdSpace

<>
Latest News
Friday, 13 September 2019

மின்னேரியா முகாமில் உருவான கருணா குழு!: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 36

விடுதலைப்புலிகள் அமைப்பில் இரு ந்து கருணா பிரிந்து சென்ற நாட்கள், அப்போது நடந்த உள்விவகாரங் களையெல்லாம் கடந்த பாகங்களில் குறிப்பிட்டிருந்தோம். 


விடுதலைப்புலிகளின் பகுதியை விட்டு கருணா வெளியேறி சென்ற பின்னர் என்ன நடந்தது என்பது ஓரளவு எல்லோருக்கும் தெரிந்த சங்கதி தான். கொழும்பில் கருணா சில நாட்கள் தங்கியிருந்த பின், இந்தியா சென்றார் என் பதை கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். 

றோ அதிகாரிகளின் நேர்முகம் முடிந்ததும், மீண்டும் இலங்கை கொண்டு வரப் பட்ட கருணா, மின்னேரியா இராணுவ முகாமிற்கு அனுப்பப்பட்டார். புலிகளி லிருந்து பிரிந்த உறுப்பினர்கள் அங்கு ஏற்கனவே கொண்டு வந்து தங்கவைக் கப்பட்டிருந்தனர். 

அங்குதான் கருணா குழு என்ற துணை இராணுவக்குழு முதன்முதலில் உரு வாக்கப்பட்டது. பின்னாளில் கிழக்கு முதலமைச்சராக இருந்த பிள்ளையான், அவரது முக்கியஸ்தர்கள் எல்லோரும் மின்னேரியா இராணுவ முகாமில் தங்கியிருந்தவர்கள்தான். 

இதன் பின் என்ன நடந்ததென்பது வாச கர்களிற்கு ஓரளவு தெரிந்ததே. அத னால் இத்துடன் கருணா பிளவை முடித் துக் கொள்கிறோம். வாய்ப்பிருந்தால், ஒரு மீள் தொடராகவோ, அல்லது இதே பகுதியிலோ கருணா குழுவின் உள் வீட்டு விவகாரங்கள் சிலவற்றை குறிப் பிடுகின்றோம்.


இறுதியுத்தத்தில் நடந்தது என்ன என்ற இந்த தொடரில், இடையீடாக கருணா பிளவை குறிப்பிட்டோம். புலிகளின் தோல்விக்கு பல்வேறு உபகாரணங்கள் இருந்தாலும், முதன்மையானது – வெளிநாட்டிலிருந்து ஆயுதங்களை இறக்கு மதி செய்ய முடியாமல் போனது. 

புலிகளின் உயிர்நாடியாக இருந்தது கடல்வழியாக இறக்குமதியாகும் ஆயுதங் கள் தான். அந்த உயிர்நாடி அறுக்கப்பட்டபோது புலிகளின் அழிவு ஆரம்பித்தது. தமிழீழ விடுதலை இயக்கங்கள் ஆரம்பித்தபோது, அவற்றை ஊதிப்பெருப் பிக்க வைப்பதில் இந்திய புலனாய்வுத்துறை தீவிரமாக ஈடுபட்டது. 

இயக்கங்கள் கோட்பாட்டு ரீதியில் தம்மை வலுவாக்கி, முறையான கட் டமைப் புக்களுடன் மக்கள் இயக்க மாக வளர்பதை இந்தியா விரும்ப வில்லை. 

சிங்கள அரச தலைமைகளை வழிக்கு கொண்டுவர, இந்தியாவின் பிராந்திய நலன்களை அடைவதற்கே இயக்கங் களை கையாள நினைத்தது. இதனால், இயக்கங்கள் முறையாக உருவாகு வதை இந்தியா விரும்பவில்லை.

