
ஈழப்போரில் புலிகள்தான் முதன் முத லில் ஆர்.பி.ஜி யை பயன்படுத்தினார்கள் என்று கடந்த பாகத்தில் குறிப்பிட்டி ருந்தோம். ஆனால் இலங்கைப் படைகளுடனான மோதலில் புலிகளால் ஆர்.பி. ஜியால் குறிப்பிடும் படியான இலக்கொன்றை தாக்கியழிக்க முடியவில்லை.
சந்தர்ப்பமும் அமையவில்லையென்றும் சொல்லலாம்.
இந்தியப்படையின ரின் டாங்கியை தகர்த்ததுதான் ஆர்.பி.ஜியை புலிகள் கச்சிதமாக பாவிக்க ஆரம்பித்த முதலாவது சந்தர்ப்பம்.
ஆர்.பி.ஜிக்கும் புலிகளிற்குமான உறவில் கட்டாயம் குறிப்பிட வேண்டியது இந்திய இராணுவ காலம். பிரபாகரன் வன்னிக்காட்டில் முகாமைத்திருந்த போது, அவரை அழிக்க செக்மேற் என்ற படை நடவடிக்கையை இந்திய இரா ணுவம் செய்தது.
அப்பொழுது இந்திய படைகளை இலங் கையில் வழிநடத்திய லெப்டினன்ட் ஜெனரல் கல்கட் நித்திகைக்குளம் முகா மில் ஹெலிகொப்ரரில் வந்திறங்கிய போது, புலிகள் ஹெலி மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டனர். நித்திகைகுள வெட்டைக்கு கிட்டவாக காட்டுக்குள் ளால் நகர்ந்து சென்ற புலிகளின் அணி, காட்டோரமாக மறைந்திருந்தது.
குறிப்பிட்ட சமயத்தில் ஹெலி தரையிறங்கியபோது, ஆர்.பிஜியால் புலிகள் தாக்கினார்கள். குறிதவறி விட்டது. ஹெலிக்கு சிறிய சேதம் மட்டும்தான். கல்கட் பல்டியடித்து, மறைவிடமொன்றிற்குச் சென்று விட்டார்.
அன்று ஹெலியை இலக்கு வைத்து ஆர்.பி.ஜி யை இயக்கியது சொர்ணம்!
இரண்டாம் ஈழப்போர் ஆரம்பித்த பின்னர், புளோப்பளை ஊடாக முன்னேறிய பலவேகய நடவடிக்கை படையி னரின் டாங்கி தகர்க்கப்பட்டதில் தொடங்கி, இறுதி யுத் தம் வரை புலிகள் ஆர்.பி.ஜியை கச்சிதமாக பாவித்தார் கள்.
இலங்கை இராணுவத்தின் டாங்கிகள் பெருமளவா னவை இதனால் தான் அழிக்கப்பட்டன.
1997இல் இலங் கைப்படையினர் ஜெயசிக்குறு படை நடவடிக்கைக்கு திட்டமிட்டனர். மிகப்பிரமாண்டமாக திட்டமிட்டார்கள். காடுகள், வெளிப்பிரதேசங்களினூடாக நகர டாங்கி களை தான் அதிகம் நம்பினார்கள்.
கவசப்படையணியை புனரமைத்து தீவிர பயிற்சிகளை ஆரம்பித்தனர். அதை எதிர்கொள்ள புலிகள் செய்த மாற்றுதிட்டமே விக்ரர் கவச எதிர்ப்பு படையணி. இராணுவத்தின் கவசப்படையணியை எதிர்கொள்ள புலிகள் உருவாக்கிய ஆர். பி.ஜி படையணி அது.
அப்போது இம்ரான் பாண்டியன் படையணியிலிருந்த போராளிகளில் தேர்ந் தெடுக்கப்பட்ட அணியை கொண்டு விக்ரர் கவச எதிர்ப்பு படையணியை உரு வாக்கினார்கள்.
இம்ரான் பாண்டியன் படையணி நிர்வாகங்களில் இருந்த போராளிகளை அங்கு கொண்டு சென்று, முதலில் தேர்வுப்பயிற்சி ஆரம்பித் தது.
100 மீற்றரில் தொடங்கி 10 கிலோமீற்றர் தூரங்களை குறிப்பிட்ட நேரத்தில் ஓடி முடி க்க வேண்டும், குறிப்பிட்ட நிறையை சுமந் துகொண்டு ஓடி முடிக்க வேண்டும் உள் ளிட்ட பல பயிற்சிகள் அதில் தேர்ச்சியடை ந்தவர்களை கொண்டுதான் விக்ரர் கவச எதிர்ப்பு படையணி உருவாக்கப் பட்டது.
