நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் நீதிமன்ற உத்தரவையும் மீறி பௌத்த பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டதை கண்டித்தும், தமிழ் சட்டத் தரணிகள், பொதுமக்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் முல்லைத்தீவு நகரத் தில் கண்டன போராட்டம் நடைபெற்று வருகிறது.
கறுப்பு துணிகளால் வாய்களை கட்டி யபடியும், கறுப்புக்கொடிகளை ஏந்திய படியும் போராட்டத்தில் பெருமளவா னவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
நீதி மன்ற தீர்ப்பையே பௌத்த பிக்குகள் பொருட்டாக மதிக்காததை சுட்டிக் காட்டி பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவாக இன்று முல்லைத்தீவு நகரத்தில் கடை கள் அடைக்கப்பட்டுள்ளன. பல இடங் களில் கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டுள் ளன. தமிழ் மக்கள் கூட்டணியின் செய லாளர் க.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் போராட்டத் தில் கலந்து கொண்டுள்ளனர்.