
பால்ராஜின் கட்டளையை ஏற்காத ஜெயந்தன் படையணி தளபதியொரு வரை பற்றி குறிப்பிட்டு, அவரை ஏன் புலிகள் விட்டுப்பிடித்தார்கள் என் பதற்கான காரணங்களை குறிப்பிடும் போது மட்டக்களப்பு மகளிர் படையணித் தளபதி நிலாவினி, சோ பற்றிய கிளைச் சம்பவங்கள் விரிந்து வந்துள்ளன.

ஆனால் அவர் அதை இயக்கத்தில் பதிவு செய்யவில்லை. இருவரும் பெரிய வர்கள், பொறுப்பான பதவியில் இருந்தவர்கள். அதனால் அது நாகரிகமான காதலாக இருந்தது. திருமணம் செய்யும்படி இயக்கம் சொல்லும்போது இருவ ரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற, இருவருக்கிடையிலான உடன் படிக்கையாக அது இருந்தது.
எப்பொழுதாவது இருவரும் சந்தித்து பேசிக்கொள்வார்கள். அவ்வளவுதான். இப்போதே பதிவு செய்தால், ஒரே படையணியை சேர்ந்த பொறுப்பாளர்கள் காதலிக்கிறார்கள் என, படையணிக்குள்ளேயே கதை வரலாமென சோ நினைத்திருக்கலாம்.
விடுதலைப்புலிகள் அமைப்பில் இணையும் ஒவ்வொருவரையும் பற்றிய தனிப்பட்ட விபரங்கள் பதிவு செய்யப்படும். அதில் ஒரு முக்கியமான கேள்வி- நீங்கள் யாரையாவது காதலித்திருக்கிறீர்களா? என்பது.
பின்னர் வருடாந்தம் இந்த பதிவு புதுப்பிக்கப்படும். அமைப்பில் இணைந்த பின்னர் காதலில் சிக்கினால் அடுத்த வருட பதிவில் பதிவுசெய்யலாம். சோ இதை செய்யவில்லை.
அவரது காதல் விசயம் எப்படியோ வெளியில் கசிந்து விட்டது. இது அவர்களிற்கு பெரிய அசௌகரியமாக இருந்திருக்க வேண்டும்.
ஒரே பிரிவில் இருப்பவர்கள், இரகசியமாக காதலித்த விசயம் வெளியில் வந்ததை அவர்கள் ஏன் அவ்வளவு சீரியசான பிரச்சனையாக எடுத்துக் கொண்டார்கள் என்பது தெரியவில்லை.
இந்த விசயம் வெளியில் கசிந்ததை தொடர்ந்து, மாலதி படையணி தளபதி விதுசா, சோவின் காதலியை அழைத்து சில அறிவுரைகள் சொன்னதாகவும் அப்போது ஒரு பேச்சிருந்தது. சோவின் காதலி மாலதி படையணி நிர்வா கத்திற்கு கீழ்ப்பட்டவர் அல்ல.
ஆனால் பொதுவாக மகளிர் படை யணி போராளிகள், தளபதி விதுசா வில் பெரிய மரியாதை வைத்திருந்த னர். அவர் என்ன சொன்னாலும் கேட் பார்கள். இந்த அடிப்படையில் சோ வின் காதலியை விதுசா அழைத்து பேசியிருக்கலாம்.
ஆனால் சோவின் காதலியை விதுசா அழைத்து பேசிய விசயம் போராளிகள் மட்டத்தில் வெறும் பேச்சளவில்தான் இருந்ததே தவிர, உறுதிப்படுத்தப்படவில்லை. காதல் விசயம் வெளியில் வந் தது அவமானம் என நினைத்து அவர்கள் தற்கொலை செய்து கொண்டபடி யால் புலிகளும் இச் சம்பவம் பற்றி அவ்வளவாக விசாரணை செய்யவில்லை.