1980களின் தொடக்கத்தில் இயக்கங்கள் திடீர் வளர்ச்சியடைந்து, ஜே.ஆர் அர சுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டுமென இந்திய உளவு அமைப்பான றோ விரும்பியது. எல்லா இயக்கங்களும் அவசரகதியில் ஆட்சேர்ப்பு செய்து, ஆள ணியில் உப்பி பெருக்க வேண்டுமென றோ விரும்பியது. 

ஆளணியை சேர்க்க இயக்கங்கள் தயங்குவதற்கு இரண்டு காரணங்கள்தான். போராளிகளை பராமரிக்க பணமும், ஆயுதமும் தேவை. இயக்கங்கள் இவற்றை யோசிக்காமல் இருக்க, பணமும் ஆயுதமும் றோ வழங்கியது. 

றோ கொடுத்த பணம், ஆயுதங்களால் ஈ.பி. ஆர்.எல்.எவ், ரெலோ போன்ற கட்சிகள் நிலை தடுமாறி விட்டன. அதிக ஆளணியை உள்வாங்கி, தடுமாறிக் கொண்டிருந்தன. இந்தியா எல்லா இயக்கங்களிற்கும் ஆயுதம் வழங்கியது. என்றாலும், கவனமாக வழங் கியது. 

நீண்டகால பாவனைகளற்ற, ஆபத்து குறைந்த ஆயுதங்களையே வழங்கி னார்கள். அதிலும் ஒருமுறை- பாவித்து, பழுதடைந்த துப்பாக்கிகளை புலிக ளிற்கு வழங்க முயன்றனர். எனினும், புலிகள் அதை மறுத்து விட்டனர். ஆளணி விஸ்தரிப்பிலும், ஆயுத விஸ்தரிப்பிலும் புலிகள் மிக கவனமாக இருந்தனர். 

றோ ஆயுதம் வழங்குவது, குறிப்பிட்ட இயக்கத்தை கைக்குள் வைத்திருப்ப தற்கு. உங்களிற்கு எது தேவையென்றாலும் நாங்கள் தருவோம், நீங்கள் முயற் சிக்கத் தேவையில்லையென்பது றோ சொல்லாமல் சொன்ன செய்தி. 

இயக்கங்கள் வெளிநாடுகளில் இருந்து ஆயுத தளவாடங்களை இறக்குமதி செய்யாமலிருக்க வைப்பதற்காக இப்படி பழுதடைந்த ஆயுதங்களை கொடுத்து சமாளித்துக் கொண்டிருந்தது. 

ஆயுத பலத்திற்கு தம்மை நம்பி இயக்கங்கள் இருப்பது றோவிற்கு வசதி. ஒவ்வொரு இயக்கத்தின் பலம் என்ன, பலவீனம் என்னவென்பது றோவின் விரல்நுனியில் இருக்கும். 

இந்தியாவிற்கு அருகில் ஆயுதப்போராட்ட இயங்களை வளர்த்தாலும், அவர் களின் பலம் பற்றிய மதிப்பீட்டை வைத்திருந்ததால், ஆபத்தில்லையென றோ நம்பியது. 

ஆரம்பத்தில் இருந்தே றோவின் திட்டங்களிற்குள் சிக்குப்படாத இரண்டு தலை வர்கள் உமாமகேஸ்வரனும், பிரபாகரனும். உமாமகேஸ்வரன் இந்திய கொல னித்துவத்திற்கு எதிராக இருந்தாரே தவிர, பிரபாகரன் அளவிற்கு இராணுவ நுட்பம் நிறைந்தவராக இருக்கவில்லை. 

இதில் இன்னொரு ஒற்றுமையையும் வாசகர்கள் கவனிக்க வேண்டும். இந் தியா ஆயுதங்கள் வழங்கிய போது, இந்த இரண்டு இயக்கங்களுமே சந்தோச மாக அவற்றை வாங்கிக்கொண்டார். ஆனால், அத்துடன் இன்னொரு உத்தி யையும் கைக்கொண்டார்கள். 

