சிங்கள மற்றும் பௌத்த மயமாக்கலை தடுப்பதற்கான வல்லமை தமக்கு இருப்பதாக குறிப்பிட்ட தமிழ் மக்களின் பிரதிநிதியான சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரத்தில் மக்கள் தம்மை தேடி வராத காரணத்தினாலேயே தாம் அதில் தலையிடவில்லை என குறிப்பிட் டுள்ளார்.
எனினும் முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீவிர நட வடிக்கையை முன்னெடுக்கவுள்ளதா கவும் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சா ளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆதரவாளர்கள் மற்றும் மக்களுடனான சந் திப்பொன்றை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் நேற்று சனிக்கிழமை நடத்தியி ருந்தனர்.
இச் சந்திப்புக்கு முன்னதாக நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பதிலளித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து ஊகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த சுமந்திரன், வேட்பாளர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே அது குறித்து தீர்மானிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.