728x90 AdSpace

<>
Latest News
Friday, 6 September 2019

கடற்படைக்கு புலிகள் வைத்த பொறி… துல்லியமாக தாக்கிய புலிகளின் ராங்கிகள்; மாட்டியது ஈ.பி.டி.பி!- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன 20

விடுதலைப்புலிகளின் ராங்கி, மோட் டார் படையணியின் ஆணி வேராக இருந்தவர் சோ. அவர் தற்கொலை செய்து கொண்டிருந்தார் என கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். 


மோட்டார் படையணியில் இருந்த பெண் போராளியொருவரை சோ காத லித்து வந்தார். காதலியும், சோவும் குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்துள்ளனா். 

சோ எவ்வளவு முக்கியமானவர் என் பதை சில சம்பவங்களின் மூலமும் குறிப் பிட்டிருந்தோம். சோவின் தாக்குதல்களில் முக்கியமானது ஈ.பி.டி.பியின் வழங்கல் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல். அதை இந்த பாகத்தில் குறிப்பி டுவதாக சொல்லியிருந்தோம்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பொருட்களை கொண்டு செல்லும் பணி யில் ஐரிஸ்மோனா என்ற கப்பல் ஈடுபட்டிருந்தது. அப்போது குடா நாட்டிற்  கான விநியோகப்பணிகள் எல்லாம் கப்பல் மூலமே நடத்தப்பட்டது. 

ஒருமுறை ஈ.பி.டி.பி அமைப்பிற்கு உண வும், துணிகளும் எடுத்துக்கொண்டு கொழு ம்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்றது. முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து கடற் புலிகள் கப்பலை மடக்கி, நாகர்கோவில் கடற்கரைக்கு கொண்டு வந்தார்கள். 

புலிகள் இந்த நடவடிக்கையை செய்தது இர ண்டு நோக்கங்களிற்காக. முதலா வது- உணவு, உடுதுணிகள் எடுக்கலாம். இது அவ்வளவு பெரிய நோக்கம் கிடையாது. உபநோக்கம். 

அதில் எடுத்த துணி, பற்றிக் வகையை ஒத்தது. நன்றாக மினுங்கும். 1996 தொட க்கத்தில் போராளிகளிற்கு இந்த துணி சேர்ட்டே வழங்கினார்கள். நன்றாக மினுங்க மினுங்க, ஒரேவிதமான சேர்ட்டுடன் அப்பொழுது போராளிகள் திரிந் தது சிலருக்கு நினைவிருக்கலாம். 

இந்த சேர்ட் புலிகளிற்கு இழப்பையும் ஏற்படுத்திய சம்பவமொன்றும் உள் ளது. அதை அடுத்த பாகத்தில் கொசுறு தகவலாக குறிப்பிடுகிறோம். ஐரிஸ் மோனாவை புலிகள் கடத்தியதற்கு இரண்டாவது காரணம்- ஒரு பொறி வைப்பதற்கு. 

கப்பல் கடத்தப்பட்டதற்கு பிரதான காரணம் இதுதான். ஐரிஸ்மோனாவை கடற்கரையில் கட்டிவைத்தால், அதை மீட்க கடற்படை முயலும். முதலில் மீட்க முயன்று, முடியாமல் போனால் தான், அதை தாக்கி அழிக்க முயற்சிப்பார்கள். 

இப்படி மீட்க முயற்சிக்க வைப்பது புலிகள் கடற்படைக்கு வைத்த பொறி! இப்ப டியொரு பொறியை அதற்கு முன்னர் புலிகள் வைத்ததில்லை. இதுதான் முதல் முயற்சி. ஆனால், நிச்சயம் இரை மாட்டும் என புலிகள் எதிர்பார்த்தார் கள். 

அதுதான் நடந்தது! 

ஐரிஸ்மோனா கப்பல் கடத்தப்பட்ட விடயம் கடற்படை தளபதியால், அப் போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கு அறிவிக்கப்பட்டது. ‘என்ன செய்தாவது ஐரிஸ்மோனாவை உடனடியாக மீட்டெடுங்கள், 

அது முடியாவிட்டால் தாக்கி அழியுங்கள். இதை செய்யாமல் எனக்கு தகவல் தந்துகொண்டிருக்கிறீர்களா?’ என கடற்படைக்கு சந்திரிகா செம டோஸ் கொடுத்தார். உடனே திருகோணமலையிலிருந்து ஒரு டோறா அதிவேக பீரங் கிப்படகு புறப்பட்டது. 

ஐரிஸ்மோனாவை மீட்க ஒரு டோறாவே போதுமென கடற்படை கணக்குப் போட்டது. டோறா படகுதான் அப்பொழுது கடற்படையிடமிருந்த கரையொர தாக்குதல் படகு. அதுதான் கரைக்கு வருமென்பதை புலிகளும் எதிர்பார்த்திருந் தனர். 

