பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனா திபதி தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் தடை உத்தரவைக் கோரி விரை வில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.

“கோட்டாபயவிடம் சட்ட பூர்வமான பாஸ்போர்ட் அல்லது தேசிய அடையாள அட்டை இல்லாததால், சரியான அர்த்தத்தில் அவர் ஒரு இலங்கை குடிமகன் அல்ல என்ற வாதத்தின் அடிப் படையில் இந்த மனு தாக்கல் செய்யப்படும்” என்று சேனரத்ன கூறினார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் ஆவணங்கள் தொடர்பான கோப்புகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று சமீபத்திய அறிக்கைகளை மேற்கோள் காட்டி, கோட்டாபயவிடம் சட்டரீதியான தேசிய அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் இல்லை என்று குற்றம் சாட்டினார்.
“கோட்டாபயவுக்கு இரண்டு என்.ஐ.சிக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பொருள் அவரது ஆவணங்கள் மோசடியானவை. இந்த அடிப்படையில் தடையுத்தரவை பெற ஒரு மனு தாக்கல் செய்யப்படும்” என்றார்.
“ஐ.தே.க தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச ஒரு குறிப்பிட்ட மூலோபாயத்தை மனதில் கொண்டு ஜனாதிபதி போட்டியில் நுழைந்தார்” என்று அவர் மேலும் கூறினார்.
கடந்த ஆட்சியின் போது புலனாய்வுப் பிரிவினரால் பணம் வழங்கப்பட்டவர் களால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமைச்சர் பட்டலி சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளாா்.
தாக்குதல் நடத்தியவர்களுக்கு பணம் செலுத்தியது போர்க்குற்றமாக கருதப் பட வேண்டும் என்றார்.
“உயிர்த்த ஞாயிறு தாக்குதலாளிகளுக்கு பணம் வழங் கியவர்களுக்கு நாங்கள் தண்டனை கொடுப்போம்.
அந்தச் செயலை ஒரு போர்க்குற்றமாகக் கருதி நவம்பர் மாதத்தில் நாங்கள் உருவாக்கும் அரசாங்கத்தால் அவர்களுக்கு தண்டனை விதிக்கப்படும்” என்று அமைச்சர் கூறினார்.