புகையிரத சேவையை மீண்டும் அத்தியாவசிய சேவையாக மாற்றுமாறு அமைச்சரவைக் கூட்டத்தின்போது, ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஏற்கனவே வர்த்தமானி அறிவிப்பை உருவாக்கியுள்ளோம், எங்க ளுக்குத் தேவையானது ஜனாதிபதியின் கையொப்பம் மட்டுமே. எதிர்க் கட் சியை ஆதரித்த ஒரு சிலரால் இந்த வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டது, வேலை நிறுத்தங்கள் காரணமாக மக்கள் சிரமத்திற்கு ஆளாகக்கூடாது என்று அவர் கூறினார்.
புகையிரத வேலைநிறுத்தத்தையடுத்து இ.போ.ச பேருந்துகள் அதிகளவாக இயக்கப்பட்டதாகவும், வரும் நாட்களிலும் வேலைநிறுத்தம் தொடர்ந்தால், மாற்று போக்குவரத்து வழங்க புகையிரத நிலையங்களுக்கு அருகில் தனியார் பேருந்துகள் நிறுத்தப்படும். வேலைநிறுத்தத்தின்போது தற்போது சுமார் 20 அலுவலக புகையிரதங்கள் இயக்கப்படுகின்றன.
இனிவரும் நாட்களில் குறைந்தது 50 புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.“புகையிரத தொழிற்சங்கங்கள் எங்கள் பொறுமையை துஷ்பிரயோகம் செய்ய முயற்சிக்கின்றன. அவை குறுகிய காலத்தில் பல வேலை நிறுத்தங்களை நடத்துகின்றன.
எனவே, திங்கள் கிழமைக்குள் வேலை நிறுத்தத்தை நிறுத்தா விட்டால், தொழிற்சங்க நடவடிக்கைக்கு பின்னால் இருப்பவர்கள் மீது அமைச்சகம் கடு மையான நடவடிக்கை எடுக்கும். ஒரு பொறுப்புள்ள அமைச்சராக, அவர்களின் வேலை நிறுத்த நடவடிக்கையை நிறுத்திய பின்னர் கலந்துரையாடலிற்கு வருமாறு நான் கேட்டுக்கொண்டேன்,
ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர்“ என்றார்.
அனைத்து அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை ரூ 3,000 தொடக்கம் ரூ .24,000 வரை அதிகரிக்க அரசு முடி வெடுத்தது. இதில் தமக்கு அநீதி இழைக்கப்படுவதாக தெரிவித்தே வேலை நிறுத்தம் நடப்பது குறிப்பிடத்தக்கது.