புலிகளிடம் அப்பொழுது ஒரேயொரு ராங்கிதான் இருந்தது. 1993 இல் பூநகரி யில் கைப்பற்றியிருந்தனர். வடமராட்சி கிழக் கில், நாகர்கோவிலிற்கும் குடாரப்பிற்கும் இடைப்பட்ட இடத்தில், கடற்கரையில் இரு ந்த பற்றை மறைவில் ராங்கியை நிறுத்தி, அதை சுற்றி மூன்று திசையிலும் மண் மூட்டைகள் அடுக்கி, அதன் மேல் மணலை குவித்தனர். 

கடலில் இருந்து பார்த்தால், பற்றை மறைவில் சிறிய மணல்திட்டு இருப்பதை போலத்தான் தெரியும். ஐரிஸ்மோனாவை கரையிலிருந்து ஒன்றேகால் கடல் மைலில் (ஒரு கடல்மைல் என்பது 1852 மீற்றர் ஆகும்) நிறுத்தி வைத்தி ருந்தார்கள் புலிகள். ஐரிஸ்மோனாவை கட்டியிழுத்துக் கொண்டு செல்வதே கடற்படையின் நோக்கம். 

டோறா படகு திருகோணமலையிலிருந்து புறப்பட்டதுமே நாகர்கோவிலில் இருந்த புலிகளின் ராடர் திரையில் காண்பித்தது. வெறும் குருவிப்படகுகள் இரண்டை புலிகள் ஐரிஸ்மோனாவை சுற்றிச்சுற்றி வருமாறு அனுப்பி வைத்த னர். 

நாகர்கோவில் கடற்பரப்பிற்குள் நுழைந்த டோரா, அங்கு நின்றவாறு நிலைமையை அவதானித்தது. டோரா வில் இருந்த கடற்படையினர்- ஐரிஸ் மோனா தப்பிச்செல்லாமல் புலிகளின் இரண்டு படகுகள் சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருக்கிறது என நினைத்தார் கள். 

இரண்டு படகுகளையும் மூழ்கடித்துவிட்டு, ஐரிஸ்மோனாவை இழுத்து செல் வோம் என முடிவெடுத்தார்கள். டோறா படகு தம்மை நோக்கி வருவதை கவ னித்த கடற்புலி படகுகள் இரண்டும் சும்மா சத்தவெடி வைத்தார்கள். அதாவது டோராவை தாக்குகிறார்களாம்! 

டோரா படகிலிருந்து பதில் தாக்குதல் நடத்த தொடங்கினார்கள். டோரா தாக் குதலை எதிர்கொள்ள முடியாமல் தப்பியோடுவதை போல, கடற்புலிகளின் இரண்டு படகுகளும் கரையை நோக்கி வேகமாக சென்றன. தமது தாக்குதலை சமாளிக்க முடியாமல் கடற்புலிகள் தப்பிச்செல்கிறார்கள் என டோராவிலி ருந்த கடற்படையினர் நினைத்தனர். 

உற்சாகமாக ஐரிஸ்மோனாவை நோக்கி வந்தனர். டோரா படகு, ஐரிஸ் மோனாவை நெருங்கும் சமயத்தில் கரையில் மறைவான இடத்தில் நின்ற ராங்கியிலிருந்து முதலாவது செல் அடிக்கப்பட்டது. டோரா படகு தீப்பற்றி எரிந்தது. ராங்கி செல் டோராவை தாக்கியது, கப்பல் தீப்பற்றி எரிந்தது எல்லாம் ஒரு சில நிமிடங்களிற்குள் முடிந்து விட்டது. 

இதனால், அதன் கொமியுனிகேசன் சிஸ்டம் செயலிழந்திருக்க வேண்டும். கடற்படை கொன்ரோல் ரூமிற்கு சரியான தகவல் போய் சேர்ந்திருக்க வாய்ப்பு குறைவாக இருந்திருக்க வேண்டும். 

அந்த டோராவிற்கு என்ன நடந்ததென்பதை தெரியாமல் இன்னொரு அணி வந் தது. இம்முறை எச்சரிக்கையாக நான்கு டோராக்கள் வந்திருந்தன. இரண்டு டோராக்கள் தொலைவில் நிற்க, இரண்டு ஐரிஸ்மோனாவை கட்டியிழுக்க வந் தன. 

முதலாவது டோரா ஐரிஸ்டோனா கப்பலை தொட்டுவிடும் தூரத்திற்கு வந்து விட்டது. கரையிலிருந்த ராங்கி அதை குறிவைத்து சுட்டது. அந்த டோரா வும் தீப்பற்றி எரிந்தது. மற்றைய டோரா வந்த வேகத்தில் திரும்பி ஓடத் தொடங் கியது. அதையும் குறிவைத்து அடித்தார்கள். 

