728x90 AdSpace

<>
Latest News
Friday, 6 September 2019

ஐந்து வருடங்களிற்கு முன்னரே கருணாவை கணக்குபோட்டு வைத்த பிரபாகரன்!- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 18

இந்தியப்படையினர் மீதான தாக்கு தல் ஒன்றினால் விடுதலைப்புலிக ளின் மட்டக்களப்பு தளபதி கருணா, திருகோணமலை தளபதி சஞ்சய் இடையே வாய்த்தர்க்களம் ஏற்பட்ட தையும், இதன் உச்சத்தில் சஞ்சய் தனது பிஸ்டலை எடுத்து கருணா வின் தலையில் வைத்ததையும் கட ந்த வாரம் குறிப்பிட்டிருந்தேன். 


இப்படியொரு சம்பவம் நடந்ததா என்பதை கணிசமான விடுதலைப்புலி போரா ளிகளே அறிந்திருக்கவில்லை. 80களின் இறுதியில் புலிகளின் உள் வட்டத்தில் இருந்த கொஞ்சப்பேர் தான் இதை அறிந்து வைத்திருந்தனர். பின்னர் ஒரு கதை யாக புலிகளிற்குள் இச் சம்பவம் ஓரளவு பரவியது. 

கடந்த வார கட்டுரையை படித்துவிட்டு பல வாசகர்கள் எம்மை தொடர்பு கொண்டிருந்தனர். இதில் பலரும் ஆச்சரியமாக பேசினார்கள். சஞ்சய் கோபத் தில் பிஸ்டலை எடுத்து கருணாவின் தலையில் வைத்தாலும், அது சுடுவதற் காக வைக்கப்பட்டதல்ல. 

கோபத்தில் நிதானமிழந்து அப்படி செய்துவிட்டார். போராளிகளின் கையில் துப்பாக்கி கொடுக்கும்போது புலிகள் கற்பிக்கும் பாடம்- எந்த சந்தர்ப்பத்திலும் சக போராளிகளின் பக்கமே துப்பாக்கியை திருப்பக்கூடாது என்பதையே. சஞ்சய் ஒரு கணத்தில் தனது தவறை உணர்ந்து தடுமாற, கருணா ஒரு காரி யம் செய்தார். 

தனது இடுப்பில் இருந்த பிஸ்டல் கோள்சரை கழற்றி, முன்னால் வைத்து விட்டு சொன்னார்- “என் னைச்சுடு. பிரச்சனையில்லை. ஆனால் என்னுடைய பிஸ்ரலை அண்ணையிடம் கொடுத்துவிடு“ என. அந்த சமயத்தில் புலிகள் ஆயுதத்தை உயிரைவிட பெறுமதியானதாக பாவித்தார்கள். 

ஒவ்வொரு துப்பாக்கியையும் பெற்றுக்கொள்ள பல உயிர்களை கொடுத்துள் ளோம், உயிரைவிட துப்பாக்கியை பாதுகாப்பதிலேயே கவனமாக இருக்க வேண்டுமென்பதே அமைப்பு நடைமுறை. இதையடுத்து சஞ்சய் திரும்பிச் சென்று விட்டார். 

இந்த சம்பவம் நடந்தபோது பிரபாகரன் மணலாற்றில் இருந்தார். இந்தியப் படைகளுடனான மோதல் ஆரம்பித்ததும், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளி யேறி மணலாற்று காட்டுக்குள் முகாம் அமைத்து தங்கியிருந்தார். 

மட்டக்களப்பில் இருந்து கருணா செற் மூலம் விடயத்தை பிரபாகரனிற்கு அறிவித்தார். உடனடியாக சஞ்சயுட னும் பேசி என்ன நடந்ததென்ற விப ரத்தை அறிந்தார். துப்பாக்கியை எடு த்து இன்னொரு போராளியின் தலை யில் சுடுவதற்கு வைத்தது பாரதூர மான தவறு. 

