ஐ.தேகவின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச மூன்று நிபந்தனை களின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிபந்தனைகள் குறித்து எழுத்து மூல உடன்பாடு எட்டப்படவுள்ளதாக ஐ.தே.க வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.
ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற விவகாரத்தில் நீண்ட இழுபறி நில வியது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டி யிட்டு, சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிப்பதாக தெரிவித்திருந்தார்.
எனினும், ஐ.தே.க எம்.பிக்கள் பெரும்பாலானவர்கள் இதற்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கவில்லை.
இதையடுத்து மூன்று நிபந்தனைகளுடன் சஜித்தை வேட்பாளராக நியமிக்க ரணில் இணங்கியுள்ளார்.
அடுத்த ஐந்து வருடங்களிற்கு- 2024 வரை- கட்சியின் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே இருப்பார், சஜித் ஜனாதிபதியானால் உடனடியாக நிறைவேற்றதிகாரம் ஒழிக்கப்பட வேண்டும், அந்த ஆட்சியில் பிரதமராக ரணிலே நீடிப்பார்,
இந்த அரசாங்கத்தின் காலத்தில் உருவாக்கப்பட்ட அரசிய லமைப்பு திருத்தத் திற்கான வழிநடத்தல் குழுவினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக் கையை அடிப்படையாக கொண்டு இனப்பிரச்சனைக்கான தீர்வு உருவாக்கப் பட வேண்டும் ஆகிய விவகாரங்களில் ரணில்- சஜித் தரப்புக்கள் எழுத்துமூல உடன்படிக்கை செய்துகொள்ளவுள்ளன.
இதில், ரணில் கட்சி தலைமை பதவியில் நீடிக்கும் திகதி குறிப்பிட்டே ஆவ ணம் தயாரிக்கப்படவுள்ளது.
கடந்த சில தினங்களின் முன்னர், சம்பந்தனை தனிமையில் சந்தித்தபோது, வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை யின் அடிப்படையில் இனப்பிரச்சனை தீர்வு பணிகளை முன்னெடுக்கத் தயா ராக இருப்பதாக சஜித் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.