தூரத்தில் வேகமாக தப்பிச்சென்று கொண்டிருந்ததால், சிறிய சேதத்துடன் தப் பிச்சென்றுவிட்டது. ராங்கிக்குள் இருந்து குறிவைத்து சுட்டவர்தான், தளபதி சோ. அன்று இரண்டு டோராவையும் அடித்து மூழ்கடித்தவர் அவர்தான்.

1996 இல் முல்லைத்தீவிலும் இதே மாதிரியான ஒரு தாக்குதலை செய்து, டோரா படகொன்றை மூழ்கடித்திருந் தார். இதன்பின்னர் தான் கரையில் புலிகள் வைக்கும் பொறியைப்பற்றி கடற்படையினர் தெரிந்து கொண்ட னர்.

புலிகள் மோட்டார் படையணியை ஆரம்பித்த போது, அதற்கு தளபதி பானு பொறுப்பாக இருந்தார். அவருக்கு அடுத்த பொறுப்பாளர் சோ. புலிகளின் ஆட்லறி படையணி வளர்ச்சியடைந் ததற்கு அவரும் முக்கிய காரணம்.

ஒருவரது முக்கியத்துவத்தை புரிய வைக்க புலிகளிற்குள் ஒரு வசனம் பாவிக்கப்பட்டது. ‘தடுக்கிவிழுந்து செத்தாலும் லெப்.கேணல்தான்’ என்பதே அந்த வசனம். களத்தில் ஏற்படும் மரணங்களை மட்டும் வீரச்சாவு என்றும், ஏனையவற்றை சாவு என்றும் புலிகள் வகைப்படுத்திய பின்னர், தர நிலை வழங்குவதிலும் சில மாறுதல்களை ஏற்படுத்தினர். 

மரணத்தின் பின்னரான தரநிலை வழங்குவதில், அவர் களத்தில் மரணிக்கி றாரா, வேறுவிதமாக மரணிக்கிறாரா என்பதும் தாக்கம் செலுத்தியது. சோ தடுக்கி விழுந்து மரணமானாலும் லெப்.கேணல் என்றுதான் பேசிக்கொண்ட னர். 

ஆனால், இறுதியில் அவரது பெயர் புலிகளின் மாவீரர் பட்டியலில் சேர்க் கப்பட வேயில்லை. காரணம்- அவரது மரணம் அப்படி. அவர் தற்கொலை செய்து கொண்டார்! 

அதுவும் காதலுக்காக. அவரும், காத லியும் கட்டியணைத்தபடி கைக் குண்டை வெடிக்க வைத்து தற் கொலை செய்துகொண்டனர். அவரது காதலியும் போராளிதான். மோட்டார் படையணியிலேயே பொறுப்பாளராக இருந்தவர். சிறிய கோயிலொன்றுக்குள் இருவரும் குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்துகொண்டனர். 

புலிகள் அவர்களை மாவீரர் பட்டியலில் இணைக்கவில்லையே தவிர, அவர்களின் காதலின் மகோன்னதத்துவத்தை புரிந்து கொண்டனர். இருவரது உடல்களையும் அருகருகேதான் புதைத்தனர். சோவிற்கு இப்படியொரு காதல் விடயம் இருந்தது பிரபாகரனிற்கு தெரியாது. 

சோ தனது காதலை இயக்கத்தில் பதிவுசெய்து வைக்கவில்லை. அவர் கடமை யுணர்வுமிக்கவர். நேரம் வரும்போது காதலை இயக்கத்திடம் சொல்லலாம் என நினைத்திருந்தார். சோவின் மரணச்செய்தியை கேட்ட பிரபாகரன் மிக வருந்தினார். 

இந்த விடயம் ஆரம்பத்திலேயே தெரிந்திருந்தால், திருமணமே செய்து வைத் திருப்பேன். அவசரப்பட்டுவிட்டார்’ என வருந்தினார். சோவின் மரணத்திற்கு காரணமாக அமைந்த சம்பவம் என்ன? மாலதி படையணி தளபதி விதுஷா தான் அந்த மரணத்திற்கு காரணமா? 

அக்கினோவை புலிகள் ஏன் விட்டுப்பிடித்தனர்? நிலாவினி விடயத்தில் நடந் தது என்ன? 

இதையெல்லாம் அடுத்த பாகத்தில் குறிப்பிடு கின்றோம். 

                                                    (தொடரும்)
அடுத்த தொடர்கள்
































கருணா படித்த பாடசாலையில் பிரபாகரன்தான் ஹெட் மாஸ்டர்!

































  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கடற்படைக்கு புலிகள் வைத்த பொறி… துல்லியமாக தாக்கிய புலிகளின் ராங்கிகள்; மாட்டியது ஈ.பி.டி.பி!- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன 20 Rating: 5 Reviewed By: Thamil