அம்பகாமத்தில் இருந்த சிறிய அம்மன் ஆலயமொன்றிற்கு சென்ற இருவரும் தற்கொலை செய்யும் முடிவை எடுத்துள்ளனர். அந்த சம்பவத்தை நேரில் கண்ட சாட்சி யாருமே இல்லை. ஒரு கைக்குண்டு வெடித்த சத்தம் கேட்டு போராளிகள் அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது, இருவரும் கட்டியணைத் தபடி குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்துள்ளனா்.
இச் சம்பவம் பிரபாகரனின் காதிற்கு சென்றதும் மிகுந்த வருத்தப்பட்டார். காதல் விசயம் வெளியில் கசிந்ததை ஏன் இவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டும்? என்னிடம் சொல் லியிருந்தால் இருவருக்கும் திரு மணம் செய்து வைத்திருப்பேனே என்று தான் கூறினாரே தவிர, சோ மீது கோபப்படவில்லை.
வாழ்வில் இணைய முடியாத அந்த காதலர்களின் உடல்களை ஒன்றாக அடக் கம் செய்ய உத்தரவிட்டதும் பிரபாகரன்தான். அவர்கள் இருவரும் மாவீரர் பட்டியலில் இணைக்கப்படவில்லை. ஆனால் அருகருகாக, முழுமையான மரியாதையுடன் புலிகள் அவர்களின் உடல்களை அடக்கம் செய்தனர்.
புலிகள் அமைப்பிற்குள் பின்னாளில் ஒரு விதி ஏற்படுத்தியிருந்தார்கள். சொந்த காரணங்களினால் தற்கொலை செய்து கொள்பவர்களை மாவீரர் பட்டி யலில் இணைப்பதில்லை. துயிலுமில்லங்களிலும் விதைப்பதில்லை. அவர் களின் உடலை வீட்டிற்கே கொடுத்து விடுவார்கள்.
சோவின் சம்பவத்தை ஏன் குறிப்பிட்டோம் என்றால், புலிகளிற்குள் காதல் விசயங்களில் எப்படியான இறுக்கமான நடைமுறை இருந்தது என்பதை குறிப் பிடவே. இப்பொழுது நான் சொல்லப்போகும் விடயம் சிலருக்கு அசௌகரி யமாக இருக்கலாம்.
ஆனால் இதை அந்த களத்தில் நின்ற யாருமே மறுக்க மாட்டார்கள். மேலே சொன்ன இதே இறுக்கமான நடைமுறை கிழக்கு படையணிகளில் அவ்வள வாக இருக்கவில்லை. களமுனையில் தொடர்ச்சியாக நிற்கும் போராளிக ளிற்கு அதிகமான கட்டுப்பாடு விதிப்பது அவர்களை சோர்வடைய செய்து, களத்தை விட்டு ஓட வைக்குமென அதன் தளபதிகள் நினைத்தார்கள்.
இதனால் களமுனையில் சில விசயங்களில் கண்டும்காணாமலும் இருந்து விட்டார்கள்.
அன்பரசி படையணி தளபதி நிலாவினியும் இந்த இயல்புடையவர்தான். அவருக்கும் ஜெயந்தன் படையணி முக்கியஸ்தர்கள் சில ருக்கு மிடையில் உடல்ரீதியான தொடர் பிருப்பதாக களமுனையில் பேச்சு எழுந்தது.
இது புலிகளின் உயர்மட்டம் வரை சென்றது.
இந்த விடயத்தை விசாரணை செய்த புலனாய்வுத்துறையினர், வந்த தகவல் உண்மைதான் என்பதை உறுதி செய்தனர். இது பிரபாகரனிற்கு தெரியவந்ததும், கோபமடைந்தார்.
ஜெயசிக்குறு களமுனை தளபதியாகவும், கிழக்கு படையணிகளின் தளபதியா கவும் இருந்த கருணாவை அழைத்து, இந்த சம்பவத்தை குறிப்பிட்டு கண் டித்தார். உடனடியாக நிலாவினியை இயக்கத்தை விட்டு நீக்குமாறும் அறி வுறுத்தினார்.