இந்த பயிற்சிகள் எல்லாம் புதுக்குடியிருப்பிலிருந்து ஒட்டுசுட்டான் செல்லும் சாலையில், மன்னாகண்டல் சந்தியிலிருந்து பிரிந்து முத்தையன்கட்டுச் செல்லும் சாலையோரமாக இருந்த காட்டோரத்தில்- ஏழு கன்னிகைகள் குளக் கரையில்- நடந்தது.

முகாமாலை முன்னரணில் போராளிகளின் நிலை களை பரிசோதித்து கொண்டு சென்றவர் திடீரென காணாமல் போனார். ஓரிரண்டு நாளின் பின், முன்னரணிற்கு பின்பாக சடலமாக மீட்கப்பட்டார். இராணுவத்தின் எறிகணை வீச்சில் மரணமாகியி ருக்க வேண்டும். தனிமையில் சென்றதால் உடனடியாக விடயம் தெரிய வர வில்லை) கவச எதிர்ப்பு படையணி உருவாக்கப்பட்டது.
இந்தப்படையணிதான் ஜெயசிக்குறு நடவடிக்கையில் இராணுவத்தின் கவசப் பிரிவை சுக்குநூறாக்கியது. ஒவ்வொரு நகர்விலும் இராணுவம் கவச வண்டி களை இழந்து கொண்டிருந்தது.
விக்ரர் கவச எதிர்ப்பு படையணியை பற்றி, எல்லோரும் புரிந்துகொள்ளும் விதமாக இலகுவாகவும் ஒரு அடையாளம் சொல் லலாம். விடுதலைப்புலிகளின் வழக்கமான சீருடையில் வரிப்புலி கோடுகள் கிடையாக இருக்கும்.
விக்ரர் கவச எதிர்ப்பு படையணியின் சீரு டையில் செங்குத்தாக கோடுகள் இருக்கும். (ஆரம்பத்தில் விக்ரர் கவச எதிர்ப்பு படையணியில் ஆர்.பி.ஜி, எஸ்.பி.ஜி 9 மட்டுமே இருந்தது.
பின்னாளில் சினைப்பர் உள்ளிட்ட வேறு சில அணிகளும் இணைக்கப்பட்டன)
விக்ரர் கவச எதிர்ப்பு படையணியில் ஆர்.பி.ஜியை விட இன்னொரு கவச எதிர்ப்பு ஆயுதமும் இருந்தது.
அது தோளில் காவிச்சென்ற தாக்கவல்ல இலகு ஆயுதமல்ல. புலிகளால் இறக் குமதி செய்யப்பட்ட எஸ்.பி.ஜி 9 என்ற கவச எதிர்ப்பு ஆயுதம். சிறிய ஜீப் வண்டியிலேயே விரைவாக நகர்த்த முடியும். தோளில் காவிச் செல்ல முடி யாது. ஆர்.பி.ஜியை விட பலமடங்கு பலமானது.
2000 இல் யாழ்ப்பாண சமரில் ஒரு எஸ்.பி.ஜி 9ஐ புலிகள் இழந்தனர். அதுவரை அப்படியொரு ஆயுதத்தையே இராணுவம் கண்டதில்லை.73 மில்லிமீற்றர் குழல் விட்டத்தை கொண்ட இந்த ஆயுதம் ரஷ்ய தயாரிப்பு. சோவியத் ஒன் றியத்தின் பிளவின் பின்னர் உக்ரைன் வழியாக புலிகளை வந்தடைந்தது.
மூன்றாம் உலகநாடுகளின் அனேக யுத்தங்களில் பாவிக்கப்படுகிறது. இலகுரக கவச எதிர்ப்பு ஆயுதங்களில் தலைசிறந்தது இதுதான். நிலையான இடத்தில் இருந்து, அல்லது வாகனங்களில் நகர்த்தி சென்று தாக்கலாம். புலிகளில் இருந்த வகை ஆயுதத்தின் மூலம் ஒன்றரை கிலோமீற்றர்கள் வரையுள்ள இலக்குகளை அழிக்கலாம்.
