ராஜபக்ச குடும்பத்தில் நானே மிகவும் அப்பாவியான நபர். தேவையெனில், எனது சகோதரர்களிடம் கேட்டுப் பாருங்கள் என தெரிவித்துள்ளார் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ச.
மக்கள் சந்திப்பொன்றில் கோட்டாபாய இதனை தெரிவித்ததாக சிங்கள ஊடக மொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தான் எவ்வளவு அப்பாவியான மனிதர் என்பதை தனது சகோதரர்களிடம் இரு ந்து கேட்டு தெரிந்து கொள்ளலாம் என் றும், ஆனால் சிலர் தன்னை கொடூரமானவனாக சித்தரிப்பதாகவும் கோட்டா பய தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான ஐ.நா விதிவிட பிரதிநிதி ஹனா சிக்கருடன் அரை மணித் தியால பேச்சு வார்த்தை ஒரு முறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், ஆனால் ஹனா சிக்கர் இரண்டு மணித்தியாலமாக தன்னுடன் இருந்து பேசிய தாக கூறினார்.
சந்திப்பின் முடிவில், உங்களை கொடூரமானவர் என சிலர் கூறுகிறார்கள். ஆனால் நீங்கள் அப்படியல்ல என அவர் கூறிவிட்டு சென்றார் என கோட்டாபய தெரிவித்துள்ளார்.