நீதிமன்ற உத்தரவை புறந்தள்ளி, நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் கேணி யில் பௌத்த பிக்குவின் உடலை தகனம் செய்தது, நீதியை சுட்டிக் காட்டிய சட்டத் தரணிகள், பொது மக்களை தாக்கியதை கண்டித்து முல்லைத்தீவில் இன்று கண் டன போராட்டம் நடைபெறவுள்ளது.
வெவ்வேறு இடங்களிலிருந்து பொதுமக்கள் வந்த வண்ணமுள்ளதால், 11.15 அளவில் பேரணி ஆரம்பமாகுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்த இதே வேளை, பேரணியை நடத்துவதால் அமைதிக்கு குந்தகம் ஏற்படுமென தெரி வித்து, தடை கோரி நீதிமன்றத்தை பொலிசார் நாடியுள்ளதாக போராட்ட இடத் தில் தகவல் பரவி வருகிறது. எனினும், அதை சுயாதீனமாக இதுவரை உறுதி செய்ய முடியவில்லை.