அதிகபட்சமாக நான்கரை கிலோமீற்றர்கள் வரையான இலக்குகளை அழிக் கும் எஸ்.பி.ஜி 9கள் இருந்தன. மரபு யுத்தங்களிற்கே இவை உகந்தவை. புலிக ளின் பாணியில் நடமாடிக்கொண்டிருக்கும் யுத்தவகைக்கு உகந்ததல்ல. அத ற்கு ஆர்.பி.ஜிதான் சிறந்தது. விரைவாக, தனியொருவரால் நகர்த்திச் செல்ல லாம்.
இதனால்தான் உலகெங்கிலுமுள்ள கெரில்லாக்கள், ஆயுதக்குழுக்கள் ஆர்.பி.ஜியை அதிகம் விரும்புகின்ற னர். 750 மீற்றர்கள் வரை துல்லியமாக தாக்கி பேரழிவை ஏற்படுத்தவல்ல ஆயுதம். கட்டிடங்கள், கவசங்களை அழிக்க போராளி இயக்கங்களிற்கு கிடைத்த வரப்பிரசாதம் இது. ரஷ்யா, சீனா தயா ரிப்பு ஆர்.பி.ஜிக்கள்தான் புலிகளிடம் இருந்தன.
எஸ்.பி.ஜி 9களை புலிகள் அதிகமாக பாவித்தது கிடையாது. சத்ஜெய, ஜெயசிக் குறு களங்களின் பின் அதிகமாக வலிந்த தாக்குதல்களின்போது, இராணு வத்தின் முன்னரணை தகர்ப்பதற்கு பாவித்தனர்.
புலிகள் எஸ்.பி.ஜி 9 ஐ முதலில் பாவித்தது, 1996 கிளிநொச்சி சத்ஜெய 2 நட வடிக்கையின் போது. அந்த நடவடிக்கையில் புலிகள் இரண்டு டாங்கியை அழித்தார்கள். அந்த சமரில் எஸ்.பி.ஜி 9 பாவிக்கப்பட்டது. ஆனால் முதன் முதலில் போராளிகளால் அதை இலக்கு தவறாமல் தாக்க முடியவில்லை.
ஆர்.பி.ஜி தான் டாங்கிகளை அழித்தது. ஆனால் ஜெயசிக்குறுவில் எஸ்.பி.ஜி 9 முதன்முதலில் டாங்கிகளை வேட்டையாடியது. “புளியங்குளம் புரட்சிக்குளம்“ என போராளிகள் இறுமாந்திருந்த முன்னரண் ஒன்று தீபன் தலைமையில் அமைக்கப்பட்டிருந்தது.
அதை ஊடறுத்து இராணுவத்தின் கவச வண்டிகள் ஒருமுறை ஊடுரு வின. ராங்கிகள் மீது விக்ரர் கவச எதிர்ப்பு படையணியின் ஆர்.பி.ஜி, எஸ்.பி.ஜி 9 தாக்குதல் நடந்தது. எஸ். பி.ஜி 9 குண்டொன்று ஒரு டாங்கியை தாக்கியது. சுழல் மேடைக்கும் ராங்கியின் மேல்தளத்திற்குமிடையில் குண்டு தாக்கியது.
சுமார் 80 மீற்றரிற்கு சுழல் மேடை தூக்கியெறியப்பட்டது. மேலும் இரண்டு ராங்கிகள் தாக்கப்பட, இராணுவத்தின் கவசப்படை பின்வாங்கியது.எஸ்.பி.ஜி 9களை புலிகள் தமது அமைப்பிற்குள்ளேயே இரகசியமாக வைத்திருந்தனர். விக்ரர் கவச எதிர்ப்பு பிரிவை தவிர்ந்த மற்றையவர்கள் யுத்தத்தின்போது மட்டும் தான் அதை கண்டனர்.
மிகுதி நேரங்கில் அதை மூடிக்கட்டி மறைத்துதான் வைத்திருந்தார்கள். அந்த ஆயுதத்தை இயக்குபவர்கள், அதைப்பற்றி ஏனைய போராளிகளிடம் பகிர்ந்து கொள்வதுமில்லை.
இடையீடாக இன்னொரு தகவலையும் குறிப்பிடலாம்.
விக்ரர் கவச எதிர்ப்பு படையணியை எப்படி, பார்த்து பார்த்து பிரபாகரன் கட்டி யெழுப்பினார் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணமாக இருக்கும்.
புலிகளிற் குள் பல படையணிகள்.