ஆனால் கருணா அதை செய்யவில்லை. அன்பரசி படையணி பொறுப்பாளராக வேறு ஒருவரை நியமித்துவிட்டு, நிலாவினிக்கு பொறுப்புக்கள் வழங்காமல் விட்டு வைத்திருந்தார். பிரபாகரன் சொன்னது, நிலாவினியை வீட்டுக்கு அனுப்பும்படி.
ஆனால், கருணா அதை செய்யாமல், நிலாவினியின் பொறுப்புக்களை மட்டும் எடுத்து புதியவருக்கு வழங்கினார். இந்த விடயம் பிரபாகரனிற்கும் போனது. அவர் சத்தமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
கருணா ஏன் நிலாவினியை வீட்டுக்கு அனுப்பவில்லை?
இது கொஞ்சம் சிக்கலான விடயம்.
இது தொடர்பில் உத்தியோகபூர்வமான எந்த விசாரணையும் நடக்காததால், ஒரு தலைப்பட்சமான தகவல்கள்தான் உள்ளன. விடுதலைப்புலிகளால் நிலாவினி விசாரணை செய்யப்பட்டபோது, சில தகவல்களை குறிப்பிட்டிருந் தார்.
எனினும், சூழ்நிலை கருதி அவற்றை இப்போது குறிப்பிடாமல் தவிர்த்து விடுகிறோம். வாசகர்கள் புரிந்துகொளவார்கள் என நம்புகிறோம்.
ஓயாத அலைகள் மூன்றின்போது பால்ராஜின் கட்டளையை ஏற்க மறுத்த அக்கி னோவை பற்றிய தகவல் புலிகளின் தலைமைக்கு போனபோது, அவர் மீது உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லையென தீர்மானித்தார்கள்.
இன்னொருமுறை தலைமையின் கட் டளையை கருணா மீறும் சூழலை ஏற் படுத்தாமல் இருப்போம், கருணா விட யத்தில் விரைவாக ஒரு முடிவெடுக் கலாம் என்பதே புலிகளின் எண்ணம். கிழக்கு தளபதிகளில்- தனது சிஷ்யர் களாக, நம்பிக்கையானவர்களாக- கருணா கருதும் ஒரு சிலர் கட்டுப்பாடு களை மீறி நடப்பதும், கருணா அதை கண்டும் காணாமலுமிருப்பதையும் புலி கள் அவதானித்திருந்தனர்.
அக்கினோ விசயத்திலும், பிரச்சனையை உடைக்கும் வரை செல்லாமல், வளைந்து கொடுத்து செல்வோம், நேரம் வரும்போது கவனிப்போம் என புலி கள் நினைத்தார்கள்.
அக்கினோ விடயத்தை பெரிதுபடுத்தாததைபோல அப் போது புலிகள் நடந்து கொண்டார்கள். ஆனையிறவை வீழ்த்தும் உக்கிர சண்டையும் நடந்து கொண்டிருந்தது.
இந்த சூழலில் அக்கினோ என்ற ஒருவரின் சிக்கலை முதன்மைப்படுத்த வில்லை. ஆனால் அக்கினோ விடயம் புலிகளின் “கையாளப்பட வேண்டிய விடயங்கள்“ பட்டியலிற்கு போனது. அத்துடன், ஓயாத அலைகள் மூன்றில் அதன்பின்னர் ஜெயந்தன் படையணியை களமிறக்குவதையும் தவிர்த்துக் கொண்டனர்.
உப படையணியொன்றை போலவே பயன்படுத்தினார்கள். ஓயாத அலைகள் மூன்று, நான்கில் வடக்கை சேர்ந்த படை யணிகள்தான் மிகப்பெரும் பங்கு வகித் தன. கிழக்கு படையணிகள் உப படைய ணிகளாகவும், ஓய்விலும் இருந்தன.
புலி கள் படையணிகளிற்குள் பேதம் காட்டு வதில்லை.
ஆனால் ஜெயந்தன் படையணி விடயத்தில் இப்படியான முடிவெடுத்ததற்கு காரணமிருக்கிறது. அக்கினோ வியத்தை தளபதி தீபன் உடனடியாக கருணா விற்கு அறிவித்தார். ஆனால் கருணா அதை பெரிய விடயமாக எடுத்துக் கொள்ளவில்லை.