அதிலும், ஒரு தளபதியே அப்படி செயற்பட்டது இன்னும் தவறு. உடனடியாக சஞ்சயை மணலாற்றுக்கு வரும்படி கட்டளையிட்டார் பிரபாகரன். மணலாற்று காட்டுக்குள் அப்பொழுதுதான் முகாம்கள் அமைக்கப்பட்டு கொண்டிருந்தன. 

ஒரு காலத்தில் மணலாற்று காட்டுக்குள் சுற்றுலா செல்ல உங்களிற்கு வாய்ப்பு கிடைத்தால் சென்று பாருங்கள், இந்தியப்படைகளின் காலத்திலேயே அடர்ந்த காட்டுக்குள் புலிகள் எப்படியான முகாம்களை அமைத்திருந்தார்கள் என்பதை. செஞ்சோலை, ஜீவன், கமல் என மரணமான போராளிகளின் பெயர்க ளில் ஒரு வலைப்பின்னலைபோல முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

சீமெந்து கட்டிடங்கள், அண்டகிரவுண்ட் என அசத்தியிருக்கிறார்கள்.சஞ்சயை மணலாற்றிற்கு அழைத்த பிரபாகரன், அவரது பிஸ்டலை வாங்கிவிட்டு, காட் டில் தடி வெட்டி அந்த முகாம் அமைக்கும் வேலையில் ஈடுபட உத்தரவிட்டார். 

அதுதான் சஞ்சய்க்கு தண்டனை. புதிய போராளிகளுடன் சேர்ந்து தளபதியாக இருந்த சஞ்சயும் முகாம் அமைக்கும் வேலையில் ஈடுபட்டார். இந்த சஞ்சய் யாரென்றால், இறுதியுத்த சமயத்தில் முள்ளியவளை கோட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த உமைநேசன். 

1987இல் அவரிடமிருந்து பிஸ்டலை வாங்கி, பொறுப்புக்களை பறித்த பின்னர் அவருக்கு குறிப்பிடும்படியான எந்த பொறுப்பும் பிரபாகரனால் வழங்கப்பட வில்லை. 

பிஸ்டலும் வழங்கப்படவில்லை. அமைப்பின் விதிகளிற்கு முரணணாக நடந்தால், அவரை எந்தக்காலத்திலும் பிரபாகரன் திரும்பிக்கூட பார்ப்ப தில்லை. கருணா பிளவு விடயத்தில் பிரபாகரன் ஏன் இறுக்கமான நடவ டிக்கை எடுத்தார் என்பதை இப் பொழுது புரிந்து கொள்கிறீர்களா? 

புலிகளின் பிளவிற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக கடந்த வார கட்டுரை களில் குறிப்பிட்டிருந்தேன். அதில் ஒன்றுதான் பொட்டம்மான்- கருணா மோதல். கருணா 1997இல் வன்னிக்கு வந்தபோது பொட்டம்மான்தான் இரண்டாம் நிலை தலைவர் என்ற எழுதப்படாத கட்டமைப்பொன்று இருந்தது. 

கருணாவிற்கு பிரபாகரன் அதீத முக்கியத்துவம் கொடுக்க, இரண்டாம் நிலை தலைவராக கருணா தன்னை உணரத்தொடங்கினார். மட்டக்களப்பு, திரு கோணமலை, அம்பாறையில் புலிகள் அமைப்பில் இணைபவர்கள் கணிசமான வர்கள் பிரபாகரனையே கண்டதில்லை. 

திருகோணமலை ஓரளவு பரவாயில்லை. அந்த போராளிகள் மணலாற்றின் ஊடாக அடிக்கடி வன்னிக்கு வருவார்கள். ஆனால் மட்டக்களப்பு, அம்பாறை போராளிகள் பெரும்பாலானவர்கள் 1996 இல் வன்னிக்கு வந்தபோதுதான் பிரபாகரனை நேரில் கண்டார்கள். 

அவர்களிற்கு பிரபாகரன் தான் தலைவர். அவருக்காக உயிரையும் விட தயாராக இருந்தார்கள். ஆனால் கருணாவும் அவர்களை கவர்ந்த தலைவர். ஏனெனில் பல வருடங்களாக கருணாவைத்தான் பிரபாகரனின் பிரதிநிதியாக கண்டவர்கள். 