ஆனாலும் எல்லா படையணிகளிற்குள் ளும் ஒரே மாதிரியான தலையீட்டை பிரபாகரன் காட்ட வாய்ப்பிருக்கவில்லை. அவருக்கிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சில விசயங்களை தடுத்தது. இம்ரான் பாண்டி யன் படையணியிலிருந்து உருவான படை யணிகளுடன் பிரபாகரன் எப்பொழுதும் கொஞ்சம் நெருக்கம் காட்டுவார்.
காரணம்- அது அவரது பாதுகாப்பு படையணி.யுத்த களத்தில் ஆயுதங்கள் அள விற்கு முக்கியமானதாகவும், தாராளமாகவும் பயன்பாட்டில் இருப்பது- தூஷண வார்த்தைகள். அந்த வார்த்தைகளை பாவிக்காத தளபதிகள் என்றால் மிகச்சிலர் தான்.
விக்ரர் கவச எதிர்ப்பு படையணியின் முதலாவது களம் ஜெயசிக்குறு எதிர் நட வடிக்கை. அப்போது நடந்த மோதல்களில் ராங்கிகளை தகர்த்து படையணி பெரும் உற்சாகத்தில் இருந்தது.
படையணியின் வளர்ச்சியில் எல்லோருக்கும் பெரிய திருப்தி.
ஒருநாள் மன் னாகண்டல் பிரதான முகாமிற்கு களமுனைகளில் இருந்த விக்ரர் கவச எதிர்ப்பு போராளிகள் அழைக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டனர்.
பிரபாகரன் எல்லோரையும் சந்தித்தார். படையணியின் நடவடிக்கைகளில் முழு திருப்தியும், பாராட்டும் சொன்னார். ஆனால் ஒரேயொரு வருத்தம் இருப்பதாக சொன்னார்.
எல்லோருக்கும் அதிர்ச்சி.
அந்த சந்திப்பில் பிரபாகரன், அவருக்கு அருகில் படையணி தளபதி கடாபி, விக்ரர் கவச எதிர்ப்பு படையணி தளபதி அக்பர் இருந்தார்கள்.
ஒரு டிவி, டெக், ஜெனரேற்றர் எல்லாம் தயாராக இருந்தது. அதில் விக்ரர் கவச எதிர்ப்பு படையணியின் சண்டை வீடியோ காட்சிகள் ஒளிபரப்பாகியது. எல் லோரும் தாம் எப்படி களத்தில் செயற்பட்டோம் என்பதை வீடியோவில் பார்த் தனர். சாதாரணமாக அர்.பி.ஜி கன்னரில் (Gunner) தொடங்கி படையணி தளபதி அக்பர் வரை தாராளமாக தூஷணம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
களத்தில் தூஷணம் பாவித்ததை கடுமையாக கண்டித்த பிரபாகரன், படை யணி தளபதிகளே இப்படியிருந்தால், சாதாரண போராளிகளை எப்படி கட்டுப் படுத்துவதென அக்பரை கண்டித்தார்.
அன்றிலிருந்து விக்ரர் கவச எதிர்ப்பு படையணியில் யாரும் தூஷணம் பேசக் கூடாதென்ற கட்டுப்பாடு வந்தது. அக்பரும் அவற்றை தவிர்த்துக் கொண்டார்.
கடந்த அத்தியாயத்தில் ஆர்.பி.ஜி பற்றிய சுவாரஸ்ய சம்பவமொன்றை சொல்வதாக குறிப்பிட்டிருந்தேன் அல்லவா.
பிரபாகரனின் நகைச்சுவை உணர்விற்கு உதாரண மான அந்த சம்பவம் இது தான். புலிகள் ஆர்.பி.ஜியை வாங்கிய பின், பண்டிதரின் முகாம் சுற்றிவளைக் கப்பட்ட சமயத்தில் ஒரு ஆர்.பி.ஜியை இராணுவம் கைப்பற்றிவிட்டது.
இது புலிகளிற்கு பெரிய இழப்பு. அதை எப்படியாவது ஈடுசெய்ய வேண்டும். அதேவேளை, புதிது புதிதாக ஆயுதங்கள், தளபாடங்களையும் உற்பத்தி செய்ய வேண்டுமென புலிகள் முயன்றுகொண்டிருந்தனர்.
இந்திய இராணுவத்தின் வருகைக்கு முன்னரே புலிகள் அலுமினியத்தில் செல் களை செய்ய முயன்றுகொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் மோட்டார்சைக்கிள் இயந்திரத்தை பயன்படுத்தி ஹெலி கொப்ரர் தயாரிப்பதில் சில போராளிகள் ஈடுபட்டிருந்தனர்.