அதாவது, வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்வது. இந்த சமயத்தில் இரண்டு தலைவர்களும் எதிர்எதிரானவர்களாக இருந்தபோதும், இந்தியாவில் மட்டும் தங்கியராது, வெளிநாட்டிலிருந்தும் ஆயுதங்களை இறக்க வேண்டுமென திட்டமிட்டார்கள். 

ஆரம்பத்தில் சிறியளவில் வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை புலிகள் இறக்குமதி செய்யத் தொடங்கினார்கள். அது மிகச்சிறிய அளவானது. சில துப் பாக்கிகள், உந்துகணை செலுத்திகள் போன்றவை. 

1980களின் மத்திய காலம்வரை புலிகளிற்கு உகந்த- பாதுகாப்பான பின்தளமாக தமிழகம் இருந்தது. வெளிநாடுகளில் கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங் களை தமிழகம் கொண்டுவந்து, அங்கிருந்துதான் இலங்கைக்கு கொண்டு வந்தனர். தமிழக சுங்கத்திற்கு தெரிந்தோ, தெரியாமலோ இது நடந்தது. 

அப்போது ஈழவிடுதலை இயக்கங்கள் என்றால் தமிழகத்தில் மிக பயபக்தியாகி விடுவார்கள். இயக்கங்களின் எல்லா நடவடிக்கைகளையும் அங்கீகரிப்பார்கள். சற்று பாரதூரமான விடயம், சட்டப்பிரச்சனைகள் வரும், சம்பந்தப்பட்டவர் களின் அதிகாரத்திற்கு அப்பாலான பிரச்சனையென்றால் மட்டும்தான் தயங் குவார்கள். 

ஆனால், அதுவும் இயக்கங்களிற்கு பிரச்சனையில்லை. தமிழக அரசு, அரசி யல்வாதிகள் இயக்கங்களுடன் நெருக்கமான இருந்தனர். இயக்கங்கள் தமி ழகத்தை பின்தளமாக பாவித்த சமயத்தில் எம்.ஜி.ஆர் தமிழக முதல்வராக இருந்தார். அவருக்கு பிரபாகரனில் அலாதி பிரியம். 

ஒருமுறை தமிழக காவல்துறை புலிகள் இறக்குமதி செய்த தொலைத் தொடர்பு கருவிகளை பறிமுதல் செய்துவிட்டது. அதை மீள ஒப்படைக்க வேண்டுமென பிரபாகரன் உண்ணாவிரதம் இருந்தார். 

இந்த விடயத்தில் உடனடியாக எம்.ஜி. ஆர் தலையிட்டு, தொலைத்தொடர்பு கருவிகளை மீள ஒப்படைக்க வைத்தார். 1984இல் இன்னொரு சம்பவம் நடந்தது. 

புலிகள் தமது சொற்படி நடக்கமாட்டார்கள் என்பதை இந்திய உளவுப்பிரிவு மெல்லமெல்ல நாடிபிடித்து அறிந்து கொள்ள ஆரம்பித்த சமயம். புலிகளை தவிர்த்து மற்றைய இயக்கங்களை பலப்படுத்தலாமென றோ நினைத்தது. 

இதன்படி ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கங்களிற்கு ஒரு தொகை ஆயுதங்களை கொடுத்தது. புலிகளிற்கு கொடுக்கவில்லை. இலங்கையில் அப்போதிருந்த இயக்கங்களை ஊட்டிவளர்த்து, கோட் ஃபாதராக இருந்தது றோ தான். பணம், ஆயுதம் வழங்கும்போது யாருக்கும் அதிகமாக வழங்கினால், அதிருப்திகள் வருமென்பதை றோ அறிந்திருந்தது. 

அதனால் அப்படி பாரபட்சம் காட்டாது. தமது சொல்படி புலிகள் நடக்கவில்லை யென்றதும், றோ இப்படி செயற்பட்டது. இதன்மூலம் புலிகளை வழிக்கு கொண்டு வரலாமென றோ நினைத்திருக்கலாம். என்றாலும் றோவின் கணக் கிற்குள் புலிகள் அகப்படவில்லை. 