கருணாவின் நடவடிக்கை, வார்த்தைகள் அவர்களிடம் அதிக செல்வாக்கை செலுத்தும். வன்னியில் கருணாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க, ஏனைய தளபதிகளை விட தன்னை உயர்ந்தவராக அவர் உணரத் தொடங் கினார். 

போதாதற்கு இரண்டாம் நிலையில் இருந்த பொட்டம்மானுடனும் முறு கல். வன்னியில் இயங்கிய படைக் கட்டுமானம், சிவில் நிர்வாகத்துடன் தனது அணிகளை ஒத்துழைத்து செயற்பட கருணா இடமளிக்க வில்லை. கருணாவின் எண்ண வோட்டம் அடுத்த நிலை தளபதிகளிற்கு கடத்தப்பட்டு, ஒவ்வொரு படிமுறை யாக கீழிறங்கி, அடிமட்ட போராளி வரை அந்த உணர்வு வளரத் தொடங்கியது. 

ஜெயந்தன் படையணியின் கோசம் “எங்கும் செல்வோம். எதிலும் வெல் வோம்“. வன்னியை காத்தது தாங்கள்தான் என அவர்கள் உணரத் தொடங்கி னார்கள். ஜெயந்தன் படையணிக்குள் இந்த உணர்வு வளர்க்கப்பட்டது. 

இரண்டாம் நிலை தளபதிகளே நேரடியாக இதை செய்தார்கள். புலிகளின் தாக் குதல்களை நுணுக்கமாக அவதானிப்பவர்கள், பிரபாகரன் இந்த விடயத்தில் எச்சரிக்கையடைந்ததை கண்டு பிடித்திருக்கலாம். 

புரியாதவர்களிற்காக அதை சொல்கிறேன்.கருணா தலைமையில் கிழக்கு போராளிகள் வன்னிக்கு வந்தது 1997 இல். வன்னி தெற்கில் வவுனியா முனை யிலிருந்து ஜெயசிக்குறு நடவடிக்கை ஆரம்பித்தபோது, அதன் முறியடிப்பு தளபதியாக கருணாவே செயற்பட்டார். 

1997 முழுவதும் புலிகள் அந்த முனையிலேயே போரிட்டார்கள். அத்தனை சமருக்கும் கருணாதான் தளபதி. தீபன் துணைத்தளபதி. ஆனால் 1998 இன் பின்னர் இதில் மாற்றம் நடந்தது. 97 ஜனவரியில் ஆனையிறவு தாக்குதலிற்கு பால்ராஜ் தளபதி. அது தோல்வி. பால்ராஜையும் கருணாவின் கீழ் செயற்பட பிரபாகரன் உத்தரவிட்டார். 

ஆனையிறவு வடபோர்முனையென்பதால் கருணாவிடம் அந்தப் பொறுப்பு வழங்கப் படாமல் விடப்பட்டது. ஆனால் ஜெயசிக் குறுவுடன் தொடர்புடைய கிளிநொச்சி நகர இராணுவ முகாம் மீதான தாக்குதல் 1998 பெப்ரவரி, செப்ரெம் பரில் நடந்தது. 

இரண்டிற்கும் தீபன்தான் தளபதி. அதாவது, கருணாவின் கீழ் செயற்பட்ட தீபன். கருணாதான் போர்க்கள நாயகன் என்றால், எதற்காக அவரிடம் இந்த பொறுப் புக்கள் வழங்கப்படாமல், அவரின் கீழ் துணைத்தளபதியாக இருந்த தீபனிடம் வழங்கப்பட்டது? 

(தொடரும்)

அடுத்த தொடர்கள்
































கருணா படித்த பாடசாலையில் பிரபாகரன்தான் ஹெட் மாஸ்டர்!

































  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஐந்து வருடங்களிற்கு முன்னரே கருணாவை கணக்குபோட்டு வைத்த பிரபாகரன்!- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 18 Rating: 5 Reviewed By: Thamil