பண்டிதரின் இழப்பின் பின் 1985இல் நடந்த சம்பவம் இது. அப்பையா அண்ணை (ஐயாத்துறை இராசதுரை- மானிப்பாய்) என போராளிகளால் அழைக்கப்பட்ட ஒரு வயதான போராளி அமைப்பில் இருந்தார். வெடிமருந்துகளுடன் பரிச்சய மான அவர், புதிய கண்டுபிடிப்புக்களில் ஆர்வம்மிக்கவர்.
அவர் உருப்படியாக ஒன்றையும் தயாரிக்காவிட்டாலும், தயாரிப்பு முயற்சிக ளில் தொடர்ந்து இருந்தார். பின்னாளில் வன்னிக்கு சென்று, வயது முதிர்வால் வீட்டில் ஓய்வில் இருந்தார்.
1997இல் மல்லாவிக் காட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். கடத்திச் செல் லப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
1985இல் பரீட் சார்த்த முயற்சியாக ஒரு ஆர்.பி.ஜியை அப்பையா அண்ணை தயாரித்திருந் தார்.
அதை இயக்க வேண்டும். சில சமயம் வெற்றி கரமாக எறிகணை பாயலாம். சில சமயம் அந்த இடத்திலேயே வெடிக்கலாம். ஒருநாள் கொக்குவிலில் அமைந்துள்ள முகாம் ஒன்றில் போராளிகளுடன் உட் கார்ந்து பிரபாகரன் பேசிக்கொண்டிருக்க, அப்பையா அண்ணை விடயத்தை சொல்லி- “இயக்கத்தில இனி இல்லையென்ற விசுவாசமான ஒருவன், அதேநேரம் இயக்கத்திற்கு தேவையில்லாத ஒருவனை எனக்குத் தர வேண்டும்.
அதை பரீட்சித்து பார்க்க“ என கேட்டார். அவர் கேட்டதன் அர்த்தம், பரீட்சார்த்த முயற்சியின் ஆபத்தை தெரிந்து இதற்கு சம்மதிப்பவன் எனில் இயக்க விசு வாத்தால் உயிரையும் கொடுக்க தயாராக இருப்பான்.
அதேநேரம் அவன் இறந்தாலும், இயக்கத்திற்கு நட்டம் இருக்காது.
அப்பையா அண்ணை சொன்னதும், பிரபாகரன் ஒரு புன்முறுவலுடன் சுற்றவர போராளி களை பார்த்தார்.
பிறகு சிரித்தபடி சொன்னார்- “அண்ணை… அப்பிடியான ஒராள் என்றால் நீங் கள் தான் அதுக்கு சரி“.பின்னர், மரத்தில் சுடுகுழலை கட்டிவைத்து, செல்லை பொருத்திவிட்டு, சுடுவிசையில் நூல் கட்டி சற்று தொலைவில் நின்று இழுத்து இயக்கி அது பரீட்சிக்கப்பட்டது. அந்த இடத்திலேயே வெடித்து சிதறிவிட்டது!
(தொடரும்)
அடுத்த தொடர்கள்
அடுத்த தொடர்கள்
18.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 18
ஐந்து வருடங்களிற்கு முன்னரே கருணாவை கணக்குபோட்டு வைத்த பிரபாகரன்!
ஐந்து வருடங்களிற்கு முன்னரே கருணாவை கணக்குபோட்டு வைத்த பிரபாகரன்!
20.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 20
கடற்படைக்கு புலிகள் வைத்த பொறி… துல்லியமாக தாக்கிய புலிகளின் ராங்கிகள்; மாட்டியது ஈ.பி.டி.பி
கடற்படைக்கு புலிகள் வைத்த பொறி… துல்லியமாக தாக்கிய புலிகளின் ராங்கிகள்; மாட்டியது ஈ.பி.டி.பி
24.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 24
புலிகளின் பகுதிக்குள் வெடித்த கிளைமோர்: பின்னணி பொட்டம்மானிற்கு தெரியும்!
புலிகளின் பகுதிக்குள் வெடித்த கிளைமோர்: பின்னணி பொட்டம்மானிற்கு தெரியும்!
30.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 30
காதலால் தவறிய புலிகளின் கொழும்பு இலக்கு… கருணா விசயத்தில் நடந்ததும் அதுதான்!
காதலால் தவறிய புலிகளின் கொழும்பு இலக்கு… கருணா விசயத்தில் நடந்ததும் அதுதான்!
கருணா படித்த பாடசாலையில் பிரபாகரன்தான் ஹெட் மாஸ்டர்!