முல்லைத்தீவு, செம்மலை நீராவியடி பிள்ளையாா் ஆலய தீா்த்தக்கேணிக்கு அருகில் பௌத்த பிக்குவின் சடலம் தகனம் செய்யப்பட்டமையை கண்டித்து வடமாகாண ஆளுநா் அலுவலகம் முன்பாக கவனயீா்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு சிவில் அமைப்புக்களும்? பொதுமக்களும் இணைந்து இன்று காலை 10 மணியளவில் இந்த கவன யீா்ப்பு போராட்டத்தினை நடத்தியி ருந்தனா்.
“அரசே இன அடக்கு முறையை நிறுத்து”, “அரசே இனங்க ளுக்கிடையில் பாரபட்சம் காட்டாதே”, “நீதி ஆள்கிறதா? அநீதி ஆள்கிறதா?” போன்ற கோசங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியவாறு கவனயீா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நீதிமன்ற தீா்ப்பை மீறியவா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் வலி யுறுத்தியிருந்தனா்.
போராட்டத்தின் தொடா்ச்சியாக யாழ்.நல்லுாா் ஆலய சுற் றாடலில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜா் ஒன்றும் கையளிக்கப்பட்டது.