“அவர்கள் அப்படி நடப்பதில் தவறில்லை“ என்பதை போன்ற பதிலொன்றை யும் சொல்லியிருக்கிறார். கிழக்கு இளநிலை தளபதிகளின் முறுகலின் பின் னணி என்னவென்பதை புலிகள் சரியாக கணித்ததால், தொடர்ந்து நிலை மையை சிக்கலாக்காமல் விடுவோம் என்றுதான் ஜெயந்தன் படையணியை அவ்வளவாக களமிறக்கவில்லை.
2000 ஆம் ஆண்டில் புலிகளிற்குள் நடந்த இவ்வளவு பெரிய சிக்கலை இதுவரை பெரும்பாலானவர்கள் அறிந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் அப்பொழுது நடந்த சில சம்பவங்களை இப்பொழுது குறிப்பிட்டால், அனைத் தையும் பொருத்திப் பார்த்து நீங்கள் ஒரு முடிவிற்கு வர வாய்ப்பாக அமையும்.
ஓயாத அலைகள் 3 இன் யாழ்ப்பாண முனைக்கான சமரில் கிழக்கு படை யணிகளின் பங்கு மிக குறைவு. வடக்கை சேர்ந்தவர்கள்தான் இந்த சமரில் ஈடுபட்டனர்.
இந்த சமர் தொடங்க முன்னர் தளபதிகள் மட்டத்திலான கலந்துரையாடலில் பிரபாகரன் சொன்ன விடயத்தை கவனிக்க வேண்டும். “யாழ்ப்பாணத்திற்கான சமரை யாழ்ப்பாணத்தவர்களே செய்யட்டும். கிழ க்குப் போராளிகளை எல்லா முனைக ளிலும் களமிறக்குவது சரியல்ல.
அவர்களிற்கு தமது பிரதேசங்களை மீட்க வேண்டிய தேவையும் உள்ளது“.
ஆனையிறவை புலிகள் கைப்பற்றியதும், 2000 ஏப்ரலில். 22ம் திகதி தளபதி பானு ஆனையிறவில் புலிக்கொடியை ஏற்றினார்.

இவர்கள் சிந்திப்பதை போல “அவர் மட்டக் களப்பு, நான் யாழ்ப்பாணம்“ என சின்னத் தன மாக புலிகள் சிந்தித்ததில்லை.
அப்படியென் றால்
உண்மையில் நடந்தது என்ன?
உண்மையில் நடந்தது என்ன?
(தொடரும்)
அடுத்த தொடர்கள்
அடுத்த தொடர்கள்
18.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 18
ஐந்து வருடங்களிற்கு முன்னரே கருணாவை கணக்குபோட்டு வைத்த பிரபாகரன்!
ஐந்து வருடங்களிற்கு முன்னரே கருணாவை கணக்குபோட்டு வைத்த பிரபாகரன்!
20.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 20
கடற்படைக்கு புலிகள் வைத்த பொறி… துல்லியமாக தாக்கிய புலிகளின் ராங்கிகள்; மாட்டியது ஈ.பி.டி.பி
கடற்படைக்கு புலிகள் வைத்த பொறி… துல்லியமாக தாக்கிய புலிகளின் ராங்கிகள்; மாட்டியது ஈ.பி.டி.பி
24.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 24
புலிகளின் பகுதிக்குள் வெடித்த கிளைமோர்: பின்னணி பொட்டம்மானிற்கு தெரியும்!
புலிகளின் பகுதிக்குள் வெடித்த கிளைமோர்: பின்னணி பொட்டம்மானிற்கு தெரியும்!
30.இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 30
காதலால் தவறிய புலிகளின் கொழும்பு இலக்கு… கருணா விசயத்தில் நடந்ததும் அதுதான்!
காதலால் தவறிய புலிகளின் கொழும்பு இலக்கு… கருணா விசயத்தில் நடந்ததும் அதுதான்!
கருணா படித்த பாடசாலையில் பிரபாகரன்தான் ஹெட் மாஸ்டர்!