எம்.ஜி.ஆரின் உதவியை புலிகள் நாடினார்கள். ஒருநாள் சங்கரும் (புலிகளின் வான்படை தள பதியாக இருந்தவர்), பிரபாகரனும் சென்று எம். ஜி.ஆரை சந்தித்தனர். றோவின் நடவடிக் கைகளை பற்றி எம்.ஜி.ஆரிடம் விளங்கப்படுத் தினார் பிரபாகரன். அனைத்து பிரச்சனைகளை யும் ஆறுதலாக கேட்ட எம்.ஜி,ஆர், நான்கு கோடி ரூபாவை புலிகளிற்கு வழங்கினார். 

அந்த சமயத்தில் இது பெருந்தொகை பணம். இந்த பணத்தை பயன்படுத்தித் தான் புலிகள் முதன்முதலாக வெளிநாட்டில் பெருமளவு ஆயுதங்களை வாங் கினார்கள். 

இந்த ஆயுதங்கள் தமிழகத்தின் ஊடாகவே யாழ்ப்பாணத்திற்கு வந்தது. அப் போது புலிகள் வாங்கிய ஆயுதங்களில் ஒன்று ஆர்.பி.ஜி. பண்டிதர் தான் அப் பொழுது புலிகளின் நிதி, ஆயுத களஞ்சிய பொறுப்புக்களை கவனித்துக் கொண் டிருந்தார்.

1985 ஜனவரியில் அச்சுவேலியில் இருந்த பண்டிதரின் முகாமை இலங்கை இராணுவம் சுற்றிவளைத்து தாக்கியதில் பண்டிதர் மரணமாகியிருந்தார். அந்த முகாமில் இருந்து ஆர்.பி.ஜியை இராணுவம் முதன்முதலில் கைப்பற்றியது. 

கைப்பற்றிய போது, அது என்ன ஆயுதம் என்பதே இராணுவத்திற்கு தெரிந் திருக்கவில்லை. பின்னர் கொழும்பிற்கு அனுப்பப்பட்டுத்தான், ஆர்.பி.ஜி என் பதை கண்டறிந்தார்கள். ஈழப்போராட்ட வரலாற்றில் புலிகள் அறிமுகப்படுத் திய ஆயுதங்கள் அனேகம். 

அது பற்றி கால ஒழுங்கில் பின்னால் குறிப்பிடுகின்றோம். புலிகள் முதன்முத லில் ஆர்.பி.ஜி கொள்வனவு செய்தபோது, அதை இயக்க திடகாத்திரமான போராளி கள் தேவையெனக் கருதினார்கள். 

ஆர்.பி.ஜியை இயக்க பொருத்தமானவர் என பிரபாகரன் கணித்தவர்- சொர்ணம். சொர்ணம் தான் புலிகளின் முதலாவது ஆர்.பி.ஜி சூட்டாளர். அவரது உதவி யாளர் தேவன். பின்னாளில் கடற்புலிகள் அமைப் பில் இருந்தவர். கிட்டு இவ ரில் அன்பாக இருந்தவர். 

கிட்டு நாட்டைவிட்டு போகும்போது தனது ரிவோல்வரை இவரிடம்தான் கொடுத்துவிட்டு சென்றார். தேவன் கடைசிவரை அதை வைத்திருந்தார். ஆர்.பி.ஜியுடன் தொடர்புபட்ட இன் னொரு கதையுள்ளது. பிரபாகரனின் நகைச் சுவை உணர்விற்கு நல்ல உதார ணம் இது. அடுத்த பாகத்தில் அதை பார்ப்போம். 

 (தொடரும்)

அடுத்த தொடர்கள்
































கருணா படித்த பாடசாலையில் பிரபாகரன்தான் ஹெட் மாஸ்டர்!

































  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மின்னேரியா முகாமில் உருவான கருணா குழு!: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 36 Rating: 5 Reviewed By: Thamil